திரு.நிகோலாய் இவானோவிச் வாவிலோவ் |
ரஷ்யாவில் பீட்டர்ஸ்பர்க் நகரில்
அமைந்திருந்த விதை சேமிப்பு நிலையம் பெரியதும் உலகப் புகழ் பெற்றதுமாகும். திரு.நிகோலாய் இவானோவிச் வாவிலோவ் உலகின் பல்வேறு
நாடுகளிலிருந்து விதைகளை சேகரித்தார். இரண்டாம் உலக போரில் ஜெர்மனியின் நாஜிபடைகள்
பீட்டர்ஸ்பர்க் நகரை முற்றுகையிட்ட போது பல ஆயிரம் மக்கள் உணவின்றியும் நோயாலும் இறந்தனர்.
உயிரை விட்ட விஞ்ஞானிகளில் சிலர் |
சேமிப்பு நிலையத்தில் வேலை செய்த விஞ்ஞானிகளுக்கும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது.
அவர்கள் நினைத்திருந்தால் அந்த விதை தானியங்களை சமைத்து உண்டு உயிர்
வாழ்ந்திருக்கலாம். ஆனால் விதைகள் வருங்கால சந்ததியினர் பசியின்றி வாழ சாகாவரம் பெற்றவைகள்
என்பதை உணர்ந்து பசிக்கு உண்ணாமல் பாதுகாத்து உயிர் துறந்த 12 ரஷ்ய விஞ்ஞானிகளின்
தியாகம் விதைகளின் சேமிப்பு வரலாறில் ஒரு மைல் கல். நவீன விதை வங்கிகளின் தந்தை
என்றழைக்கப்படுபவர் திரு.நிகோலாய்
இவானோவிச் வாவிலோவ். வருங்கால மக்களுக்கு
உணவிற்கான ஆதாரத்தை ஏற்படுத்தியவர் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உணவின்றி 1943
ஆண்டு உயிர் துறந்தார் என்பது வரலாற்றில் ஒரு
மிகப் பெரிய சோகம். இன்று பாரம்பரிய விதைகள் சுவடே இல்லாமல் மறைந்து வரும்
வேளையில் சுமார் 2,50,000 விதை, கிழங்கு, பழங்கள் என அன்றே சேகரித்து
வைத்திருந்தார்கள் என்றால் அவர்களின் தொலைநோக்கு பார்வையும், உழைப்பும், தியாகமும்
போற்றுதற்குரியது.
4 comments:
நல்ல தக்வல் நன்றி
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
அருமையான தகவல்...நன்றி..
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
Post a Comment