பொறுப்பற்ற சில இளைஞர்களால் வேதனை:
பொதுவாக கோடைகாலம் ஆரம்பித்தாலே வனத்துறை மிக எச்சரிக்கையுடன் இருப்பார்கள் காரணம் நீர் பற்றாக்குறை காரணமாய் வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் வனத்தில் ஏற்படுகின்ற “தீ”. இந்த தீ இயற்கையாக ஏற்பட்டால் ஜீரணித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த தீ சில சமூக பொறுப்பற்ற அதிலும் படித்து வேலை செய்யும் இளைஞர்களால் பொழுதுபோக்கிற்காக ஏற்படுவதை ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை. 24-02-09 அன்று செய்தியாக வந்தது இதுதான் ஊட்டி - கல்லட்டி சாலையில் 25 வது U வளைவில் அருகிலுள்ள பகுதிக்கு தீ வைத்து அந்த வழியே சென்ற நபரை அணுகி தீக்கு முன் தாங்கள் இருப்பது போன்று புகைப்படம் எடுக்க அணுகியுள்ளனர். ஆனால் பொறுப்புள்ள அந்த இளைஞர் இது தவறு என்று கூறி மறுத்துவிட்டு உடனடியாக செயல்பட்டதால் சேதத்தை சுமார் 2 ஹெக்டர் அளவிற்கு குறைக்க முடிந்தது.
ஒரு பொறுப்புள்ள முதியவரின் சாதனை:
76 வயதான திரு.ஐய்யசாமி கடந்த 25 ஆண்டுகளாக வேட்டுவன் புதூர் கிராமத்தில் சொற்ப வருமானத்தில் சுமார் 10,000 மரங்களுக்கு மேல் நட்டு பராமரித்துள்ளார். இப்போது அவைகள் விறகுக்காகவும், வீட்டு உபயோக பொருட்களுக்காகவும் வெட்டப்படுவதை பற்றி மிகவும் வருத்தமடைகிறார். இதனைப் பாதுகாக்க மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்துள்ளார்.
இன்றைய இளைஞர்களிடம் சுற்றுச் சுழல் பற்றி அதிகம் தெரிவிக்கபட வில்லையா? அல்லது செல்வச் செழிப்பால் பொறுப்பின்றி இருக்கின்றார்களா? இவர்களுக்கு சுற்றுச் சுழல் பற்றி அறிவுறுத்த வேண்டியது நமது கடமை. எனவே உங்களின் மேலான ஆலோசனைகளை பின்னூட்டம் மூலம் தெரிவியுங்கள். வலைப் பூக்கள் மூலம் நம் கடமையை செய்வோம்.
Source: “The Hindu”
Friday, February 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ரொம்ப மோசமான செய்தி.. அவர்களுக்கு அது தொடர்ந்து பற்றிக்கொள்ளும் அபாயம் பற்றி தெரிந்திருக்கவில்லை என்பது வேதனை.
இன்பச்சுற்றுலாக்கள் .. அட்வென்சர் , என்றால் மட்டும் தான் அவர்களுக்கு இந்த இயற்கை நினைவுக்கே வருகிறது :(
திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. நீங்கள் கூறியது போல்
"இன்பச்சுற்றுலாக்கள் .. அட்வென்சர் , என்றால் மட்டும் தான் அவர்களுக்கு இந்த இயற்கை நினைவுக்கே வருகிறது :("
Post a Comment