Saturday, November 24, 2007

ஒன்றும் வாங்கக்கூடாத நாள் (BUY NOTHING DAY) 24-11-2007


இப்படி கூட ஒரு நாள் இருக்கிறதாவென்று நீங்கள் வியப்படையக்கூடும். ஆனால் கனடா நாட்டில் இது 1992 ஆண்டு அதிக வாங்கும் சக்தியினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய துவக்கப்பட்டது. பின் அது வலுப்பெற்று 1997 முதல் அமெரிக்காவின் அறுவடை நன்றி நாளுக்கு (நவம்பர் மாதம் 4 வது வியாழக்கிழமை American Thanksgiving Day) பின்வரும் வெள்ளிக்கிழமை வடஅமெரிக்காவிலும் மற்ற இடங்களில் சனிக்கிழமையும் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு பொருட்கள் வாங்க ஆரம்பிக்கபடும் நாட்களில் இதுவும் ஒரு நாள் அன்று இது அனுசரிக்கப்படுவது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான். வளர்ந்த நாடுகளில் தான் அதிக வாங்கும் சக்தி காரணமாக மக்கள் பருமனுடன் இருந்து நிறைய நோய்களை வரவழைத்து சுற்றுச்சூழலைக் கெடுத்தார்கள் என்றால் இன்றோ நம் நாட்டிலும் அதிக வாங்கும் சக்தி காரணமாக மக்கள் பருமனுடன் காணப்பட்டு சுற்றுச்சூழலைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டிலேயே ஒருவேளை உணவிற்கே வாங்கும் சக்தியில்லாத வேளையில் மக்கள் இருக்கும்போது எவ்வளவோ கலாச்சார சீரழிவுகளை காப்பியடிக்கும் நாம் ஏன் இந்த கருத்துள்ள நல்ல நாளை அனுசரிக்கக்கூடாது. இதனால் வருடத்தில் ஒரு நாளாவது குப்பைகளை தவிர்த்து சற்றுச்சூழலை பாதுகாத்து பிறர்க்கு உதவலாமே!!!

4 comments:

cheena (சீனா) said...

நல்லதொரு பதிவு - கடைப்பிடிக்கலாமே - தவறில்லையே

வெங்கட்ராமன் said...


எவ்வளவோ கலாச்சார சீரழிவுகளை காப்பியடிக்கும் நாம் ஏன் இந்த கருத்துள்ள நல்ல நாளை அனுசரிக்கக்கூடாது. இதனால் வருடத்தில் ஒரு நாளாவது குப்பைகளை தவிர்த்து சற்றுச்சூழலை பாதுகாத்து பிறர்க்கு உதவலாமே!!!


நன்றாக சொன்னீர்கள் வின்சென்ட்.

வின்சென்ட். said...

திரு.வெங்கட்ராமன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

வின்சென்ட். said...

திரு.சீனா

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.