Sunday, February 14, 2010

தொழிற்சாலை சார்ந்த வேளாண்மை காடு வளர்ப்பிற்காக புதிய இணையதளம்.


தேசீய வேளாண் புதுமைத் திட்டதின் கீழ் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரவளர்ப்பு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. அதனை மேலும் ஊக்கப்படுத்தி விரிவாக்க புதிய இணையதளம் ஒன்றை http://www.fcrinaip.org/ என்ற முகவரியில் உருவாகியுள்ளனர். இத்திட்டதின் செயல்பாடு, இணைந்துள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், செயல்படும் இடம், மாதிரிப்பண்ணை, தொழில்நுட்பம், மரத்தை வாங்கிக்கொள்ளும் தொழிற்சாலைகள் பற்றிய விபரங்கள் என நிறைய தகவல்கள் உண்டு. மிக முக்கியமாக விலை நிலவரம் பற்றிய தகவல்கள் வெளியிடுவதால் விவசாய பெருங்குடி மக்களும், உபரி வருமானத்தோடு இயற்கையையும் பாதுகாக்க தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் அச்சமின்றி மரவளர்ப்பில் ஈடுபடலாம். நல்ல வாய்ப்புக்கள் நம் கதவை தட்டும் போது திறந்து பயன்பெற்று வனவளத்தைக் காப்பது நம் கடமை.

வனம் வளர்ந்தால் அது வளமையின் துவக்கம்.
வனம் அழிந்தால் அது வறட்சியின் துவக்கம்.

2 comments:

பொற்கோ said...

//"வனம் அழிந்தால் அது வறட்சியின் துவக்கம்"//

சினிமா கோமாளிகளுக்கு பாலாபிசேகம் பண்ற நாட்டில இது நடக்குற காரியமா? தலைவா...

வின்சென்ட். said...

திரு.பொற்கோ

உங்கள் வருகைக்கு நன்றி. பிரபல ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் சினிமா, கிரிக்கெட் என்று பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கொடுத்து விடுவதால் உண்மை நிலை என்னவென்று மக்களுக்கு தெரிவதில்லை, எனவே இதுபோன்ற செயல்கள் நடக்கின்றன என்பது எனது எண்ணம்.