Friday, June 5, 2009

புவிப் பந்தைக் காப்போம்; மனிதனைக் காப்போம்!

இரயுமன்துறை - தமிழகத்தின் வரைபடத்தில் பூத கண்ணாடியால் பார்த்தால் கூட ஒரு நுண்ணிய புள்ளியாக தோன்றும் இந்த மீன்பிடி மக்கள் வாழும் கிராமம் இன்னும் சில வருடங்களில் அழிந்துவிடும் அபாயம் பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்? கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடலுக்கும் வற்றாத தாமிரபரணி நதிக்கும் ஏவிஎம் கால்வாய் ஆகிய மூன்றுக்கும் நடுவில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் இது. இதற்கு 700 மீட்டர் தொலைவில் கடலும் ஆறும் இருந்தன. இன்று இந்த இடைவெளி 50 மீட்டராக குறைந்துவிட்டது. தொடர்ந்த கடல் அரிப்பின் விளைவாக 650 மீட்டர் நீள முள்ள மண் பகுதியை கடல் விழுங்கிக் கொண்டது. 1982ம் ஆண்டில் இக்கிராமத்தில் 8 தெருக்களும் 7000 மக்களும் குடியிருந் தனர். கடல் அரிப்பின் விளைவாக 5 தெருக்களில் இருந்த வீடுகள் சிதைந்து விட்டன. மக்களின் எண்ணிக்கை 2500 ஆக ஆகிவிட்டது. வீடுகளை, தொழிலை இழந்த வசதி படைத்த மக்கள் சமத்துவ புரத்திற்கும் நாகர்கோவிலுக்கும் புலம் பெயர்ந்துவிட்டார்கள். வேறு யார் எஞ்சி யிருக்க முடியும். மீன்பிடித்தலைக்கூட கூலிக்கு செய்து பிழைக்கும் ஏழை மக்கள்தான் அங்கு மிஞ்சியுள்ளார்கள். கிராமத்தின் மேற்குபுறத்தில் தடுப்புச் சுவர் கட்டினால்தான் மண்அரிப்பை தடுக்க முடியும். அப்படி கட்டப்படும் சுவரால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்று அண்டையில் உள்ள கிராமத்தார் தடுப்புச் சுவர் கட்டப்படுவதை எதிர்க் கிறார்கள். இதுபோன்ற அழிவை இப் பகுதியில் வேறு எந்த கிராமமும் சந்திக்கவில்லை. அரசின் கவனத் தையும் அதிகாரிகளின் இரக்கத்தையும் ஈர்க்க மக்கள் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை.இது ஒன்றும் ஓர் தனிப்பட்ட நிகழ் வல்ல. தரங்கம்பாடியில் மாசிலாமணி நாதர் ஆலயமும், சுந்தரவனச் சதுப்பு நிலத்தீவுகளும் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. தன்னை அழிக்கும் மனிதர்களை எச்சரிக்கும் இயற்கையின் சீண்டல்கள் இவை.

மேல் அதிகம் பற்றி அறிந்து கொள்ள கீழ் கண்ட தொடர்பை காணுங்கள்.
http://erayumanthurai.blogspot.com/

Source :தீக்கதிர்/கோவை 05-06-09 புவிப் பந்தைக் காப்போம்; மனிதனைக் காப்போம்! கட்டுரையிலிருந்து.
படம் உதவி : http://erayumanthurai.blogspot.com/

2 comments:

ஆயில்யன் said...

ரயுமன் துறை தரங்கம்பாடி போன்றும் இன்னும்கூட பல கடற்கரையோர கிராமங்களில் இது போன்ற கடற்கரை சீற்றங்களினால் தொடரும் அழிவுகள் உண்மையாகவே இயற்கை நமக்கு அளிக்கும் எச்சரிக்கைத்தான்! ஆனால் அலட்சியம் மக்களிடமும் அரசிடமும் மிகுந்தே காணப்படுகிறது :(((

வின்சென்ட். said...

திரு.ஆயில்யன்
திரு.சென்ஷி

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. இந்த அழிவுகளிலிருந்து மீள இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மகிழ்ச்சியாக வாழலாம். ஆம் அலையாத்தி காடுகளை நாம் பேணிகாத்து வளர்க்க வேண்டும். அதுபற்றிய எனது பதிவினைக் காண கீழ் கண்ட தொடுப்பை பயன்படுத்துங்கள்

http://maravalam.blogspot.com/2008/07/blog-post_30.html