Saturday, May 19, 2012

பப்பாளி - வீட்டுத் தோட்டதிற்கு ஏற்ற பழ மரம்.

 
பெயர்              : பப்பாளி
தாவரவியல் பெயர் : CARICA PAPAYA 

வெப்பமண்டல நாடுகளில் எளிதாக வளர்க்கப்படும் பழமரம். நல்ல மகசூல் தரும் 2 அல்லது 3 ஆண்டு பயிர். ஆனால் தற்சமயம் மாவுப் பூச்சி(Mealy Bug ) தாக்குதலால் இதன் விவசாயப் பரப்பு வெகுவாக குறைந்து விட்டது. வைரஸ் நோய் தாக்குதலும் உண்டு. பூர்வீகம் மெக்ஸிகோ என்றாலும் எல்லா வெப்பமண்டல நாடுகளிலும் வீட்டுத் தோட்டத்தில் விரும்பி வளர்க்கப்படுகிறது. வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் போது பழத்திற்கான வகைளை வளர்ப்பது நல்லது.
பழத்தில் மாவுப் பூச்சியின் தாக்குதல்

இலைகளிலும்  மாவுப் பூச்சியின் தாக்குதல்

 வணிக ரீதியாக வளர்க்கும் போது கவனம் தேவை காரணம் பழத்திற்கான வகைகளும், "பப்பையின்" எனப்படும் பப்பாளி பால் தரும் வகைகளும் உண்டு. பூசா (Pusa)  விவசாய கல்லூரியின் ரகங்கள், வேளாண்மை கல்லூரி, கோவையின் கோ ரகங்கள், பெங்களூரு ரகங்கள் பெண்ட்நகர் ரகங்கள் பிரபலம். தற்சமயம் தைவான்நாட்டு ரகமான ரெட்லேடி (Redlady (F-1 Hybrid)  நகர்புற மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. 10 கிராம் விதையின் விலை ரூ.1600/=க்கு மேல். பப்பாளி பால் எடுக்க கோ.2 கோ.5 மற்றும் கோ.6 ரகங்கள் ஏற்றவை. 
ஒரு அடிக்கு மேல் நீளமுள்ள பழம்

நன்கு வளர்க்க நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள மண் வேண்டும். மேலும் பப்பாளியில் ஆண்மரம், பெண்மரம் மற்றும் இருபால் மரங்கள் உண்டு. இதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இரத்த விருத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் துணை புரியும் பப்பாளி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிகுதியாக்குகிறது. மலச்சிக்கல் நீக்கும்.  பப்பாளி காயை சமைத்து உண்டு வந்தால் உடல் எடை குறையும். பழசாற்றை நன்கு முகத்தில் பூசி சில நிமிடங்கள் கழித்து கழுவ முகப் பொலிவு கிடைக்கும். பப்பாளி பால் மருந்து, அழகுசாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மாமிசம் பதப்படுத்துவதிலும் பயன்படுகிறது. பப்பாளிகாய்  டூட்டி புரூட்டி தயாரிப்பில் அதிகம் பயன்படுகிறது. பழம் ஜாம் தயாரிக்க பயன்படுகிறது.

7 comments:

இளங்கோ said...

இரண்டு மூன்று செடிகள் வைத்துள்ளோம். பக்கத்து வீடுகளில் மாவுப்பூச்சி தாக்கி உள்ளது. எங்கள் செடிகளிலும் மாவுப்பூச்சி தாக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சொன்னால் உதவியாக இருக்கும். நன்றி

வின்சென்ட். said...

முதலில் எறும்பு ஏறாமால் பார்த்துக் கொள்ளுங்கள். 3 செடிகள் மட்டுமே இருப்பதால் மேலும் உபயோகமற்ற டூத் பிரஷ் கொண்டு நீக்கிவிடுங்கள். வேப்பெண்ணையை துணியில் நனைத்து குருத்துப் பகுதியில் தேய்து விட்டால் பரவாமல் தடுக்க முடியும்.

விஜி said...

அருமையான தகவல். நன்றி வின்செண்ட் சார்

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

இளங்கோ said...

நன்றிங்க

கலாகுமரன் said...

நம்வீட்டு வடிகால் அமைப்பு சோக்பிட் அமைத்திருந்தாலும் அதன் அருகில் பப்பாளி வளர்க்கலாம். இதற்காக நாம் விதைகளை தேடி அளைய வேண்டியதில்லை. விதையுள்ள பப்பாளியை பார்த்து வாங்கலாம். நல்ல வெயில் படும் இடத்தில் நிலத்தை லேசாக கொத்தி நீர் விட்டால் நாத்து தயார். வீட்டில் வளர்க்கும் பப்பாளி தனி சுவைதான்.என்ன இளங்கோ நான் சொன்னது சரிதானே. நல்ல பதிவு. வாழ்த்துகள்.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறுவது வீட்டுத் தோட்டதிற்கு மிக்க சரியே. ஆனால் ஆண்,பெண், இருபால் மரம், குறைவான உயரத்தில் காய்க்கும் திறன், வைரஸ் நோயை தாக்குபிடிக்கும் திறன், பழத்தின் எடை,பால்தரும் வகை, பழம் தரும் வகை,பழத்தின் வெளிநிறம், பழத்தின் உள்நிறம், பழத்தின்அளவு என்று பொருளாதார நோக்கில் பயிரிடும் போது பல காரணிகளை கவனத்தில் கொண்டு விதைகளை தேட வேண்டியுள்ளது.