Saturday, February 2, 2008

இந்தியாவின் முதல் வெட்டிவேர் பயிலரங்கம்.

இந்தியாவின் முதல் வெட்டிவேர் பயிலரங்கம் பிப்ரவரி மாதம் 21 முதல் 23 முடிய கேரளா மாநிலத்தின் கொச்சி மாநகரிலுள்ள ஹோட்டல் சரோவரம் ( HOTEL SAROVARAM ) என்ற இடத்தில் நடைபெறுகிறது. அது சமயம் திரு. ரிச்சர்டு க்ரிம்ஷா OBE ( Chairman ,The Vetver Network International USA ) , திரு.பால் டிருங் (Director,TVNI and Managing Director, Vetiver Consulting, Australia ) , திரு. ஹரிதாஸ், திரு. லட்சுமணபெருமாள்சாமி போன்ற வல்லுனர்கள் விளக்கமளிக்கவுள்ளனர். மிகவும் பயனுள்ள இந்த வெட்டிவேர் பயிலரங்கத்திற்கு உங்களை அழைக்கிறேன்.


விளக்கங்களுக்கும், பதிவுக்கும்

Sri..P.HARIDAS
Mobile : 0991 94470 60057
Sri. Mohan Alembath
Mobile : 0991 94472 23179


வெட்டிவேர் பற்றிய எனது பழைய பதிவை இங்கே காணலாம்.

2 comments:

வவ்வால் said...

வெட்டி வேருக்கு பல பலன்கள் உண்டு, அவர்றை ஆற்றங்கரைகளிலும் , குளம் , ஏரி போன்ற நீர் நிலைகளின் ஓரத்திலும் வளர்க்கலாம்,மண் அரிப்பு பாதிப்பு இடங்களுக்கு ஏற்றது தான் , ஆனால் தனியே விவசாய நிலங்களில் வளர்ப்பது எதிர்க்காலத்தில் பிரச்சினையை உருவாக்கும்.வேறு பயிர்களுக்கு மாற வேண்டும் என நினைத்தால் அது செய்ய முடியாது இந்த வெட்டி வேர் தொல்லைக்கொடுக்கும்.ஏன் எனில் பின்னர் அந்த வயலில் இருந்து வெட்டி வேரை நீக்கவே முடியாது. அதன் "rhizome" மற்றும் வேர்கள் எளிதில் அழிக்க முடியாதது. மீண்டும் மீண்டும் வளர்ந்துக்கொண்டே இருக்கும்.விவசாயப்பார்வையில் களைச்செடியாக தான் வெட்டி வேர் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களில் களைகள் அழிக்க முடியாமைக்கும் இதுவே காரணம்.புல்வகை களைகள்(monocot weeds) எளிதாக பரவி, நீண்டக்காலத்திற்கு நிற்கும்.

வின்சென்ட். said...

திரு.வவ்வால்

உங்கள் வருகைக்கு நன்றி.
"வெட்டி வேருக்கு பல பலன்கள் உண்டு, அவர்றை ஆற்றங்கரைகளிலும், குளம் , ஏரி போன்ற நீர் நிலைகளின் ஓரத்திலும் வளர்க்கலாம்,மண் அரிப்பு பாதிப்பு இடங்களுக்கு ஏற்றது தான் , ஆனால் தனியே விவசாய நிலங்களில் வளர்ப்பது எதிர்க்காலத்தில் பிரச்சினையை உருவாக்கும். "

உண்மைதான்.விவசாய நிலங்களில் வளர்ப்பதும் பொருளாதாரப் பயனும் நமது நாட்டில் தற்சமயம் சிந்திக்க வேண்டிய ஒன்று. பயிலரங்கத்தில் மண் அரிப்புக்குத்தான் மற்ற நாடுகள் அதிகம் உபயோகிப்பதை கூறினார்கள்.
அது தவிர மற்ற நாடுகள் கழிவுநீர் சுத்திகரிப்பு,கார்பன் நிலைபாடு, கைவினைப்பொருட்கள்,பூச்சி கட்டுப்பாடு, எரிபொருள் என பயன்கள் நீண்டு செல்கிறது.