கோவை - பொள்ளாச்சி பாதையின் ஓரங்களில் மலை மலையாய்

குவிக்கப்பட்டிருக்கும் தென்னை நார்க்கழிவுகளையும் அதனை அழிக்க தீ வைத்து சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதும் ஒரு காலத்தில் மனதிற்கு கவலையை அளிக்கும். பின்னர் அதனை யூரியா மற்றும் "பிளிரோட்டஸ்" காளான் கொண்டு உரமாக்கலாம் என்பதும்,தென்னை நார்க்கழிவை சுத்திகரித்து செங்கல் போன்று அழுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள் என்றபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இன்று அதை விட சிறந்த ஓரு அரிய கண்டுபிடிப்பை வலைபதிவு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
கண்டுபிடிப்பாளர்கள் : டாக்டர். பெ. மல்லிகா, ரீடர்
தேசீய கடல்சார் சயனோபாக்டீரியா ஆய்வுத்துறை
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி - 620 024.
அலைபேசி - 94432-08345
தொலைபேசி - 0431-2407082
மின்னஞ்சல் - malli62@yahoo.com
கண்டுபிடிப்பு:
எளிய முறையில் மிகமிக குறைந்த செலவில் இயற்கையுடன் இணைந்து தென்னை நார்க்கழிவுகளை நீலப்பச்சை பாசி (சயனோபாக்டீரியா) கொண்டு விரைவாக சுமார் 30 - 40 நாட்களுக்குள் உயிர் உரம் தயாரித்து விளைநிலங்களில் பயன்படுத்துதல்.
பயன்கள்.
1. கழிவு உரமாக மாறுகிறது.
2. உழவர்களின் உரச்செலவு குறைகிறது.
3. உற்பத்தியில் கூலியாட்களின் தேவை குறைவு.
4. உற்பத்திக்கு மிக குறைந்த இடம்கூட போதுமானது.
5. மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.
6. சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுகிறது.
7. தென்னை நார்க்கழிவு ஈரப்பதத்தை தக்க வைப்பதால் குறைந்த நீரில் வேளாண்மை செய்யலாம்.
8. பயிர்களின் உற்பத்தி பெருகுகிறது.
9. நகர/மாடி வீட்டு தோட்டங்களுக்கு மிகவும் ஏற்றது.
10. முக்கியமாக வேலை வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்;
இதனை படித்துவிட்டு அப்படியே சென்றுவிடாமல் உங்கள் விவசாய நண்பர்கள், சுய உதவிக்குழுக்கள், NGOக்கள், வேலையில்லா இளஞர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் தெளிவு மற்றும் பயிற்சி பெற அலைபேசி, தொலைபேசி, மின்னஞ்சலுடன் விலாசமும் தந்திருக்கிறேன். தொடர்பு கொண்டு பயன்பெறுங்கள்.