Sunday, February 24, 2008

வெட்டி வேர் கைவினை பொருட்கள்

கண்காட்சியிலிருந்த இந்திய வெட்டி வேர் கைவினை பொருட்களின் காட்சி. முழுவதும் வேரினால் செய்யப்பட்டது. அழகாகவும், மணத்துடனும் நேர்த்தியாகவும் இருந்தது.

9 comments:

பாச மலர் / Paasa Malar said...

வெட்டி வேரின் வாசத்தையும் தாண்டிய விஷயங்கள்..புகைப்படங்கள் பகிர்வுக்கு நன்றி..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெட்டிவேரில் செருப்பும் இருக்கிறதே இதற்கு எதும் மருத்துவகுணம் இருக்கிறதா?
பானைபோல இருப்பதும் அந்த பாய்களும் நல்ல உபயோகமான பொருளாகத் தெரிகிறது.
அழகுப்பொருள்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது.

நானானி said...

ஆகா! என்ன மணம்! என்ன மணம்!
என்ன குளிர்ச்சி என்ன குளிர்ச்சி!
அழகோஅழகு! கண்காட்சி எங்கே என்று சொல்லவும். அல்லது எங்கே கிடைக்கும் என்றாவது சொல்லவும். நல்ல பதிவு!!

Yogi said...

ஆனந்த விகடனில் தங்கள் வலைப்பதிவு கண்டு இங்கு வந்தேன். தமிழ்மணத்தில் தங்கள் வலைப்பதிவை இணைத்தால் இன்னும் நிறையப் பேரை தங்களின் பதிவு சென்றடையுமே!!

வின்சென்ட். said...

திருமதி.பாசமலர்
திருமதி.கயல்விழி முத்துலெட்சுமி
திருமதி.நானானி
திரு.பொன்வண்டு

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.கொச்சி நகரில் நடந்த இந்தியாவின் முதல் வெட்டி வேர் பயிலரங்கத்தில் எடுக்கப்பட்டது. விலாசம் விரைவில் தருகிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொன்வண்டு ஏற்கனவே இவர் பதிவுகள் தமிழ்மணத்தில் திரட்டப்படுகின்றது.. எனினும் அவ்வப்போது பின்னூட்டங்களை வெளியிடுவது இல்லை என்பதால்
மிகக்குறைவாக கவனிக்கப்படுகிறது என நினைக்கிறேன்..

வின்சென்ட். said...

திருமதி.கயல்விழி முத்துலெட்சுமி,

நீங்கள் கூறுவது சரிதான். பின்னூட்டங்களை வெளியிடுவது தாமதமாவதற்கு வெளியூர் பயணம்,தோட்டம் செல்வது, மின்வெட்டு போன்றவை, இருப்பினும் முடிந்த அளவிற்கு விரைவாக வெளியிடுகிறேன் . இன்னும் பதிவிடுவதில் தேர்ச்சி இல்லை என்பதும் உண்மை. இருப்பினும் நல்ல விஷயங்கள் மக்களை சேரவேண்டும் என்பதே என் ஆவல்

Anonymous said...

mekavum kulirci

வின்சென்ட். said...

திரு.அனானி

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.