Wednesday, May 26, 2010

மாணவர்களின் விண்ணப்பமும், வெட்டுக்கு தப்பிய 55 வருட மரமும்.

வெட்டப்படவிருந்த 55 வருட அரச மரம்.

கோவை அவினாசி பிரதான சாலையிலிருந்து 200 மீ தூரத்தில் மசாக்காளி பாளையம் செல்லும் சாலையில் 55 வருட பெரிய அரசமரம் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட இருந்தது. இதனை கேள்விப்பட்ட மாணவர் திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும் குறை தீர்க்கும் நாளன்று (29-03-2010 ) மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அம்மரத்தை வெட்ட வேண்டாம் என விண்ணப்பம் செய்தனர். அவர்களின் வேண்டுகோள் ஏற்கபட்டு இன்று வரை மரம் வெட்டப்படவில்லை. “சலசல”வென்ற சத்ததுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
அரச இலைகள்.

விஞ்ஞானப் பெயர் : Ficus Religiosa
புனிதமான மரம்.
மரங்களின் அரசன்.
புத்தருக்கு ஞானம் கிடைத்தது இந்த மரத்தடியில்தான் என்பது வரலாறு.
கோவை மாநகரின் கற்பக விருட்சம்,

மாணவர் திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும்; குழந்தைகள் தானே என்று இல்லாமல் இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவர்களது குறிகோளை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரும் போற்றுதலுக்கு உரியவர்கள்.
தந்தை திரு. ப. தண்டபாணியுடன் மாணவர் திரு. த. அருண்குமார்

பணம் மட்டுமே குறிகோளாகக் கொண்டு பெரிய வனங்களையே சூறையாடும் கும்பல்களிடையே திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும் தக்க சமயத்தில் இறங்கி இந்த இளம் வயதில் விடிவெள்ளி நட்சத்திரங்களாக இயற்கையை பாதுகாக்க இருப்பது மனதிற்கு ஆறுதல் தருகிறது.
மாணவர் திரு. அருண்குமாரின் கடித்ததின் நகலை இங்கே தருகிறேன்.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம் ஐயா, எங்கள் பகுதியில் உள்ள 55 ஆண்டுகளாக உள்ள அரசமரத்தை வெட்டக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.

நான் உங்களுக்கு நிழல் தருகிறேன், சுவாசக் காற்று தருகிறேன் பிறகு ஏன் என்னை அழிக்க நினைக்கிறீர்கள். என்னை அழித்துவிட்டு வெயிலில் வாடி அழிந்துவிடாதீர்கள். என்னை அழித்து விட்டால் என் மேல் கூடுகட்டி வாழும் பறவைகளுக்கு என்ன பதில் சொல்வேன். நான் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்து உங்களுக்கு நான் சுத்தமான காற்றை தருகிறேன். ஆகையால் என்னை அழிக்காமல் காத்திடவும்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள குழந்தைகள்,
த. அருண்குமார்.

இடம்: பீளமேடு.
நாள் : 29-03-10

உங்களது வாழ்த்துக்களை திரு. அருண்குமாருக்கு தெரிவிக்கவிக்க விரும்பினால் அவரது தந்தையின் அலைபேசி எண் தருகிறேன். வாழ்த்தி விடுங்கள். ஊக்கமும் உற்சாகமும் அக்குழந்தைகளை மேலும் பல அரிய செயல்கள் செய்ய உதவும்.

ப. தண்டபாணி : 94420-15060

25 comments:

ராமலக்ஷ்மி said...

சிறுவன் அருண்குமாருக்கு என் வாழ்த்துக்கள்.

செவிமடுத்த மாவட்ட ஆட்சியாளருக்கு என் பாராட்டுக்கள்.

பகிர்வுக்கு நன்றி.

வின்சென்ட். said...

திருமதி. ராமலக்ஷ்மி

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

settaikkaran said...

அந்த மாணவனைப் பாராட்டுவது ஒரு புறம், தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வை உருவாக்கும் இடுகைகளை அளித்து வரும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நீச்சல்காரன் said...

உருக்கமான கடிதம்.
அருண்குமாருக்கு என் வாழ்த்துக்கள்

Lingesh said...

இது பாராட்டுகளைத்தாண்டி போற்றுதலுக்குறியது. தயவு செய்து எனது வாழ்துக்களை அந்த பெரிய உள்ளங்களுக்குத் தெரிவித்துவிடுங்கள்.

seethag said...

கண்டிப்பாக ஃபோன் செய்கிறேன், வின்செந்த் சர்.

அ.முத்து பிரகாஷ் said...

மாணவர் அருண் குமார் என்றதும் கல்லூரி அல்லது மேனிலை பள்ளி மாணவன் என நினைத்தேன் ...
அன்பு தம்பி ...
உன் போல் நல்லார் சிலர் இருப்பின் எங்கள் அனைவருக்கும் பெய்யென பெய்யும் மழை ...
பாதம் பணிகிறேன் ...

அருண் குமாரை அறியத் தந்த தோழர் வின்சென்ட்டிற்கு நன்றிகள் பல !

kumar v said...

Dear Vincent Sir,

This is a very inspiring article. My salutes to Arunkumar and his friends. Thanks for letting everyone know about this youung student and getting him the credit he deserves.

வின்சென்ட். said...

திரு.சேட்டைக்காரன்
திரு.நீச்சல்காரன்
திரு.லிங்கேஷ்
திருமதி. சீதா
திரு.நியோ
திரு.குமார் விக்டர்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் அன்பின் விசாரிப்புக்களை உங்கள் சார்பாக அவர்களிடம் தெரிவித்துவிட்டேன்.

Paleo God said...

செல்வன் அருண்குமாருக்கும், மாவட்ட ஆட்சியாளருக்கும், பகிர்ந்த உங்களுக்கும் மிக்க நன்றி!

வின்சென்ட். said...

திரு. ஷங்கர்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

ulavananin ulakam said...

weldone

வின்சென்ட். said...

Sri. Senkandan

Thank you for visiting the blog.

cheena (சீனா) said...

அன்பின் வின்செண்ட்

அருமை அருண் குமாரின் நல்ல உள்ளத்திற்கு நல்வாழ்த்துகள். இச்சிறு வயதில் பெரு முயற்சி எடுத்து ஒரு மரத்தைக் காப்பாற்றியது பாராட்டுக்குரியது.

பகிர்வினிற்கு நன்றி வின்செண்ட்
நல்வாழ்த்துகள் வின்செண்ட்
நட்புடன் சீனா

வின்சென்ட். said...

திரு.cheena (சீனா)

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

a said...

நல்ல விசயம் சார்........ பகிர்விற்க்கு நன்றி...

வின்சென்ட். said...

திரு. யோகேஷ்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

மதுரை சரவணன் said...

அருண்போன்ற மாணவர்களை இக்கல்வி துறை உருவாக்க வேண்டும் . இளம் வயதில் நல்ல எண்ணம் கொண்ட அருணை வாழ்த்துக்கிறேன். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

எஸ் சம்பத் said...

நல்ல பதிவரை அறிமுகப்படுத்திய வலைச்சரம் இவ்வார ஆசிரியர் ஈரோடு கதிர், இந்த பதிவிற்கு சொந்தமான திரு வின்சென்ட், மாணவன் அருண் குமார் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

வின்சென்ட். said...
This comment has been removed by the author.
வின்சென்ட். said...

திரு.மதுரை சரவணன்
திரு. சம்பத்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. நாம் நிறைய அருண்குமார்களை உருவாக்கவேண்டும். என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்திய திரு. ஈரோடு கதிர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

Anonymous said...

eangalai ookapduthiya anaivarukum nandrikal pala.HAPPY NEW YEAR

E-mail:arun_sosweet@yahoo.com

வின்சென்ட். said...

திரு. அருண்
புத்தாண்டு வாழ்த்துகள். மேலும் பல நல்ல காரியங்கள் செய்ய வாழ்த்துக்கள்.

டக்கால்டி said...

பாராட்டத்தக்க விஷயம்...நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய விஷயமும் கூட..

வின்சென்ட். said...

திரு.டக்கால்டி

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி