Saturday, June 16, 2012

தேசீய நீர்கொள்கை - 2012


ஜீவராசிகளின் வாழ்வாதாரம் பஞ்ச பூதங்கள். ஜீவராசிகளில் ஆறாம் அறிவு பெற்ற மனிதன் தன் இனத்தை அழிப்பதோடு மற்ற ஜீவராசிகளையும் அழிப்பதில் தொழிற்புரட்சிக்குப் பின் மிகச் சிறப்பாக செயல்படுகிறான். திட்டங்களையும், சட்டங்களையும் இட்டு சுரண்டுவதில் அவனுக்கு நிகர் அவனே. நிலத்தில் ஆரம்பித்த ஆசை இறுதியாக கச்சா எண்ணையிலிருந்து மாறி மூன்றாம் உலகப் போர் நீருக்காக என்று கணிக்கும் அளவிற்கு மாறியுள்ளது. பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரை தங்களது கட்டுப்பாட்டில் தக்கவைக்க பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் நிதி நிறுவனங்களுடன் கை கோர்த்து ஆர்ப்பரிக்கின்றன. ஆனால் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம் என்பதை சென்ற வாரம் வெளியான மத்திய அரிசின்  தேசீய நீர்கொள்கை 2012 பற்றி பெரும்பாலான ஊடகங்கள் மௌனம் சாதித்ததும் மக்களும் அதனைப் பற்றி கவலைப்படாததும்தான். ஒரு வாழ்வாதார உரிமையில்  ( நில உரிமையாளர்களின் நிலத்தடி நீரை அவர்களுக்கு உரியதாக்கும் Easement Acts 1882 இல்) மாற்றங்கள் கொண்டு வந்து தனியார்க்கு  தாரை வார்க்கும் முயற்சி சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இம்முறை தலை தப்பியது. ஆனால் நிச்சயம் எதிர்காலத்தில் பறிக்கப்படும் இது காலத்தின் கட்டாயம். பறிக்கப்பட்டால் தமிழகத்தின் விவசாயத்தை எண்ணிப் பாருங்கள்??? பருவ மழை ஆரம்பிக்கும் நிலையில்  மழைநீர் சேமிப்பை உங்கள் இல்லங்களிலும், பண்ணைக் குட்டைகளை உங்கள் விவசாய நிலங்களிலும் ஆரம்பியுங்கள். தண்ணீர் தட்டுப்பாடு வந்தால் சமுதாயத்தில் அமைதியின்மை தோன்றும்.

இன்றைய மழை நீர்
நாளைய குடி நீர் மற்றும் உயிர் நீர்.

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பகிர்வுக்கு நன்றி !

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

sakthi said...

""நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம் என்பதை சென்ற வாரம் வெளியான மத்திய அரிசின் “தேசீய நீர்கொள்கை 2012” பற்றி பெரும்பாலான ஊடகங்கள் மௌனம் சாதித்ததும் மக்களும் அதனைப் பற்றி கவலைப்படாததும்தான். ""

நல்ல விழிப்புணர்வு ,ஆதங்க ,எச்சரிக்கை பதிவு சார்

A.Vishnu Sankar said...

Forget about usage of water from dams that were constructed using public money. In future, our Govt will fix price for the quantum of water a farmer uses from his own open well or bore well for doing Agriculture.

Powers that be are trying to administer another slow poison to the hapless farmers who can be pacified with a Rs.1000 note every 5 years once.

தமிழ்மலர் said...

///தண்ணீர் தட்டுப்பாடு வந்தால் சமுதாயத்தில் அமைதியின்மை தோன்றும்.///

எதார்த்த உண்மை

வின்சென்ட். said...

I agree with your views. If we do not change our life style,future will be a question mark.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி திரு. சக்தி.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி திரு.ஆனந்தன்

கலாகுமரன் said...

திரு.வின்ட்சன் சார் அவர்களுக்கு,

இந்த வார தங்கள் வலைத்தளம் [ http://maravalam.blogspot.com ]
குறித்த தகவல் வெளியிடப்பட்டு சிறப்பிக்கப் பட்டுள்ளது கண்டேன், கோவை ப்ளாக்கர் குழுமத்தின் சார்பாக எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.

மேன்மேலும் தங்கள் தளம் சிறப்புற.. மழைச்சாறலின் வாழ்த்துக்களோடு...எனது வாழ்த்துகளும்.

நட்புடன்,

கலாகுமரன்

கலாகுமரன் said...

திரு.வின்ட்சன் சார் அவர்களுக்கு,

இந்த வார தங்கள் வலைத்தளம்
குறித்த தகவல் வெளியிடப்பட்டு சிறப்பிக்கப் பட்டுள்ளது கண்டேன், குழுமத்தின் சார்பாக எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.

மேன்மேலும் தங்கள் தளம் சிறப்புற.. மழைச்சாறலின் வாழ்த்துக்களோடு...எனது வாழ்த்துகளும்.

நட்புடன்,

கலாகுமரன்

வின்சென்ட். said...

திரு.கலாகுமரன்

உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும், குழுமத்தின் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி

சுந்தரவடிவேலு said...

really it s a brilliant composition.. most of the blogs are simply a scribbling pads-perhaps including mine too- but your social conscious is extremely extra-ordinary. keep it up.. congrats..

வின்சென்ட். said...

திரு.சுந்தரவடிவேலு
உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.