Friday, September 4, 2009

திரு.Y.S. ராஜசேகர ரெட்டி - ஆந்திர மாநில விவசாயிகளின் நம்பிக்கை நட்சத்திரம்

தனது முதல் பதவிக்காலத்தில் செய்த பல நல்ல காரியங்களுக்காக இரண்டாம் முறையாக முதன் மந்திரியாக பதவியேற்ற திரு.Y.S. ராஜசேகர ரெட்டி அவர்களின் விவசாய மாற்றங்கள் ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்சென்றுள்ளது என்பதற்கு அவர் மறைவுச் செய்தி கேட்டவுடன் சில விவசாயிகள் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது சாட்சியாகும். ஆந்திர மாநிலம் இப்போதுள்ள விவசாய நெருக்கடி காலத்தில் அதனைப் புரிந்து கொண்டு பரிகாரம் தேடும் முதலமைச்சரை இழந்தது என்பதே உண்மை. அன்னாரின் ஆத்மாவும், அவருடன் சென்ற அதிகாரிகள் மற்றும் விமானிகளின் ஆத்மாக்களும் சாந்தியடைய இறைவனிடம் இவ்வலைப் பூ வேண்டுகிறது.

2003 பாத யாத்திரையின் போது ஏழை, எளிய விவசாயிகள் படும் கஷ்டங்களை, எதிர் கொள்ளும் பிரச்சினைகளை ராஜசேகர ரெட்டி நேரில் பார்த்திருந்தார். ஏழை விவசாயிகளுக்கு என்னென்ன தேவைப்படும் என்பது அந்த பாத யாத்திரையின் போது அவர் மனதில் ஆழமாக பதிந்து போய் இருந்தது.

முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றதும் ஏழை விவசாயிகளின் மன ஏக்கத்தை போக்குவது என்று உறுதி எடுத்துக் கொண்டார். தனது முதல் பட்ஜெட்டிலேயே எந்த துறைக்கும் இல்லாதபடி வேளாண் துறைக்கு அதிக பணம் ஒதுக்கீடு செய்தார்.

ஏழை விவசாயிகள் பயன் பெற, இலவச மின்சாரம் கொடுத்தார்.
விவசாயத்தில் நவீன உத்திகளை பயன்படுத்த வழி வகுத்தார். அதே சமயத்தில் ஆந்திர மாநில விவசாய உள் கட்டமைப்பையும் வலுப்படுத்தினார். கிராம விவசாயிகள் வாழ்வில் வளம் பெருக வேண்டுமானால் நீர்ப்பாசனம் மிக, மிக முக்கியமானது என்பதை யாத யாத்திரை காலத்தில் அறிந்திருந்த ராஜசேகர ரெட்டி ஆந்திர மாநில நீர்ப்பாசனத் திட்டங்களில் மாபெரும் புரட்சி செய்தார். முதல்-மந்திரியாக பதவி ஏற்ற முதல் 2 ஆண்டுகளில் மட்டும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு 1600 கோடி ரூபாயை செலவிட்டார்.

அதோடு “ஜலயக்ஞம்” என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன் மூலம் ஆந்திராவில் தரிசாக கிடந்த நிலங்கள் எல்லாம் மாற்றப்பட்டன. இந்த புரட்சியை ராஜசேகர ரெட்டி 2 வருடத்தில் ஓசையின்றி செய்து முடித்தார். ஒரே சமயத்தில் 70 நீர்ப் பாசன திட்டங்களை அமல் படுத்தி எல்லா கட்சிக்காரர்களையும் பிரமிக்க வைத்தார். பெரிய ஆறுகளில் ஓடும் தண்ணீரை, சிறு சிறு கால்வாய் வெட்டி பாசனத்துக்கு கொண்டு வந்தார். பல புதிய அணைக்கட்டுகளைக் கட்டினார். மிக குறுகிய காலத்தில் 32 பெரிய நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றினார். இவற்றுக்கு ஆன மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? 65 ஆயிரம் கோடி ரூபாய். இவை அனைத்தையும் ராஜசேகர ரெட்டி, மிக, மிக திட்டமிட்டு நேர்த்தியாக செய்து முடித்தார்.

இந்த விவசாயப் புரட்சி காரணமாக ஆந்திராவில் இரண்டாண்டுகளில் விளை நிலங்களின் அளவு இரட்டிப்பாக உயர்ந்தது. இதனால் ஆந்திராவின் ஒட்டு மொத்த விவசாய உற்பத்தி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. ஏழை விவசாயிகளின் வாழ்வில் வசந்தம் வீசியது.

நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றிய போதே மக்களின் குடிநீர் திட்டங் களையும் சேர்த்து அமல் படுத்தினார். இதனால் 1 கோடி ஏழைகளுக்கு குடிநீர் வசதி கிடைத்தது.

இதற்கிடையே ஏழை விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த இயலாமல் இருப்பது அவரது கவனத்துக்கு வந்தது. உடனடியாக ஏழை விவசாயிகளின் 1192 கோடி மின் கட்டண நிலுவைத் தொகைகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காக “இந்திரம்மா திட்டம்” என்றொரு திட்டத்தை அறிமுகம் செய்தார். விவசாயிகள் கடன்களை அடிக்கடி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முதியோருக்கு பென்சன் கொடுக்கும் திட்டம் கொண்டு வந்தார். விதவைகள் மற்றும் ஊன முற்றோர் மறுவாழ்வுக்கு முன் னுரிமை கொடுத்தார்.

ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டி கொடுத்தார். ரேசனில் ஏழைகளுக்கு ஒரு கிலோ அரிசியை 2 ரூபாய்க்கு வழங்கினார். ராஜீவ் காந்தி பெயரில் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வந்தார். அவரது 5 ஆண்டு ஆட்சி காலத்தில் ஏழைகள் பெற்ற பயன் ஏராளம்... ஏராளம்... ஏழை விவசாயிகள் வாழ்வில் அவர் மறுமலர்ச்சி ஏற்படுத்தி இருந்தார்.
நன்றி : மாலை மலர் //சென்னை 04-09-2009 (வெள்ளிக்கிழமை)

8 comments:

ஆயில்யன் said...

சந்திரபாபு நாயுடு ஐடி தொழில்நுட்ப பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீவிரமாக இயங்கிகொண்டிருந்த காலகட்டத்தில்,வேளாண்மைதான் நம் மாநிலத்தின் உயிர் என்ற ரீதியில் மக்களை நேரடியாக சந்திக்கும் பாதயாத்திரையின் மூலம் திரும்பவும் ஆட்சியை பிடித்த
ராஜசேகர ரெட்டி சொன்னது போலவே வேளாண் தொழிலுக்கு முன்னுரிமை அளித்து திட்டங்க நிறைவேற்றியதும் நிச்சயம் மக்கள் மத்தியில் பல வருடங்களுக்கு நினைவில் வீற்றிருக்கும்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தகவலுக்கு நன்றி..

அன்னாருக்கு என் அஞ்சலிகள்.

வின்சென்ட். said...

திரு.ஆயில்யன்
திருமதி.முத்துலெட்சுமி

உங்கள் இருவரின் வருகைக்கும் நன்றி.சற்று முன் வரை 67 பேர் இறந்ததாக yahoo செய்தி படித்தேன். நீங்கள் கூறியது போல் அவர் திட்டங்களை நிறைவேற்றியது நிச்சயம் மக்கள் மத்தியில் பல வருடங்களுக்கு நினைவில் வீற்றிருக்கும்!

விஜய் said...

இன்று தமிழ்நாட்டில் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கும் 108 சேவை மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி கொண்டு வந்ததே. மிக மிக சிறப்பான திட்டம். நல்ல மனிதர்களை ஆண்டவன் நீண்ட நாள் வாழ வைப்பதில்லை, சீக்கிரம் அழைத்து கொள்கிறான். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

வின்சென்ட். said...

திரு.கவிதை

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. மாலை மலர் செய்தியை வெட்டி ஒட்டுகிறோமே என்று எண்ணினேன். ஆனால் அவர் செய்த நல்லவைகள் ஆவணப்படுத்த வேண்டும் என்பதால் நேரமின்மை காரணமாக அவ்வாறு செய்தேன். இருப்பினும் இப்பதிவை நிறைய பேர் படித்தது மனதிற்கு ஆறுதலாக உள்ளது.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி.

எல்லாம் உண்மை.

ஒரு சிறந்த முதலமைச்சரை இழந்துவிட்டோம்.

Natchimuthu Ramasamy, Hyderabad said...

Thanks velaanmai.com for creating a nice homage post to remember the great former friendly chief minister.

சர்வதேசவாதிகள் said...

இந்த நச்சு திரத்தின் ஆட்சியிலும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்!

சமீபத்தில் (ஜூலை-ஆகஸ்டு) ஒரே வாரத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட கொடூரமும் நடந்தது. அதை கண்டுகொள்ளாத எந்த ஊடகங்களும், இந்த நட்சத்திரத்தின் ஹெலிகாப்டர் காணாமல் போனதிலிருந்து 24 மணி நேரமும் மூன்று-நான்கு நாட்களுக்கும் மேலாக ஒப்பாரிவைத்து கொண்டு இருந்தனர்.


மேலதிக விவரங்களுக்கு:

http://www.thehindubusinessline.com/2009/08/21/stories/2009082151271700.htm

http://farmersharakiri.rediffblogs.com/

விவசாயிகளின் நிலை பற்றி தொடர்ந்து எழுதிவரும் சாய்நாத்தின் கட்டுரைகள்:
http://www.indiatogether.org/opinions/psainath/suiseries.htm


- சர்வதேசியவாதிகள்
http://vrinternationalists.wordpress.com/