Sunday, May 2, 2010

கீரையே நம் இரை (உணவு) --- (2)

பிரபல ஆங்கில கார்டூன் தொடரான Popeye the Sailor இல் அந்த மாலுமிக்கு “மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி” இந்த “ஸ்பினாச்” கீரையிலிருந்து கிடைப்பதாக காண்பிப்பார்கள்.

சில குறிப்பிட்ட கீரை வகைகளின் பொதுவான பயன்பாட்டுக் குறிப்புகள்:-

அரைக்கீரை:-

தாதுவை விருத்தி செய்யும். இரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத சம்பந்தமான வியாதி தணிக்கும். நரம்பு வலி, பிடரிவலியை எளிதில் போக்கவல்லது.

அகத்திக்கீரை:-

பித்தம் குணமாகும், ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும். இது மலத்தை இளக்கி வெளியேற்றும். சிறிதளவு வாயுவை உண்டு பண்ணும். உயிர்ச்சத்து ‘ஏ’ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியையும், கண்பார்வை தெளிவையும் எலும்புகளுக்கும் பலம் கொடுக்கும்.

ஆரைக்கீரை:-

அளவு மீறிப் போகும் சிறுநீரை கட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வரும். பித்தம் சம்பந்தமான கோளாறுகளை போக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை (பச்சை):-

மேனி தங்கத்தகடு போல் பிரகாசிக்க தினசரி இக்கீரையை சூப் வைத்து நெய் சேர்த்து அருந்த உடலும் வலுப்பெறும்.

மிளகு தக்காளி கீரை:-

வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி உள்ளது. பருப்பும், தேங்காயும் போட்டு காரம் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டால் குடல்புண், வாய்ப்புண் ஆறும்.

முளைக்கீரை:-

அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இளமையில் தலைமுறை நரைக்காமல் இருக்கும்.

கறிவேப்பிலை:-

நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் உடலின் இளமைத்தோற்றம் நிலைத்துநிற்கும்.

பொன்னாங்கண்ணி கீரை(சிவப்பு):-

இக்கீரையை பூண்டு சேர்த்து வதக்கி சாப்பாட்டுடன் சாப்பிட்டு வந்தால் மூலநோய் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணமாகும். வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.

புதினா கீரை:-

இரும்புச்சத்து இருப்பதால் இரத்தத்தை சுத்தம் செய்து புதிய இரத்தத்தை உண்டு பண்ணும். பற்களை கெட்டிப்படுத்தும், எலும்புகளை வளரச் செய்யும். புதினாவை நசுக்கி போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். 1/2 சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும்.

பசலைக்கீரை:-

நீர் கடுப்பு, வெள்ளை வெட்டை நீங்கும்.கொத்தமல்லிக்கீரை:- வறுத்த கொத்தமல்லியை நாலுமணி நேரம் ஊறவைத்து அந்நீரை குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்து வந்தால் வயிற்று வலி, தாகம், உள்சூடு எல்லாம் சரியாகும்.

-இரா.ஜென்னி இராஜசேகர் Source : தீக்கதீர்/கோவை/17-03-2010

2 comments:

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////////10 அடி நீள பையில் காய்ந்த இலைகள் தென்னை நார் கழிவு + மண்புழு உரம் + வேம் ஆகியவற்றை நிரப்பி வைக்கப்பட்டுள்ளது./////////

அனைவரும் சற்று யோசிக்கவேண்டிய பதிவு . இதுபோன்ற விழிப்புணர்வு பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள் . பகிர்வுக்கு நன்றி !

வின்சென்ட். said...

திரு. சங்கர்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
"அனைவரும் சற்று யோசிக்கவேண்டிய பதிவு . இதுபோன்ற விழிப்புணர்வு பதிவுகளை"

நீங்கள் நினைப்பது போன்று மக்கள் இல்லை என்பது அனுபவம். நெருக்கடி வரும் போது மனம் மாறலாம். இன்றைக்கு மதிப்பு பணம். பணம் மாத்திரமே. எல்லாவற்றையும் விலைக்கு வாங்கமுடியும் என்று எண்ணுகிறார்கள்.