Sunday, August 25, 2013

இன்று உலக வீட்டுத் தோட்ட தினம். 25-08-2013



பெருகி வரும் ஜனதொகை, குறைந்து வரும் அல்லது அழிவைத்தரும் மழையளவு, விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுவது, அதிக இரசாயன பயன்பாடு, மரபணு மாற்ற விதைகள், தரமற்ற நிலத்தடி நீர், துரிதஉணவு முறை இவை அனைத்தும் மக்களின் ஆரோக்கிய வாழ்வையும், புரிந்துணர்வையும் கேள்விக் குறியாக்குவதோடு முறைக் கேடான விலைவாசி உயர்வையும், ஊழலையும் நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுப்பதற்கு நாம்மாலான  ஒரு மிக சிறிய வாய்ப்பு இந்த வீட்டுத் தோட்டம்

உலக வீட்டுத் தோட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம்  4 வது ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்த  உலக வீட்டுத் தோட்ட தினத்தில் உங்கள் சிந்தையில் வீட்டுத் தோட்டம் என்னும் சிறு விதையை ஊன்றுங்கள் அது முளைத்து வளர்ந்து விருட்சமாகி உங்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் பயனளிக்கட்டும்.

எனது வீட்டுத் தோட்டம் பற்றிய பழைய பதிவு:

http://maravalam.blogspot.in/2010/10/blog-post_26.html

Sunday, August 11, 2013

உத்தரகாண்ட் மாநில பேரிடரும், “சிப்கோ” இயக்கமும்


மர அழிப்பிற்கு முக்கிய காரணம்  "நகர சிந்தனை"
உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் (Cloud burst) ஜுன் மாதம்  ஏற்பட்ட தொடர்  மழை அந்த மாநிலத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. கேதார்நாத், பத்ரிநாத். ஹரித்வார், ரிஷிகேஷ், சமோலி, ருத்ரபிராயக், என்று வெள்ள பிரளயம்  அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு, சாலைகள் உடைப்பு, ஆறுகளில் பெருவெள்ளம், பல கட்டிங்கள் இடிந்தது, ஆயிரக்கணக்கான உயிர்ப் பலிகள் என்பவை  நம் கற்பனைக்கு எட்டாத பேரிடர் என்பதில் ஜயமில்லை. ஒரு சம்பவம் நடந்தால் எப்படி, எப்போது என்று கேட்பதை விட, ஏன் என்று சிந்தித்தால் பிரச்சனையை எதிர்காலத்திலாவது எளிதாக கையாள முடியும்என்பார்கள்

வரலாற்று சிறப்புமிக்க கேதார்நாத் கோவில்
 வெள்ளப் பெருக்கில் ரிஷிகேஷ் சிவன் சிலை
இந்த பேரிடர் ( Disaster) ஏன்? என்ற கேள்வி விர்க்க முடியாததாக உள்ளது.  40 ஆண்டுகளுக்கு முன்பே சிப்கோ இயக்கம் தனது தொடர் போராட்டத்தால் இந்த பேரழிவை தடுக்க பல்வேறு இன்னல்களுக்கிடையே எடுத்த  முயற்சிதான் இந்த அளவிற்காவது குறைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. சிப்கோ இயக்கம் அதிகமாக பெண்களால் முன்னெடுக்கப்பட்டது என்பது இதன் சிறப்பு

சிப்கோ இயக்கம் பெண்களால் முன்னெடுக்கப்பட்டது 
மக்களின்  பங்களிப்பு  இயக்கத்தின் வெற்றி.
இந்த புண்ணிய பூமியை வரும் தலைமுறையினரும் வணங்கவும், பாதுகாக்கவும்  வேண்டுமானால் மரம் வெட்டுதலை தவிர்த்தல்,  மரம் வளர்ப்பு,    மலைகளை தாரை  வார்ப்பதை  தவிர்த்தல்  போன்றவை பயன் தரும்.

சிப்கோ இயக்கம் பற்றி மேலும் அறிந்து கொள்ள:

நிகமானந்தா கங்கையின் புனிதம் காக்க உயிர் துறந்த மகான்
http://www.maravalam.blogspot.in/2013/03/blog-post_22.html


Tuesday, August 6, 2013

ஹிரோஷிமா நினைவு தினம்.


ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் 68 வது நினைவு தினம். அன்று மறைந்த அப்பாவி மக்களுக்கும், அதன் தொடர்ச்சியாக இன்றும் உடல், உள ரீதியாக கஷ்டப்படும் அப்பாவி மக்களுக்கும் இந்த வலைப் பூவின் ஆழ்ந்த அஞ்சலி.