ஹீமோபீலியா என்பது இரத்தத்தின் உறையும் தன்மை குறைபாட்டினால் வரும் ஒரு பரம்பரை நோய். இக்குறை உள்ளவர்களுக்கு சிறு காயங்களினாலோ, அடிபடுவதாலோ அல்லது தானாகவோ தொடர்ந்து இரத்தகசிவு ஏற்படும்.
அறிகுறிகள்
தொப்புள் கொடி விழுந்த பின் நிற்காமல் தொடர்ந்து இரத்தம் கசிதல்
உடலில் ஆங்காங்கே நீலநிறத் தழும்புகள் தோன்றும்.
மூட்டுக்களில் குறிப்பாக கால் மூட்டுக்களில் திரும்பதிரும்ப வீங்கி வலித்தல்.
உடலில் காயம் ஏற்பட்டபின், பல் விழுந்தபின் அல்லது பல் எடுத்தபின் மற்றும் பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல்.
சிகிச்சை
இந்நோயை குணப்படுத்த முடியாது ஆனால் முறையான சிகிச்சையின் மூலம் கட்டுபடுத்த முடியும். இரத்தம், பிளாஸ்மா, கிரையோபிரிஸிடேட் மற்றும் உறைபொருளை செலுத்துவதன் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. சாராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு குழந்தைக்கு ரூ.40,000/= செலவளிக்கப்படுகிறது.
ஹீமோபீலியா சொஸைட்டி
இந்தியாவில் 1:10,000 என்ற கணக்கில் நோயாளிகள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இக்குறைபாடு உள்ளவர்களை கண்டறிதல், நோய் மற்றும் சிகிச்சை பற்றி தகவல்களை அளிப்பது, குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்க செய்வது ஆகியவற்றை குறிகோள்களாக கொண்டு நம் நாடு முழுவதும் சுமார் 63 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவர்களுக்கு உதவுவது எப்படி?
ஒரு நபரின் மருந்து மற்றும் மருத்துவ செலவினை ஏற்றுக்கொள்ளுதல்.
அக்குழந்தைகளின் கல்விச் செலவினை ஏற்றுக்கொள்ளுதல்.
பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
எல்லா நன்கொடையாளர்களும் வருமானவரி சட்டம் பிரிவு 80-G இன் கீழ் வரிவிலக்கு பெறுவர்.
மேலும் விபரம் மற்றும் உதவு பெற:-
ஹீமோபீலியா சொஸைட்டி - கோயமுத்தூர் சேப்டர்
29/1 ஜே. பி. ஆர். காம்ப்ளக்ஸ் ( பார்க் மருத்துவமனை அருகில் )
காளப்பட்டி ரோடு,
கோவை - 641 014
தொலைபேசி : 0422 - 2627408
அலைபேசி : 98940 - 98897
மின்னஞ்சல் : hemop@md3.vsnl.net.in
இயற்கை முறை ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.
8 comments:
தொடர்ந்து பல அரிய தகவல்களோடு சளைக்காமல் சிறந்த இடுகைகளைத் தருகிற உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
திரு.சேட்டைக்காரன்
உங்கள் வருகைக்கும்,பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி. மின்வெட்டு காரணமாய் தாமதமானது எனது பின்னூட்டம்.
அறிய தகவலை சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் தங்கள் என்னத்தை பாராட்டுகிறேன்
இந்த பற்று மேலும் தொடரட்டும்.
குஹன்
http://mywritingpad.co.cc
திரு.குஹன்
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
நல்ல பதிவுகள்.
தங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.
அன்புடன்
ரகு
திரு.CM ரகு
உங்கள் வருக்கைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
adathotai leaves are good relief for hemophilia
dr.j.sriram
9486811230
Dr. Sriram
Thank you very much for your information.
Post a Comment