Monday, February 27, 2012

மரம் வளர்ப்போர் விழா 2012

 மரம் வளர்ப்போர் விழா 2012 - மாண்புமிகு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சுழல் அமைச்சர் திருமதி. ஜெயந்தி நடராஜன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. தானேபுயலால் பாதிக்கப்பட்ட மர விவசாயிகளுக்கு உதவ சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். மேலும்  வனமரபியல் மற்றும் இந்திய மரப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சி நூல்கள் மற்றும்  இரு உயிர் உரங்களை வெளியிட்டார். இதனை தொடர்ந்து விஞ்ஞானிகள் தங்களின் உழைப்பை  படவிளக்கங்களுடன் கூறினார்கள். இன்னும் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டால் விவசாயிகள் எளிதாக புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். சவுக்கு மர சாகுபடி மூலம் மின்உற்பத்தி படவிளக்கம் இன்றைய தமிழகத்தின் அத்தியாவசிய தேவையை உணர்த்தியது. மரவிவசாயிகளும், தொழில் முனைவோரும் அமர்ந்து தங்களுக்குள் முடிவெடுத்து செயல்படுத்தவேண்டிய தருணம் இது

விவசாயிகளின் அமர்வில் மரம், மூங்கில் இவற்றின் வளர்ப்பு மற்றும் சந்தைபடுத்துவதிலுள்ள பிரச்சனைகள் உணர்ச்சிவயப்பட்டு அழுகையின் விளிம்பிற்கு சென்றது மனத்தை உருக்குவதாக இருந்தது. ஆனால் அதிகாரிகள் அதற்கான தீர்வுகளை உடனே கூறியது ஆறுதலாக இருந்தது.
ஒவ்வொரு வருடமும் தமிழகத்தை புயல் தாக்குவது வாடிக்கையான நிலையில் அலையாத்திக் காடுகளின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடத்தில் சென்றடைய வேண்டியது அவசியமாகிறது. வரும் வருடங்களில் அது நிறைவேறும் என்று எண்ணுகிறேன்.



தூரத்திலிருந்தே மரத்தை அளக்கும் கருவி பச்சை புள்ளிகளை கவனிக்கவும்.

வழக்கம் போல் கண்காட்சி பயனுள்ளதாக இருந்தது. இம்முறை மூங்கிலில் மதிப்புக் கூட்டிய வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்கள் மனதைக் கவர்ந்தது. மரத்தின் தரம் மற்றும் பருமனை அளக்க உதவும் கருவிகள் பயனுள்ளதாக இருந்தது.
காகிதம், ஒட்டுப்பலகை, தீக்குச்சி, பென்சில், எரிசக்தி மூலம் மின்சாரம், பயோ-டீசல் என்று தொழிற்சாலைகளுக்கு தேவையான கச்சாப்பொருள் மரம்தான்  என்று கூறினால் அது மிகையில்லை.

7 comments:

குடந்தை அன்புமணி said...

இயற்கையை இயற்கையோடு இணைந்து வெல்வோம்...

Rathinasabapathy said...

Sir,

Very useful information and the photos too.

வின்சென்ட். said...

திரு.குடந்தை அன்புமணி
திரு. இரத்தினசபாபதி


உஙள் இருவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

விவசாயிகள் துயர் துடைக்கப்படுமென நம்புவோம்.

கைவினைப் பொருட்கள் வெகு அழகு.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

T.Sivaraman said...

Dear Sir,

Thanks for the nice photos and info. on conference.

Can you please provide following info.: Need Sandal, Red Sander and Bamboo saplings. Any info. on govt. office / pvt. farm where I can get above saplings at competitive prices?
Best Wishes,

வின்சென்ட். said...

திருமதி.ராமலக்ஷ்மி

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

வின்சென்ட். said...

திரு. சிவராமன்.

தங்களின் வருகைக்கு நன்றி. வனதுறையின் விரிவாக்க மையங்கள் ஒவ்வோரு மாவட்டத்திலும் உண்டு. விலையும்,சரியான நாற்றுக்களும் கிடைக்கும்.