Saturday, August 6, 2011

ஹிரோஷிமாவும், ஃபுகோஷிமாவும்.

இன்று ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் 66 வது நினைவு தினம். முதலில் அவர்களுக்கு நம் அஞ்சலி. அழிப்பதிற்கு இல்லை ஆக்கப்பூர்வமாக அதனை செயல்படுத்த முடியும் என வல்லரசுகள் உலகை நம்ப வைத்துக் கொண்டிருந்த வேளையில் ஃபுகோஷிமா அணு உலை விபத்து நம்மை எச்சரித்தது. நிறைய நாடுகள் மறுபரிசீலனை செய்து கைவிட நம் அரசு முனைப்புடன் செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. இயற்கையின் மாபெரும் ஆற்றலை மனிதன் தன்வசப்படுத்த முடியும் என நமது ஆட்சியாளர்களை வல்லரசுகள் நம்ப வைப்பதும் அதனை நம்பி ஆட்சியாளர்கள் முடிவெடுப்பதும் துரதிஷ்டமானது. வருங்காலத்தில் இதுபோன்ற அஞ்சலிகளை நமக்காக மற்றவர்கள் எடுக்கவேண்டி வரலாம்.


கீழ் கண்ட தொடர்புகளையும் படியுங்கள்

அச்சம் தரும் அணு உலைகள்     (1)
அச்சம் தரும் அணு உலைகள்     (2)
அச்சம் தரும் அணு உலைகள்     (3)

4 comments:

சாந்தி மாரியப்பன் said...

ரொம்பவே பயங்கரமா இருக்கு. புல் பூண்டு கூட முளைக்காத இடமா, அழிவை ஏற்படுத்தும் அணுகுண்டு பயங்கரம்..

settaikkaran said...

இரண்டாம் உலகப்போர் காலம் தொடங்கி இன்றுவரை, எது ஆக்கம், எது அழிவு என்ற குழப்பம் நீடிக்கிறது போலும்.

பனித்துளி சங்கர் said...

எத்தனை இதயங்களுக்கு இந்த துன்பம் இன்னும் ஞாபாகத்தில் இருக்கும் என்று தெரியவில்லை . இன்னும் ஞாபகங்களில் நிழலாடுகிறது . எனது ஆழ்ந்த வருத்தங்கள்

வின்சென்ட். said...

திருமதி.அமைதிச்சாரல்,
திரு.சேட்டைக்காரன்,
திரு.பனித்துளி சங்கர்,

மூவரின் வருகைக்கும் மிக்க நன்றி. அணுவின் கதிர் வீச்சுத்தான் பிரச்சனைக்குரியது.எப்படி நமது அரசு ஒத்துக் கொண்டார்கள் என்பதுதான் புதிர்.