Saturday, February 23, 2008

ஆனந்த விகடனில் எனது வலைப்பூ

வெட்டிவேர் பயிற்சி பட்டறையின் முதல் நாள் முடிந்து மகிழ்ச்சி,ஆதங்கம், வருத்தம் என பல மனநிலைகளுடன் இருந்த போது நண்பர் திரு. மகாலிங்கம் அவர்கள் ஆனந்த விகடனில் எனது வலைப்பூ பற்றி வந்திருப்பதாக அறிவித்த போது இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தேன். காரணம் வெட்டிவேர் பற்றி மேலும் மக்கள் அறிய ஒரு வாய்ப்பை தந்த ஆனந்த விகடனுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
மகிழ்ச்சி
ஒரு பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருந்தது. நானும் ஆரம்பித்து ''வெட்டிவேர்'' என்றவுடன் மாணவர்களிடையே ஒரு ஏளனப் புன்னகை. ஆனால் பயிற்சி பட்டறையில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்தாலும் உச்சரிப்பு பல்வேறாக இருத்தாலும் அனைவரும் ''வெட்டிவேர்'' என்றது மகிழ்ச்சியாயிருந்தது.
ஆதங்கம்
திரு. ரிச்சர்டு க்ரிம்ஷா OBE ( Chairman ,The Vetiver Network International USA ) அவர்கள் வெட்டிவேர் தாவரங்களில் ''ரோல்ஸ் ராய்ஸ்''என்றார். மற்ற நாடுகள் சரியாக பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி காணும் போது நாம் அதனை சரியாக பயன்படுத்தாமல் வெள்ளம், வறட்சி என பொருளாதார வீழ்ச்சியில் உள்ளோம் திரு. ரிச்சர்டு க்ரிம்ஷா OBE அவர்கள் தலைமையுரை
வருத்தம்
தாய்லாந்து, சீனா, வியட்நாம் போன்ற நாடுகளின் அரசுகள் பெருமளவு உதவிசெய்து வெட்டிவேரை பிரபலப்படுத்துவது மகிழ்ச்சியாக இருந்தாலும் நமது அரசுகள் அந்த அளவிற்கு இல்லை என்பது வருத்தமாகவுள்ளது.
வரும் ஆறு அல்லது ஏழு பதிவுகள் வெட்டிவேர் பற்றியதாக இருக்கும் எனவே எனது வலை பூ பக்கம் வரும் வாரங்களில் வந்து வெட்டிவேர் பற்றி அறிந்து கொண்டு உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன்.

12 comments:

M.Rishan Shareef said...

விகடனில் பார்த்துத்தான் நானிங்கு வந்தேன்.
மிகப்பயனுள்ள பதிவுகள்.
வாழ்த்துக்கள் நண்பரே.
தொடரட்டும் உங்கள் சேவை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. நல்ல செய்தி.. உங்கள் பதிவு பலரின் கவனத்தைப்பெற உதவியாக இருக்கும்..

வடுவூர் குமார் said...

வாழ்த்துக்கள்.

வின்சென்ட். said...

திரு.எம்.ரிஷான் ஷெரீப் ,
திருமதி.கயல்விழி முத்துலெட்சுமி

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. வரும் வாரங்களில்
"வெட்டி வேர்" பற்றி மேலும் பல தகவல்கள் தரவுள்ளேன் எனவே பதிவிற்கு வருகை தாருங்கள்.

சதங்கா (Sathanga) said...

வாழ்த்துக்கள். பயனுள்ள செய்தி

வின்சென்ட். said...

திரு.வடுவூர் குமார்
திரு.சதங்கா

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.வரும் வாரங்களில் "வெட்டி வேர்" பற்றி மேலும் பல தகவல்கள் தரவுள்ளேன் எனவே பதிவிற்கு வருகை தாருங்கள்.

காண்டீபன் said...

வாழ்த்துக்கள்...

வின்சென்ட். said...

திரு.காண்டீபன்

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

Anonymous said...

thank you to provide very good information. the blog's design and colour also very beatiful.
you have done great job.
Thanks Again.

Sivakumar
kssivak@yahoo.com
Chennai

வின்சென்ட். said...

திரு. சிவகுமார்

உங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.

Palaniappan said...

Veetiver cultivated soils can be put in to use for other crops follwing a crop rotation using MUCANA

வின்சென்ட். said...

திரு. பழனியப்பன்

உங்கள் வருகைக்கும் பயனுள்ள தகவலுக்கும் மிக்க நன்றி.