அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.
திரு.மாசானபு புகோகா.
தலை சிறந்த ஜப்பானிய இயற்கை ஞானி
பாறையில் வளர்ந்துள்ள ஆலமரம் வனத்துறையின் ஆழியார் மூலிகை பண்ணையில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் சோதனைக்காக பாறையின் மேல் வைக்கப்பட்ட இந்த ஆலமரக் கன்று பாறையிலுள்ள மிக சிறிய வெடிப்பில் தனது வேர்களை விட்டு பிளந்து இன்று பெரிய விருட்ஷமாக மாறத் துவங்கியுள்ளது. கூடவே ஒரு கொடிக்கும் வளரும் சுழலையும் உருவாக்கி தந்துள்ளது. திரு.மாசானபு புகோகா சொன்னது உண்மைதானோ? சுனாமிக்குப் பின் எளிய அலையாத்திக் காடுகளை வளர்க்க வலியுறுத்தாமல் பெரும் பொருட் செலவில் தடுப்பு சுவர் எழுப்பலாம் என்பதும், மரங்களை நட்டு மழையை பெற்று சேமிப்பதை வலியுறுத்தாமல் கடல் நீரை குடிநீராக மாற்றக் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யலாம் என்பதும் இந்த வகைதானோ? என்ற ஐயம் என்னுள் நீண்ட நாட்கள் இருந்ததுண்டு.
இயற்கை நமக்கு கற்பதற்கு நிறைய தருகிறது. நாம் கற்க மறுக்கிறோம். விளைவுகளை நாம் தினமும் செய்தியாக படிக்கிறோம், பார்க்கிறோம். காலம் தாழ்த்தாமல் கற்க ஆரம்பிப்போம்.
5 comments:
இயற்கை நமக்கு கற்பதற்கு நிறைய தருகிறது. நாம் கற்க மறுக்கிறோம். விளைவுகளை நாம் தினமும் செய்தியாக படிக்கிறோம், பார்க்கிறோம். காலம் தாழ்த்தாமல் கற்க ஆரம்பிப்போம்.
எக்காலத்திற்கும் பொருந்தும் வாசகம்
மக்கள் இதை உணரும் காலம் எப்போது என்று தான் தெரியவில்லை. . . .
நன்றி திரு.வெங்கட்ராமன்.
நாம் கற்க மறுக்கும் போது இயற்கை சுனாமியாக,கத்தரீனாவாக, நிலச்சரிவாக, சோமாலியா சூடான் வறட்சியாக,கீரிஸ் காட்டு தீயாக வந்து நமக்கு கட்டாய பாடத்தை படிக்க வைக்கிறது.
கல்லினுள் தேறைக்கு உணவு, கல்லுக்கு மேல் ஆலமரமும் வளர்துள்ளதே? இயற்கையை கற்போம். நன்றி.
வின்செண்ட் அவர்களுக்கு,
வணக்கம்; அடியேன் பசுமை விகடன் இதழில் கோயம்புத்தூர் பகுதிக்கான விற்பனை பிரதிநிதி. தங்களது மரவளம் வலைப்பூ கண்டேன். தகவல்கள் சுவையாக இருந்தது. வாழ்த்துக்கள்.
மிக்க அன்புடன்
செல்வேந்திரன்.
திரு.செல்வேந்திரன் அவர்களுக்கு,
தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
Post a Comment