Thursday, June 11, 2009

எளிதில் மரம் வளர்க்க சில உத்திகள்.

1970 களின் பிற்பகுதியில் என் தந்தை இளம் தேயிலை நாற்றுகளுக்கு மூங்கில் வகையை சார்ந்த கணு இடைவெளி அதிகமுள்ள “ஓடை” என்னும் துவாரமுள்ள குச்சியை வெட்டி அதனை நாற்றின் வேருக்கருகே வைத்து கோடை காலத்தில் நீரூற்றி காப்பாற்றியதை நான் பார்த்திருக்கிறேன். நாள்பட அவை மக்கிவிடும் அதற்குள் செடி நன்கு வளர்ந்து விடும். பின்னாட்களில் நாங்கள் தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த பகுதியில் வீடு கட்டியபோது அவர் எஞ்சிய மின்சார கம்பிகளை நுழைக்க பயன்பட்ட குழாய்களை (PVC) மேற்கண்ட முறையில் உபயோகித்து அருகிலிருந்த சாலை மரங்களுக்கும், வீட்டிலுள்ள தென்னைமரங்களுக்கும் மிக சிக்கனமாக நீரைபயன்படுத்தி வளர்த்தார். இன்று அவைகள் ஓங்கி வளர்ந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

இந்த முறையுடன் மேலும் சில உத்திகளைப் பயன்படுத்தி எளிதாக மரம் வளர்க்கலாம். அதனை புகைபடங்களாக பதிவிடுகிறேன். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

குழியெடுத்து அதனுள் மக்கிய இலைதழைகளை கொஞ்சம் போடவேண்டும் இவை நீரை எளிதில் தக்கவைக்கவும், உரமாகவும் பயன்படும் அல்லது Ec அளவு ஒன்றுக்கும் குறைவான அளவிலுள்ள தென்னைநார் கழிவுகளையும் உபயோகிக்கலாம். பழைய அல்லது உபயோகமில்லாத 1 அல்லது 2 அங்குல விட்டமுள்ள குழாய்களை எடுத்து தேவையான நீளத்திற்கு வெட்டி அதனை குழியினுள் வைத்து பின் செடிகளை நடவேண்டும். கோடை காலத்தில் இந்த குழாய் வழியாக மிக குறைந்த அளவு நீர் ஊற்றினால் கூட போதும் நீர் வேர்பகுதிக்கு நேராக செல்வதால் களைகள் தோன்றுவது குறைந்து நாற்றுக்கள் நன்கு வளரும். திரவ உரங்களையும் தரலாம். சொட்டு நீர் பாசன வசதியிருந்தால் அதனை குழாயினுள் வைத்தால் போதும். நீர் பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு மிகவும் ஏற்றது. நடும் போது கண்டிப்பாக வேர் பூஞ்சானம் (வேம் )(Vasicular arbuscular mycorrhizas [VAM] ) உபயோகியுங்கள். அது நல்ல வேர் அமைப்பையும், சத்துக்களை கரைத்து வேர்கள் எளிதில் எடுக்கும் வண்ணம் மாற்றியும் தரும். மண்ணிலுள்ள நோய் உண்டாக்கக் கூடிய பாக்டீரியா மற்றும் புஞ்சானங்களிலிருந்து பாதுகாப்பைத் தரும்.

சரிவுப்பகுதிகளில் பிறை வடிவில் குழியெடுத்து வெட்டிவேர் நாற்றுக்களை நட்டு வையுங்கள். அவை மழைகாலங்களில் மண் அரிப்பை தடுத்து நீரை தக்க வைத்துக்கொள்ளும். வெட்டிவேரின் உதவியால் நீர் எளிதில் பூமியினுள் செல்லும். நன்கு வளர்ந்தால் மிக சிறிய தடுப்பணை போன்று நீரின் வேகத்தை தடுத்து நிறுத்தும். நாற்றுக்களை சுற்றி காய்ந்த இலைதழைகளைக் கொண்டு மூடாக்கு இடுங்கள். அவை களைகளை குறைப்பதுடன் மண் ஈரத்தை காக்கும். நிறைய மரங்களை நட்டு சுற்றுச் சுழலைக் காப்போம்.

12 comments:

நாமக்கல் சிபி said...

பயனுள்ள பதிவு

வின்சென்ட். said...

திரு.நாமக்கல் சிபி

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

seethag said...

i am not sure vincent sir, i have been having difficulty in posting a comment. this post is a very useful one. also can you please write about hulikallu thimmakka from karnataka?

seetha

வின்சென்ட். said...

திருமதி.சீதா

உங்கள் வருகைக்கு நன்றி. திருமதி. திம்மக்கா பற்றி விரைவில் எழுதுகிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல ஐடியாவா இருக்கு..

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.இதே முறையினை தொட்டி செடிகளுக்கும் செய்யலாம்.தொட்டியின் பாதி பகுதியில் மறுமுனை இருக்க வேண்டும்.

Anonymous said...

Hai Vincent,
A very good idea to tackle water shortage. However the people with whom I shared this idea with have a few questions. I am summarising them below. Should one take any precautions while following this method for large scale plantation? Will the growth of trunk and root of the tree get affected because of the pipe. It will be helpful for us if you can clear these doubts(with a possible photograph of a grown tree). Thanks in advance

Ram Kumar
Kangeyam

வின்சென்ட். said...

திரு.ராம் குமார்

உங்கள் வருகைக்கு நன்றி. பொதுவாக மரங்களுக்கு 3 வருடங்கள் நீருற்றினால் போதும் அதுவரை குழாய்களை வைத்திருங்கள் பின் எடுத்துவிடுங்கள். அதற்குள் மரங்கள் தன்னைத் தானே காத்துக் கொள்ளும் தன்மையை பெற்றுவிடும். தனி பதிவை படங்களுடன் தருகிறேன்.

Shankar said...

Dear Mr.Vincent,
Additional methods:
http://theconstructor.org/2009/09/more-efficient-alternate-irrigation-systems-2/

வின்சென்ட். said...

திரு.சங்கர்

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. இவ்வளவு நாட்கள் கழித்து பதிவை பார்த்திருக்கிறீர்கள் என்பதே மகிழ்ச்சி அதில் எனக்கு மேலதிக தகவலும் தந்துள்ளீர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி .

B. Rathinasabapathy said...

எளிதாக மரம் வளர்த்தல்
மற்றும் நீர் பராமரிப்பு
இக் காலதிற்கு உகந்த ஒன்று.
பின்பற்றுவது மிகவும் சுலபம்.

வின்சென்ட். said...

Mr.Bhuvaragaswamy

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.