Monday, August 27, 2007

விவசாயத்தில் விந்தை புரியும் இரு நாடுகள்

1. கியுபா
பல நூறு ஆண்டுகள் பழமை கொண்ட வெப்ப மண்டல தீவு நாடு. 1959 ஆண்டு முதல் சோஷியலிச நாடாக மாறியது. திரு. பிடல் காஸ்ட்ரோ அவர்களின் தலைமையில் இன்று வரை வெற்றிகரமாகவும் கம்பீரமாகவும் தனது பொருளாதாரத்தை உயர்த்திய நாடு. அமெரிக்காவின் சிஐஏ (CIA) சுமார் 638 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்றது சரித்திரம். இயற்கையாக புயல் அதிகம் வரும் நாடு. பல இன மக்கள் வாழும் நாடு. 1991 ஆண்டு சோவியத் யூனியன் பிரிந்த போது சோவியத் யூனியனிலிருந்து
இறக்குமதி செய்த சுமார் 90000 டிராக்டருக்கு தேவையான டீசல்,இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் கேள்விக் குறியானது. அவர்களின் முக்கிய ஏற்றுமதியான கரும்பு விவசாயம் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடையும் சேர்ந்து கொண்டதால் உணவு தட்டுபாடு ஏற்பட்டது. ஆனால் விரைவாக இயற்கை விவசாயத்திற்கு மாறி பின் நகர விவசாயத்தை ஊக்கப்படுத்தி இன்று

தன்னிறைவு பெற்று மற்ற தென் அமெரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. விவசாயத்தில் பழமையும் புதுமையும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கூட்டுறவின் வயது சுமார் 48 ஆண்டுகள்.
2. இஸ்ரேல்

1948 ஆண்டு தோன்றிய நாடு. தோன்றிய நாள் முதல் இன்று வரை அண்டை
நாடுகளுடன் சண்டையிட்டுக் கொண்டே விவசாயத்தில் விந்தை புரியும் நாடு. இயற்கை வளம், நீர் பற்றாக்குறையுள்ள நாடு. இருக்கின்ற வளத்தை சிறப்பாக பயன்படுத்தி குளிர் பிரதேசத்தில் வளரும் "டுலிப்" (Tulip)மலர்களயே ஹாலந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நாடு . சொட்டு நீர் பாசனம்,பசுமை கூடம், மூடாக்கு (sheet mulching) என அதிக உற்பத்தியை தரும் தொழில் நுட்பங்கள் இவர்களது சிறப்பு. மற்றொரு சிறப்பு கூட்டுறவு முறையில் உற்பத்தி மற்றும் சந்தை. கிப்புட்ஸ் (Kibbutz),மோஷாவ் (Moshav) என அந்த கூட்டுறவு முறைகளுக்கு பெயர்கள். கிப்புட்ஸ் முறைக்கு வயது சுமார் 90 ஆண்டுகள். (நாடு தோன்றியதிற்கும் கிப்புட்ஸ் முறைக்கும் ஆண்டுகளில் வித்தியாசம் உண்டு.)


விஷயத்திற்கு வருவோம் உற்பத்தி மற்றும் சந்தை இரு நாடுகளிலும் கூட்டுறவு முறையில் நடைபெறுவது அவர்களின் வெற்றி. பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறி கொண்ட சுரண்டல்கள் அங்கு இல்லை. நம் நாட்டில் கூட்டுறவு என்பது சமுதாய பிரபலங்களின் கையிலிருப்பதால்
சாதனைகள் இல்லை. அதையும் மீறி வந்து சாதனை செய்தது " அமுல்". ஆனால் அந்த கூட்டுறவு சாதனைக்கு காரணமான திரு.குரியன் சென்ற ஆண்டு நீக்கப்பட்டார். சாதனை தொடருமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கூட்டுறவிற்கு பெயர் பெற்ற கோவையின் " சிந்தாமணி கூட்டுறவு அங்காடி" இன்று இல்லை என்பது வரலாறு.


உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் போன்ற பொருளாதார மாற்றத்தால் வரும் 10-20 ஆண்டுகளில் சிறு,குறு விவசாயம் இருக்காது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.ஒப்பந்த முறை அல்லது கம்பெனி விவசாயம் தான் இருக்கும் என்கிறார்கள் சமுதாய பிரபலங்கள். ஆனால் கூட்டுறவு முறை அதனை முறியடிக்கும் என்பது நிருபிக்கப்பட்ட வரலாற்று
உண்மை. அதற்கு லாப வெறியற்ற சமுதாய வளர்ச்சிக்கு உடன்படும்
மனங்களும், அதையும் மீறினால் தண்டிக்க கடுமையான சட்டமும் தேவை.

கூட்டுறவே நாட்டுயர்வு.

5 comments:

வவ்வால் said...

நல்லப்பதிவு, இதில் கியுபாவை வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம் , இஸ்ரேலை ஏன் சேர்க்கிறீர்கள் அவர்கள் விவசாயத்தில் சாதனை புரிந்தாலும் அவர்கள் ஒரு வல்லரசு போன்றவர்கள், அதிக பணம் , தொழில்நுட்பம், மேலை நாடுகளின் ஆதரவு எல்லாம் இருக்கிறது,அவர்களும் ஒரு ஏகாதிபத்திய சக்தி தான்!

கியூபா சாதித்தது தான் பெரும் சாதனை!

வின்சென்ட். said...

திரு.வவ்வால் அவர்களுக்கு

இஸ்ரேலை சேர்க்க காரணம் சிறந்த தொழில்நுட்பம் + கிப்புட்ஸ்,மோஷாவ் என அந்த கூட்டுறவு முறை. பணம் மற்ற ஏகாதிபத்திய நாடுகளிடமும் உண்டு ஆனால் செயல்பாட்டில் அவர்கள் இல்லை. எனவே சேர்த்திருக்கிறேன்.

தங்களின் கருத்திற்கு நன்றி.

Anonymous said...

Good post. keep it up.



senthil kumar
namakkal

Anonymous said...

நல்ல கருத்துகள்.

வெங்கட்ராமன் said...

கியூபாவைப் பற்றியும், இஸ் ரேலைப் பற்றியும் புதிய விஷயத்தை தந்திருக்கிறீர்கள்.

"கூட்டுறவே நாட்டுயர்வு."