Saturday, February 23, 2013

விரைவாக மரங்களை உருவாக்கும் திரு.அர்ஜுனன்.


திரு.அர்ஜுனன்.
அண்மையில் கோவையில் நடைபெற்ற மரமேளாவில் மரங்களை கிராமம் கிராமமாக வினியோகம் செய்யும் அசாதாரண மனிதர் ஒருவரை அறிமுகப்படுத்தினார்கள். திருநெல்வேலி விருதுநகர் தொடர் வண்டிகளில் டீ, காபி வியாபாரம் செய்த 42 வயது நிரம்பிய திரு.அர்ஜுனன். தனது மகனின் மறைவால் தவித்துக் கொண்டிருந்தவருக்கு தொடர் வண்டியில் பயணம் செய்த பெரியவர் ஒருவர் முற்பிறவி பாவம், இப்பிறவி தவறுகள் மரங்களை நட்டால் மன்னிக்கப்படும் என்று கூற, சரியெனப்பட்டதால் தீவிரமாக சற்று வித்தியாசமான மரவளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். விதை மூலம் மரமாக வளர பல ஆண்டுகள் ஆகும். ஆனால் 6 அடி மரக்கிளைகளை வெட்டி (போத்துமுறையில்),  ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி மரங்களாக உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் திரு.அர்ஜுனன்.  விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நடப்படுவதால் 90 நாட்களிலேயே நிழல் தரும் மரமாக வளர்ந்து தனது பணிகளைச் செய்கிறது. கிராம பஞ்சாயத்துகள் மூலம் வேர் விட்ட மரபோத்துக்களை கிராமங்களுக்கு இலவசமாகக் கொடுக்கவும் தனிநபர்கள் என்றால் பயிற்சி தர தயாராக இருப்பாதாகவும் கூறுகிறார் திரு.அர்ஜுனன். இயற்கை சேவையில் ஈடுபட்டிருக்கும் இவரை பற்றி பதிவிடுவதில் இவ்வலைப் பூ மகிழ்ச்சி கொள்வதோடு இவரை பயன்படுத்தி மேலும் தமிழகத்தை பசுமைபடுத்த உங்களை கேட்டுக் கொள்ளுகிறது.

தொடர்புக்கு :
திரு.அர்ஜுனன்
அலைபேசி: 97903 95796
www.chepparaivalaboomigreenworld.com

Sunday, February 10, 2013

உலக நீர் நாள் 2013 விழிப்புணர்வுப் படம்

22 -03- 2013

இந்த வருட 2013 உலக நீர்  நாளுக்கான விழிப்புணர்வு புகைபடத்தின் HTML Code ஐ கீழே தந்திருக்கிறேன். பருவ மழை   குறைவாய் பெய்ததால் உணவு உற்பத்தி குறைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அடுத்து வருவது விலையேற்றம்தான், எனவ வலைப் பூ / வலைதளம் வைத்திருப்பவர்கள்  இந்த HTML Code பயன்படுத்தி தங்களின் வலைப் பூ / வலைதளங்களில் இட்டு விழிப்புணர்வை  ஏற்படுத்துங்கள்.


 
*/ <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmULzCBL-4yo2SK4MNrgFxzyjmSaeBWcrBjnouThhK-xNGctq5AGSIPnXRxA1nzdCyJvd_0R62C_orU-l3bRBo-f8f_2XjED7x6VwsbZrPj2jGhPaYjAD6P44YkunjUNsDLzja_MJfAuw/s1600/2013tamil.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmULzCBL-4yo2SK4MNrgFxzyjmSaeBWcrBjnouThhK-xNGctq5AGSIPnXRxA1nzdCyJvd_0R62C_orU-l3bRBo-f8f_2XjED7x6VwsbZrPj2jGhPaYjAD6P44YkunjUNsDLzja_MJfAuw/s400/2013tamil.gif" width="200" /></a></div>  */

Sunday, January 13, 2013

மனதை நெகிழ வைத்த "பசுமை விகடன்" வாசகர்.



வாசகர்களின் மனதில் ஏற்படுத்தும் மனமாற்றத்தையும், நம்பிக்கையையும்  பொறுத்தது ஒரு கட்டுரையின் வெற்றியும் தோல்வியும். சில தினங்களுக்கு முன் அலைபேசி மூலம் பசுமை விகடன் (10-01-13) இதழில் வந்த  எனது மாடித் தோட்டம் பற்றிய கட்டுரையை படித்து விட்டு, வாசகர் ஒருவர்  கட்டுரை நம்பிக்கை அளிப்பதால் பார்க்க வருவதாக கூறினார். நானும் அலுவல் காரணமாய் வெளியூரில் இருந்ததால் எனது இயலாமையை தெரிவித்தேன். திரும்பவும் இரு தினங்கள் கழித்து  தொடர்பு கொண்டு வருவதாக விருப்பம் தெரிவித்தார். எனக்கோ அவர் எதிர்பார்த்து வரும் அம்சம் நம்மிடம் இருக்குமா? என்ற ஐயம், அவரும் விடுவதாக இல்லை இரவு முழுவதும் பயணித்து 13-01-2013 காலை 10.30 மணிக்கு கோவை வந்தார். விசாரித்ததில் 11 மணிநேரப் பயணம், பயணச் செலவு (வருவதற்கு மாத்திரம்) ரூ.135/=   என்றார்.
பசுமை விகடன் கட்டுரைப் பக்கத்துடன் திரு.ஐயாசாமி.


அவரைப் பற்றி.......திரு.P. ஐயாசாமி, வரகுபாடி கிராமம், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  10வது படித்திருக்கிறார். வேறு உபதொழிலில் பணத்தை இழந்ததால் இதனை உபதொழிலாக செய்ய விருப்பதாகக் கூறினார். கட்டுரை அளித்த நம்பிக்கை, பயண நேரம், செலவு இவைகளை கணக்கிட்டு மன நெகிழ்ச்சியடைந்தேன். எல்லாவற்றையும் பரிசோதித்து விடை பெறுமுன் தான் தேடி வந்த அம்சங்கள் இருப்பதாகவும், நிறைய தெரிந்து கொண்டதாகவும் கூறியவுடன் எனது மனம் திருப்தி அடைந்தது. கட்டுரையின் வெற்றி நிறைய அன்பர்கள் அலைபேசியில் அழைத்தது மற்றும்  திரு.P. ஐயாசாமி அவர்களின் தேடுதல் பயணமும் தான் என்பதில் சந்தேகமில்லை.

சிக்கனமாய் தொங்கும்  தொட்டிகளுக்கு நீர் ஊற்றுகிறார்
கை பம்பை இயக்கிப் பார்க்கும்  திரு.ஐயாசாமி.
சுற்றுச்சுவர் பையுடன்
அகத்தி, முருங்கையை பைகளில்  வளர்ப்பதை பரிசோதித்தார்

நேர்காணல் கண்ட திரு. ஜி.பழனிச்சாமி அவர்களுக்கும், நேர்த்தியான புகைபடங்களை எடுத்த திரு.தி. விஜய் அவர்களுக்கும், பிரசுரம் செய்த பசுமை விகடன் ஆசிரியர் குழுவினருக்கும் பொங்கல் வாழ்த்துகளுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.