Monday, November 26, 2007

செடிகள் வளர்க்கும் பை (Grow Bag )

மாற்றம் நிலையானது என்பார்கள்" இந்த வழியில் விவசாயத்தில் நிறைய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் மண்ணில்லா விவசாயம் (Soil less culture). பொதுவாக நகர பகுதியில் இட பற்றாக்குறை
காரணமாக சிறு நகரங்களில் கூட அடுக்குமாடி குடியிருப்புக்கள் மிக அதிகமாக தோன்ற ஆரம்பித்துள்ளது. அதிக வாங்கும் சக்தி காரணமாக எல்லோரது வீட்டிலும் அழகு செய்யும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது குறிப்பாக அழகுச்செடிகள் வளர்ப்பு. கணவன்,மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் போது ஆர்வம் இருப்பினும் அதனை கவனிப்பதற்கு நேரம், நல்ல மண், தண்ணீர் (குடிப்பதற்கே இல்லாத போது) தேவை. இவைகளை பூர்த்தி செய்ய வந்துள்ள ஒரு பொருள்தான் இந்த செடி வளர்க்கும் பை (Grow Bag ). விவசாயத்திற்கு வேலையாட்கள் பற்றாக்குறை, குறைந்த நீர், இடம், அதிக மகசூல் என பசுமைக்கூடத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்.

கோவையில் நடந்து முடிந்த விவசாய கண்காட்சி 2007 இல் காயர் வாரியத்தில் (Coir Board ) அரங்கத்தில் அறிமுகத்திற்கு வைத்திருந்தார்கள் விசாரித்தபோது ஏற்றுமதிக்கானது என்றார்கள். இதற்கு முன்பே வளர்ப்பிற்காக என்னிடம் இருந்ததால் அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

புற உதா கதிர் (UV) தடுப்பு வசதியுடன் வெளி பகுதி வெண்மை நிறத்திலும் உள் பகுதி கறுப்பு நிறத்திலும் உள்ள இந்த பையினுள் 98 x 18 x 4.5 செ.மீ அளவில் சுத்தம் செய்யப்பட்ட தென்னை நார் கழிவு இருக்கும். நீர்
ஊற்றிய பின் 100 x 20 x 11 செ.மீ அளவில் பெருக்கமடையும். பை கிடைத்தவுடன் தேவையான அளவில் நாம் துவாரம் செய்து அதனுள் மண்புழு உரம் நிறைத்து நீர் ஊற்றினால் இயற்கை முறையிலும் திரவ இரசாயன NPK தர தற்போதுள்ள முறையிலும் பயிர் செய்ய தயாராகிவிடும்.

தென்னை நார் கழிவு ஒரு காலத்தில் சுற்றுச்சுழல் மாசுபாடு பொருளாக இருந்தது போய் இன்று உலக தரம்

வாய்ந்த மதிப்பூட்ட பட்ட பொருளாக மாறியுள்ளது.

நீரை மறு உபயோகம் (Reuse குறிப்பாக சமையலறை கழிவு நீர்) செய்யமுடிகிறது.

நீரின் அளவும் மிக மிகக்குறைவு.

களைகள் முளைப்பது இல்லை என்றே சொல்லலாம்.

மண் இல்லாமையால் வேர் மூலம் வரும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

மதிப்பு மிக்க மலர் மற்றும் ஸ்டிராபெரி (Strawberry)பழ சாகுபடிக்கு ஏற்றது (பசுமைக்கூடம்).

வீடுகளில் எளிதாக வைத்து காய்கறிகள் வளர்க்கலாம்.


9 comments:

Kasi Arumugam said...

வாங்க, வின்சென்ட், மஞ்சூர் ராசா வீட்டில் உங்களை சந்தித்திருக்கிறேனோ? பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துகொள்வத்ற்கு நன்றி.

அக்ரி இன்டெக்ஸ் 2007 பொருட்காட்சிக்கு போக நினைத்தும் போக முடியவில்லை. போன இருவர் சொன்னதைப் பார்த்தால் பெரிய அளவில் புதிய விசயங்களைக் காணோம் என்றார்கள்.

seethag said...

ரொம்ப நன்றாக இருக்கிறது திரு.வின்சென்ட் .அந்த ப்ளாஸ்டிக் தேவையா? இல்லை வெறுமனே தேங்காய் நார் மட்டும் போதுமா?

வின்சென்ட். said...

திரு.காசி ஆறுமுகம்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் ஞாபக சக்திக்கு பாராட்டுக்கள். நாம் திரு.மஞ்சூர் ராசா அவர்கள் வீட்டில் தான் சந்தித்தோம். அக்ரி இன்டெக்ஸ் 2007 உங்கள் நண்பர்கள் சொன்னது சரியே. புதிய விசயங்கள் மிக குறைவு. அக்ரி இன்டெக்ஸ் போக வேண்டிய தூரம் மிக அதிகம்.

Anonymous said...

where did u get this Grow bags?

வின்சென்ட். said...

திருமதி.சீதா, திரு. Rayson
உங்கள் வருகைக்கு நன்றி.
அந்த ப்ளாஸ்டிக் uv பாதுகாப்பிற்காக, மேலும் நீர் ஆவியாகாமல் இருப்பதற்கும், நீர் வெளியெராமல் இருப்பதற்கும் அது வேண்டும்.

ramana said...

wow nice. really its useful for now. i want to know more details about grow bags. did you mail the details. I want to start a business with grow bags so kindly send the relevent details also. my mail id ramanan.rathinam@gmail.com

Unknown said...

Is it available in the local market?

srinis

வின்சென்ட். said...
This comment has been removed by the author.
வின்சென்ட். said...

Brindha

It is available in local market. If you are in Bangalore Contact kabinibiotech@hotmail.com