Wednesday, February 29, 2012

தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகத்தின் மேம்படுத்தப்பட்ட அடுப்பு

மீண்டும் ஒரு டேங்கர் (சமையல் எரிவாயு) லாரிகளின் வேலை நிறுத்தம் துவங்கப்பட உள்ள நிலையில் சாமானியர்களின் இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும் நேரம். கிராமங்களில் கூட சமையல் எரிவாயு பிரபலமான நிலையில் பாதிப்பு நிச்சயம் இருக்கும். மின்பற்றாக் குறையுள்ள தமிழகத்தில் மின்அடுப்பு வகைகள் பலனளிக்கப் போவதில்லை. தீர்வு ??? சோதித்துப் பார்த்ததில் தமிழ்நாடு விவசாய பல்கலைகழகத்தின்  மேம்படுத்தப்பட்ட அடுப்பு சற்று ஆறுதல் தருவதாக உள்ளது

இருசுவர்கள் கொண்ட மண் அடுப்பு. வெளிச்சுவர் துவாரமின்றியும் உள்சுவர் மற்றும் கீழ்பகுதி துவாரங்களுடன் இருப்பதால் சுவர்களின் இடைவெளியில் காற்று உட்புகுந்து எரியும் பகுதிக்கு வருவதால் எரியும் தன்மை பாதிப்படைவதில்லை. விறகு முழுமையாக எரிபடுவதால் அதிக வெப்பமும், குறைந்த அளவு விறகும் இருந்தால் போதும் சமையலை முடித்துவிடலாம். சாம்பலை செடிகளுக்கு தூவி பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். எளிய வாழ்விற்கு இது உதவும் என்று எண்ணுகிறேன்.






மேலும் விபரங்களுக்கு

தமிழ்நாடு விவசாய பல்கலைகழகம்,
கோவை.
---------------------------------
திரு.மதனகோபால்
அலைபேசி எண் : 93453 57803, 98940 95499

16 comments:

T.Sivaraman said...

Dear Sir, With the proposed rationing of LPG cylinders these alternatives are welcome. Valuable information.

Adding a steel grill on top will enable the user to use small utensils also.

MURUGHES said...

அருமை !

வீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818.

குடந்தை அன்புமணி said...

இத்தகைய அடுப்புகளை கிராமப்புறங்களில் மட்டுமே பயன்படுத்தலாம். சென்னை போன்ற பகுதிகளில் வாடகைக்கு குடியிருக்கும் வீடுகளில் பயன்படுத்த அனுமதியில்லை. எங்களைப் போன்றவர்களுக்கு என்னதான் தீர்வோ?

வின்சென்ட். said...

திரு.சிவராமன்

உங்கள் வருகைக்கும்,கருத்துகளுக்கும், பயனுள்ள ஆலோசனைக்கும் மிக்க நன்றி.

வின்சென்ட். said...

திரு.முருகேஷ்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

வின்சென்ட். said...

திரு. குடந்தை அன்புமணி

உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் கூறவதுபோல் கிராமப்புறங்களுக்குத்தான் ஏற்றது. மேலும் மின்தடை கிராமப்புறங்களில் 8 மணிநேரத்திற்கு மேல் உள்ளது. சென்னைப்பகுதிகளில் 2 மணிநேரம் மட்டுமே.

Kousalya Raj said...

நல்ல வடிவமைப்பு. வெப்பம் பாத்திரம் முழுவதும் நன்றாகவே பரவும், சமையலும் விரைவாக முடிந்துவிடும்.

இதன் விலை, எங்கெல்லாம் கிடைக்கும் என்ற விவரங்கள் இருப்பின் நல்லது.

எனக்கு தெரிந்தவர்களிடம் தெரிவிக்கிறேன். கிராமம் என்றில்லை, நகரத்தில் தனி வீட்டில் வசிப்பவர்கள் கூட பயன்படுத்த முடியும்.

இதை பற்றி தெரியபடுத்தியமைக்கும் அலைபேசி எண் கொடுத்தமைக்கு நன்றிகள்.

MADHAN said...

அலைபேசி எண் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தயவுசெய்து கீழே குறிப்பிட்டுள்ளபடி திருத்தம் செய்யவும்.
9345357803 9894095499

வின்சென்ட். said...

திருமதி.கௌசல்யா

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. விலை ரூ.200/= கோவையில் மட்டுமே கிடைகிறது.

வின்சென்ட். said...

திரு.மதன்


உங்கள் வருகைக்கும் தவறினை சுட்டி காட்டியதற்கும் மிக்க நன்றி. எண் சரிசெய்யப்பட்டுள்ளது.

MADHAN said...

ஹரப்பா மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியில் அவர்களின் நாகரிக வாழ்க்கையை கண்டுபிடிப்பதில் அங்கு புதையுண்ட மண்பாண்டங்கள் பெரும்பங்கு வகித்தன.
நகரங்களிலும் வீடுகளில் தென்னை மரம் வளர்க்கப்படுகிறது. ஆனால் அவற்றின் காய்ந்த கழிவுகள் தெருவோரங்களிலும் சாக்கடையிலும் தான் வீசப்படுகிறது. அதற்கு பதிலாக இந்த அடுப்பை வெந்நீர் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாமே!

மக்களின் வேலை நேரம் அதிகரித்துவிட்டது. ஆதலால் துரித உணவை போன்று தங்களின் தேவையை துரிதமாக செய்து தரும் மின் சாதனங்களையும் இயந்திரங்களையுமே மக்கள் நாடுகின்றனர்.
அதேபோல் மக்களின் பொருளாதார நிலையும் வாழ்க்கைத்தரமும் உயரும் போது அதற்கு தகுந்தாற்போல்தான் தங்கள் வீட்டு உபயோகப்பொருள்களை தேர்வு செய்கின்றனர். இதுவே நிதற்சனமான உண்மை.

மனிதனின் இறுதிச்சடங்கில் மண்சட்டி உடைக்கும் சம்பிரதாயம் ஒன்று இல்லை என்று சொன்னால் மண்சட்டிக்கு எப்பொழுதோ இந்த சமுதாயம் விடை கொடுத்திருக்கும்.

நகரங்களில் பெரும்பாலான மக்கள் தைத்திருநாளில் பொங்கல் வைக்க பயன்படுத்துவது எரிவாயு அடுப்பும் எவர் சில்வர் பாத்திரமும் தான்.

வின்சென்ட். said...

திரு. மதன்

உங்கள் கருத்துகள் அனைத்தும் உண்மையே. ஆனால் நடைமுறை வாழ்கையில் தட்டுப்பாடு வரும் போதுதான் சில எளிய முறைகளை நினைத்துப் பார்க்க வைக்கப்படுகிறோம்.

suneel krishnan said...

எளிமையான வடிவம், இத்தகைய மாற்று முறைகளை நோக்கி பயணம் செய்ய வேண்டிய காலம் நெருங்கிவிட்டது..

வின்சென்ட். said...

Dr. சுனில் கிருஷ்ணன்

உங்கள் வருகைக்கும்,கருத்துகளுக்கும், மிக்க நன்றி.

Rajeswari said...

Sir, just a clarification.. How much is the reduction in emission of toxic substances by this improved cook stove? Is it possible for me to get the background research details that were undertaken for this wonderful initiative?

வின்சென்ட். said...

Madam

I have not measured exactly may be up to 50% reduction depends upon the wood. For other details kindly contact TNAU.