கோவை - பொள்ளாச்சி பாதையின் ஓரங்களில் மலை மலையாய் குவிக்கப்பட்டிருக்கும் தென்னை நார்க்கழிவுகளையும் அதனை அழிக்க தீ வைத்து சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதும் ஒரு காலத்தில் மனதிற்கு கவலையை அளிக்கும். பின்னர் அதனை யூரியா மற்றும் "பிளிரோட்டஸ்" காளான் கொண்டு உரமாக்கலாம் என்பதும்,தென்னை நார்க்கழிவை சுத்திகரித்து செங்கல் போன்று அழுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள் என்றபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இன்று அதை விட சிறந்த ஓரு அரிய கண்டுபிடிப்பை வலைபதிவு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
கண்டுபிடிப்பாளர்கள் :
டாக்டர். பெ. மல்லிகா, ரீடர்
தேசீய கடல்சார் சயனோபாக்டீரியா ஆய்வுத்துறை
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி - 620 024.
அலைபேசி - 94432-08345
தொலைபேசி - 0431-2407082
மின்னஞ்சல் - malli62@yahoo.com
கண்டுபிடிப்பு:
எளிய முறையில் மிகமிக குறைந்த செலவில் இயற்கையுடன் இணைந்து தென்னை நார்க்கழிவுகளை நீலப்பச்சை பாசி (சயனோபாக்டீரியா) கொண்டு விரைவாக சுமார் 30 - 40 நாட்களுக்குள் உயிர் உரம் தயாரித்து விளைநிலங்களில் பயன்படுத்துதல்.
பயன்கள்.
1. கழிவு உரமாக மாறுகிறது.
2. உழவர்களின் உரச்செலவு குறைகிறது.
3. உற்பத்தியில் கூலியாட்களின் தேவை குறைவு.
4. உற்பத்திக்கு மிக குறைந்த இடம்கூட போதுமானது.
5. மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.
6. சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுகிறது.
7. தென்னை நார்க்கழிவு ஈரப்பதத்தை தக்க வைப்பதால் குறைந்த நீரில் வேளாண்மை செய்யலாம்.
8. பயிர்களின் உற்பத்தி பெருகுகிறது.
9. நகர/மாடி வீட்டு தோட்டங்களுக்கு மிகவும் ஏற்றது.
10. முக்கியமாக வேலை வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்;
இதனை படித்துவிட்டு அப்படியே சென்றுவிடாமல் உங்கள் விவசாய நண்பர்கள், சுய உதவிக்குழுக்கள், NGOக்கள், வேலையில்லா இளஞர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் தெளிவு மற்றும் பயிற்சி பெற அலைபேசி, தொலைபேசி, மின்னஞ்சலுடன் விலாசமும் தந்திருக்கிறேன். தொடர்பு கொண்டு பயன்பெறுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
நகர/மாடி வீட்டு தோட்டங்களுக்கு மிகவும் ஏற்றது.
எப்படி? ஏதாவது விளக்கம் உள்ளதா?
புதிய கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்.
நல்ல கண்டுபிடிப்பு.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி வின்சென்ட்.
கேக்க சந்தோஷமா இருக்கு..வின்செண்ட் உங்க பதிவில் எப்போதும் நல்ல செய்திகள் வ்ந்து கொண்டே இருக்கிறது.
வடுவூர்குமார் கேட்பது போலவே எனக்கு அதை பற்றி சொல்ல்லுங்கள் பின்னூட்டத்தில்.
good message for our farmers especially when they are looking for low cost inputs for high yield.
Good work by Prof.P Malliga,and good service by P.Vincent for putting it in blogspot.Keep it up.
Narayanaswamy, brnswamy@gmail.com
Coimbatore
தர்ம்புரி மற்றும் கிருஸ்ணகிரி மாவட்டங்களில் சாலை ஓரங்களில் கிடக்கும் தென்னை நார் களிவுகளில் வரும் புகைகள் இனி குறைய வாய்ப்புள்ளது. நல்ல உரம் கிடைக்கும். மிக்க நன்றி தண்பரே. தொடரட்டும் நல்ல பணி.
very good informative post! இதனை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கலாம்.நீலப்பச்சை பாசி மூலம் மட்டுமல்லாமல் ஏற்கனவே , மண்புழு கொண்டு தென்னை நார்கழிவு மற்றும் இதற தாவர கழிவையும் மக்க வைத்து ஊட்டசத்து மிகுந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதற்கு வெர்மி கம்போஸ்ட் என்று பெயர்.
இது போன்ற இயற்கை உரங்களை இன்னும் பரவலாக பயன்படுத்த முயற்சிக்கவில்லை.
பின்னூட்டம இட்ட அணைவருக்கும் நன்றி. நகர விவசாயம் என்ற பதிவை இடவிருப்பதால் திரு. வடுவூர் குமார், திருமதி. முத்துலெட்சுமி இருவருக்கும் விரிவான விளக்கம் கிடைக்கும்.
திரு வவ்வால் அவர்களுக்கு தென்னை நார்கழிவில் அங்ககக் கூறுகளான லிக்னின் சுமார் 30% மும் செல்லுலொஸ் சுமார் 26.5% உள்ளன. இவையிரண்டும் எளிதில் மக்காதவை. நேரடியாக பயிர்களுக்கு இடமுடியாது காரணம் கரிமம் 29%.எனவே தான் யூரியா + பிளிரோட்டஸ் காளான் கொண்டு மக்க வைப்பார்கள். பொதுவாக மண்புழுக்கள் விரும்பி கால்நடை,தாவர கழிவுகளை உண்ணும் ஆனால் தென்னை நார்கழிவை விரும்பி உண்பதில்லை. மக்கும் காலமும் அதிகம். அவ்வாறு யாரேனும் செய்தால் அறிந்துகொள்ள ஆசைபடுகிறேன்.
Post a Comment