Friday, February 20, 2009

வளர்ந்த நாடுகளில் தண்ணீரின் நிலைமை.

வளர்ந்த நாடான ஆஸ்திரேலியாவில் தண்ணீருக்காக எவ்வாறு சிக்கன முயற்சிகள் எடுக்கிறார்கள் என்பதை படிக்கும் போது மலைப்பாகவும், திகைப்பாகவும் உள்ளது. நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. நிறைய சட்டதிட்டங்களை நாம் இயற்றி நீரை சேமிக்க வேண்டியுள்ளது இல்லையேல் இன்னும் 10 -15 ஆண்டுகளில் நாம் மிகவும் கஷ்டப்படவேண்டிவரும்.

பழைய செய்தி
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் வறட்சிப் பகுதியான தென்கிழக்கு பகுதியிலுள்ள மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை குடிப்பதற்கு தருவதை அந்நாட்டின் பிரதம மந்திரி திரு.ஜான் ஹவார்டு பாராட்டியுள்ளார். இந்த வருடச் செய்தி
*வறட்சியை சமாளிப்பதற்காக வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீருக்கு மட்டுமல்லாமல் வெளியேற்றப்படும் கழிவு நீருக்கும் வரி விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்துள்ளது. கழிவு நீருக்கான வரி ஏற்கெனவே ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இருந்தாலும், அது வீட்டின் மதிப்பைப் பொறுத்தே இருந்தது. தற்போது நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் கழிவு நீருக்கான வரியை விரிவாக்கியுள்ள ஆஸ்திரேலிய அரசு, எவ்வளவு கழிவு நீர் வெளியேற்றப்படுகிறதோ அதைப்பொறுத்து வரி வசூலிக்கப்படும் என்று திட்டமிட்டுள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்த அடிலெய்டு பல்கலைக்கழகத்தின் பேராசியர் மைக் யங், இதன் மூலம் குளியல் நேரத்தைக் குறைப்பது, துணிகள் துவைப்பதைக் குறைத்துக் கொள்வது, மழை நீர் சேகரிப்பை குளியல் அறையுடன் இணைப்பது என்று பல நடவடிக்கைகளை எடுக்க நிர்பந்திக்கப்படுவார்கள். தங்கள் கழிப்பறைகளைக் கழுவாமலே சென்று விடும் அளவுக்கு பிரச்சனை ஏற்படும் என்று எச்சரிக்கிறார். இத்தகைய மக்கள் விரோதக் கொள்கை அமெரிக்காவிலும் உள்ளது என்று ஆஸ்திரேலிய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
*நன்றி : தீக்கதிர்/கோவை 19-02-2009

3 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நம்ம ஊருலயும் போடலாங்க.. வரி.. குளிக்கப்போனா ஒருமணிநேரம் மொண்டு மொண்டு ஊத்திட்டே இருப்பாங்க..சும்மாவானும் மூஞ்சியக்கழுவவே ஒரு பக்கெட் தண்ணி செலவழிப்பாங்க..

ஆனா அந்த பேராசிரியர் கவலையும் நியாயம் தான் காசு தானே எல்லாத்தையும் நிர்ணயிக்குது..

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி

உங்கள் வருகைக்கு நன்றி. எப்படியோ குளிக்கட்டும். இயற்கை தருகின்ற இரு மழை பொழிவையும் சேமிக்காமல் இருப்பதுதான் மனதிற்கு வருத்தம். நிலத்தடி நீரை உயர்த்தவேண்டும். இப்பொழுதே மேற்கு மலைத் தொடரில் காடுகள் காய்ந்து 'தீ' வேறு அதன் பரப்பளவை குறைக்கிறது. வருங்காலம் ? ஆகும் முன் +காரணங்களை தெரிந்தெடுத்து அமல் செய்யவேண்டும். மக்கள் மனம் மாறவேண்டும்.

superlinks said...

hi