Saturday, April 10, 2010

நீர்இன்று அமையாது ............

இயற்கை தன்னை சமநிலைபடுத்திக் கொள்ள பஞ்சபூதங்களில் ஒன்றை பயன்படுத்தி சமநிலைபடுத்திக் கொள்ளும். “காட்டுத் தீ ” இதில் ஒன்று. முன்பு இயற்கையாக நடந்ததை இன்று மனித இனம் தனது நிலத் தேவைக்காகவும், பொறுப்பற்ற சுற்றுலா செய்கைகளால் செயற்கையாக காட்டுத் தீயை ஏற்படுத்தி இயற்கை சமநிலையை கெடுத்து வருகிறோம்.

பசுமை சுற்றுலா ( Eco Tourism ) என்ற பெயரில் இளம் தலைமுறை கண்டிப்பாக இயற்கை பகுதிகளை பார்க்கவேண்டும், இயற்கையை புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் மிக சொற்ப அளவில் சிலர் வனபகுதியில் புகைபிடிப்பது, நெருப்பிட்டு சமைத்துவிட்டு அணைத்து மண் இட்டு மூடாமல் சென்றுவிடுவது, சிலர் “த்ரில்” வேண்டும் என்பதற்காக நெருப்பு வைப்பதும் (எனது பழைய பதிவை காணவும்) எந்த வகையில் நியாயம். ஒரு சிலர் செய்யும் தவறுகள் எவ்வளவு அழிவை தருகிறது. கடந்த சில வருடங்களாக ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலும் மனித உயிர் சேதங்களும் காட்டுத் தீயால் ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
2009 நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட படம்
கடந்த ஆறு வருடங்களாக நான் ரசிக்கும் இந்த மலைபகுதியில் சென்ற வாரம் தீ விபத்து ஏற்பட்டு நிறைய மரங்கள் கருகிபோய்விட்டன. சில இளைஞர்களால் ஏற்படுத்தப்பட்டதாக சிலரை கைது செய்ததாக கூறினார்கள்.
2010 ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட படம் தீ விபத்திற்கு பின்
ஆனால் எவ்வளவு பரப்பளவு எரிந்துவிட்டது பாருங்கள் அம்புகுறிகள் இட்ட பகுதி. நான் கவனித்த வரையில் இந்த பகுதி வரை மழைபெய்யும் இதற்குமேல் மரங்கள் இல்லாமையால் மழையளவு குறையும். அரசாங்கமும் பல்வேறு திட்டங்களை தீட்டி மரவளர்ப்பில் ஈடுபட்டாலும் இதுபோன்ற நிகழ்வுகள் அவற்றை அர்த்தமற்ற தாக்கிவிடுகிறது. முடிவில் நாம்தான் கஷ்டப்படுகிறோம்.

ஆடம்பரமற்ற தொலைநோக்கு பார்வையில் காடுகள் உருவாக்கினால் மாத்திரமே மழை கிடைக்கும். கிடைக்கின்ற நீரையும் சேமித்தும், சிக்கனமாகவும் பயன்படுத்தினால் மாத்திரமே அமைதியான வாழ்கை. இல்லையேல் போராட்ட வாழ்கைதான் வாழவேண்டும். நாம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்லபோகிறோம் ?? பொன்னையும் பொருளையும், வங்கி இருப்பையும் விட்டு போராட்ட வாழ்கையை தரபோகிறோமா ?? அல்லது நிறைந்த வனசெல்வத்தை விட்டு அமைதியான ஒழுக்கம் நிறைந்த வாழ்கையை தரபோகிறோமா ??

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு ------ குறள்

என்னை பதிவிட அழைத்த அமைதிசாரல் அவர்களுக்கு எனது நன்றி.

2 comments:

சாந்தி மாரியப்பன் said...

நல்லா எழுதியிருக்கீங்க. தானாக வரும் காட்டுத்தீயையாவது இயற்கையின் சதி என்று சொல்லலாம். இதுபோல் மனித தவறுகளை என்னவென்று சொல்வது..

நமது பதிவுலக நண்பர்களை தொடரச்சொல்லியிருந்தால் இன்னும் இந்த விழிப்புணர்வை பரவச்செய்யலாம்.

வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

வின்சென்ட். said...

திரு. அமைதிச்சாரல்

உங்கள் வருகைக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கும் மிக்க நன்றி. அதிக நண்பர்கள் புள்ளிவிபரங்களுடன் எழுதுவது மகிழ்ச்சியை தருகிறது. முயற்சி செய்வோம்.