Monday, May 21, 2012

முள்ளு சீதா (Graviola ) புற்றுநோய்க்கு எளிய வைத்தியம் !!!!

முள்ளு சீதா (Graviola )

பெயர்                : முள்ளு சீதா
தாவரவியல் பெயர்   : Annona muricata
மற்ற பெயர்கள்      :  Graviola
                       Soursop,
                       Brazilian Paw Paw,
                       Guanabana.
மாற்று மருத்துவத்தில் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தவுடன் நிறைய உபயோகமான செய்திகள் வலைதளங்களின் மூலம் பிரபலமாகி வருகிறது. தற்சமயம் முகநூலில் மிகப் பிரபலம் ஃக்ரவயோலா என்று அழைக்கப்படும் முள்ளு சீதா.  அமேசான் காடுகளில் இந்த பழத்தை பழங்குடியினர் பல்வேறு நோய்களை குணப்படுத்த உபயோகித்தனர். ஒரு பன்னாட்டு நிறுவனம் மில்லியன் டாலர்களில் பொருட்செலவு செய்து புற்றுநோய்க்கு இப்பழத்தை உபயோகப்படுத்தி தீர்வு கண்டதாகவும் பின் அதனை காப்புரிமை பெற முடியாததால் ஆய்வை விரிவுபடுத்தாமல் கைவிட்டதாகவும் பின்பு ஆய்வு செய்த விஞ்ஞானிகளில் ஒருவர் இதனை வெளியுலகிற்கு அறிவித்ததாகவும் ஒரு மாற்று மருத்துவ நூலில் படித்தேன். கர்ப்பகாலத்தில் இதனை அருந்தக் கூடாது என்கிறார்கள். தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள மருத்துவ மரமென்றாலும் சிலர் இதனை அதிகம் சாப்பிடக்கூடாது பக்க விளைவுகள் உண்டு என்கிறார்கள்.
பழத்தின் நீள் வெட்டுத் தோற்றம்

இருப்பினும் நவீன மருத்துவ முறையில் கிமோ தெரப்பி என்னும் சிகிச்சைக்கு பின் உடனடி பக்க விளைவுகள் மற்றும் செலவு இவைகளை கணக்கிட்டால் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள முள்ளு சீதா நன்று  என்றே தோன்றுகிறது.
நன்கு வளர்ந்துள்ள முள்ளு சீதா
இம்மரம் அமேசான் காடுகளில் வளரும் ஒரு சிறுமரம். இதன் பட்டை, இலை, பழம் எல்லாவற்றையும் மக்கள் நோய்களை குணமாக்க பயன்படுத்துகின்றனர். பழங்கள் உற்பத்தி குறைவு என்பதாலும் இலைகளிலும் நோய் தீர்க்கும் குணம் இருப்பதால் இதனை பதப்படுத்தி டீ போன்று அருந்துகின்றனர். மற்ற நாடுகளில் வியாபார ரீதியாக விற்பனையில் உள்ளது.
வீட்டில் நன்கு வளர ஆரம்பித்துள்ள முள்ளுசீதா

தற்போதைய உணவு பழக்கம் அளவிற்கு மீறிய இரசாயன மருந்து மற்றும் உரங்கள் இவை புற்று நோய்க்கு வழிவகுக்கின்றது. இதனை குறைப்பதற்கு மாற்று மருத்துவத்தில் வழி உண்டு என்பதை பரம்பரை ஞானமும் விஞ்ஞானமும் சொல்கிறது. எடுத்துக் கொள்வதும், விட்டுவிடுவதும் அவரவர் கையில் உள்ளது.
பதப்படுத்திய ஃக்ரேவையோலா டீ



6 comments:

செ.லீ.க said...

அரிய வகைகளை பற்றி அதன் வளர்ப்பு பற்றியும் நீங்கள் பதிவிட்டது மிகவும் பயனுள்ள கட்டுரை தோழர்...நன்றிகள் பல...நமது விஞ்ஞானிகள் இதை ஆய்வுப்படுத்திய சம்பவங்கள் உண்டா தோழர்?!!!!

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் இதனை பற்றி ஆராய்வதாக அறிந்தேன்.

விஜி said...

நல்ல பதிவு

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

முதல் முறையாக உங்கள் வலைப்பதிவைப் இப்பொழுது தான் பார்த்தேன். 360 பதிவுகளுக்கு மேல் கொண்டுள்ள, விவசாயம் சார்ந்த ஒரு வலைப்பதிவை பார்க்க மிகவும் சந்தோஷம். பதிவுகள் தகுந்த படங்களுடம் இடம் பெற்றிரு்பது, பயனுடையதாக இருக்கிறது. தளராது தொடருங்கள் தங்கள் சேவையை வர்ழ்த்துக்க்கள்.

வின்சென்ட். said...

உஙகள் வருகைக்கும் வர்ழ்த்துகளுக்கும் நன்றி.