Friday, February 26, 2010

உபயோகமற்ற உண்ணிச்செடியிலிருந்து உபயோகமுள்ள கைவினைப் பொருட்கள்.


உலகெங்கும் தொல்லை தரும் களைச் செடிகளில் இந்த உண்ணிச் செடி (Lantana camara ) மிக முக்கியமானது. தென் அமெரிக்காவிலிருந்து பரவிய இது இன்று ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா வரை பரவியுள்ளது. இதனால் வன மிருகங்களின் மேய்ச்சல், வாழ்விடங்கள் பாதிக்கபட்டுள்ளதோடு அரிய வகை தாவரங்களும், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமும் கேள்விகுறியாகும் அளவிற்கு இதன் வளர்ச்சியுள்ளது.

ஆனால் பெங்களுரு நகரிலுள்ள அசோகா டிரஸ்ட் பார் ரிசர்ச் இன் எக்காலாஜி அண்டு தி என்விரான்மெண்ட் ( Atree ) என்ற அமைப்பு இந்த உண்ணிச் செடியை எளிதாக பிரம்பிற்கு மாற்று மூலப்பொருளாக பயன்படுத்தி மிக நேர்த்தியாக கைவினைப் பொருட்கள் செய்து காட்சிக்கு வைத்திருந்தனர். அனைத்துப் பொருட்களும் விற்றுத் தீர்ந்தது வேறு விஷயம். புகைபடங்கள் மரவிழா கோவை -2010 கண்காட்சியில் எடுக்கப்பட்டவை.

இந்த மாற்று மூலப்பொருளால் வனவளம் காப்பாற்றப்படுவதோடு மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு, மூங்கில், பிரம்பு போன்றவற்றின் தேவை குறைவதால் அதன் வளம் காப்பாற்றபடுகிறது. உண்ணிச்செடியை மூலப்பொருளாக உபயோகிப்பதால் (அப்பகுதியிலிருந்து அகற்றப்படுவதால் )மண்வளம் மேம்பட்டு அரிய வகை தாவரங்கள் காப்பாற்றபடுகின்றன. இதுபோன்ற மாற்று பொருட்களுக்கு ஆதரவு தருவதன் மூலம் நாம் மறைமுகமாக சுற்றுச்சுழலை பாதுகாக்கிறோம் என்பதில் ஐயமில்லை.

மேலும் விபரங்கள் பெற :-

ASHOKA TRUST FOR RESEARCH IN ECOLOGY AND ENVIRONMENT,
Royal enclave
Sriramapura
Jaggur post
Bangaluru 560 064
Phone :- 91-80-23635555
Email : kannan@atree.org

3 comments:

மதுரை சரவணன் said...

kaivinai porulkal unni sediyil arputham.

seethag said...

what a wonderful concept vincent sir.

வின்சென்ட். said...

திரு. மதுரை சரவணன்
திருமதி.சீதா

இருவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. உண்மையில் முள் இருப்பதால் இதனை அகற்றுவதற்கு நிறைய செலவு செய்தாக வேண்டும். அதுவே மூலப் பொருளாக மாறி மக்களுக்கு வேலை வாய்ப்பு தருகிறதென்றால் நிச்சயம் பிரபலமாக வேண்டும்.