Tuesday, August 23, 2011

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.


திரு. அரவிந்தன் தனது செடிகளுக்கு முன்.
செழிப்பாக வளர்ந்துள்ள செடிகள்
 ஒரு நல்ல  காரியத்தை செய்யாமல் இருப்பதற்கு நம்மில் அநேகர் பல காரணங்களை கண்டு பிடித்து செய்யாமல் இருப்போம். வெகு சிலரே  பல்வேறு காரணங்கள் செய்யமுடியாமல் போவதற்கு இருந்தாலும் அவற்றை ஒதுக்கிவிட்டு காரியத்தை சாதிப்பார்கள்.  இரண்டாம் வகையைச் சார்ந்தவர் திரு. G.A. அரவிந்தன். 68 வயதாகும் அவர் வீட்டுத் தோட்டம் போட்டிருக்கிறார். கோவை 100 அடி சாலையிலிருந்து நவ இந்தியா சந்திப்பு வரை செல்லும் சாலையை விரிவு செய்ததால் இவரது வீட்டு மனையின்  பரப்பு குறைந்தது ஆனால் என்ன? தோட்டப் பிரியரான அவர் சாலையின் ஓரத்திலேயே சாக்குப் பைகளில் மண் நிரப்பி சேனைக் கிழங்கு, தக்காளி, மிளகாய் என வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை வளர்க்கிறார். இடம் இல்லை, சாலை ஓரம் பாதுகாப்பு இல்லை, மண் பரப்பு இல்லை ஆனாலும் மனம் இருப்பதால் அவரால் செய்யமுடிகிறது. இடம் இருக்கும் மனிதரிடம் மனம் (தோட்டம் இட) இருப்பதில்லை, மனம் இருக்கும் மனிதரிடம் இடம் இருப்பதில்லை.

6 comments:

சத்ரியன் said...

// இடம் இருக்கும் மனிதரிடம் மனம் (தோட்டம் இட) இருப்பதில்லை, மனம் இருக்கும் மனிதரிடம் இடம் இருப்பதில்லை//

உண்மைதான்.

வின்சென்ட். said...

திரு.சத்ரியன்

உங்கள் வருகைக்குமிக்க நன்றி.

Rathinasabapathy said...

I can encourage him by giving some plants, seeds etc.,

வின்சென்ட். said...

Sir

Thank you for visit to Blog. Last week I gave him some seeds. Hope we can encourage his Hobby and supply grow Bags.

செந்தில்குமார் said...

இந்த மாதிரி எல்லோரும் செய்தால் நாட்டில் உள்ள காய்கறி விலை உயர்வுக்கு நல்ல தீர்வாக அமையும்

வின்சென்ட். said...

திரு.செந்தில்குமார்

உங்கள் வருகைக்குமிக்க நன்றி. நிச்சயம்
காய்கறி விலை உயர்வுக்கு நல்ல தீர்வாக அமையும் என்பதுடன் சுற்றுச் சுழல் பாதுகாக்கப்படும்.