இந்த வருட சுற்றுச்சுழல் தின கருப்பொருள் உணவு
வீணாக்குதல் பற்றியது. சிந்தியுங்கள், சாப்பிடுங்கள், சேமியுங்கள் (Think, Eat, Save). ஐக்கிய நாடுகள் சபையின்
உணவு மற்றும் விவசாய அமைப்பின் [UN Food and Agriculture Organization (FAO)] சில புள்ளிவிபரங்கள்
நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன.
ஒவ்வொரு வருடமும் 1.3 பில்லியன் டன்கள் உணவுப் பொருட்களை நாம் வீணாக்குகிறோம்.
ஆனால் உலகின் 7 மனிதர்களில் ஒருவர் பட்டினியாக படுக்கைக்குச் செல்கிறார். 5
வயதிற்குட்ப்பட்ட 20,000கும் அதிகமான குழந்தைகள் தினமும் பசியால் மடிகின்றனர். இந்த
உணவு உற்பத்தி என்பது 25% நிலம், 70% நன்னீர், 80% காடுகள் அழிப்பு மற்றும் 30%
பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை
உள்ளட்டக்கியது.
உணவு - நாம் உண்ணுவதற்கு ஏற்ப மாறுவதற்கு முன் உணவில் மறைந்துள்ள நீர் (Virtual Water), உணவு தூரம் (Foodmile), சமைக்க தேவையான
எரிபொருள் மற்றும் நீர் (Cooking fuel+ Water), சமைப்பவரின் திறமை + நேரம் (Cook’s ability+ Time) போன்ற பல்வேறு
அம்சங்களைக் உள்ளடக்கியது. எனவே உண்ணும் உணவை வீணாக்குவதால் மேற்கண்ட முக்கியமான
அம்சங்களை வீணடிக்கிறோம் என்பதை நினைவில் கொண்டு அளவோடு உண்டு சுற்றுச்சுழல்
காப்போம்.
மேலும் படிக்க:-
3 comments:
அனைவரும் அவசியம் உணர வேண்டிய தகவல்கள்... இணைப்பில் உள்ள விரிவான தகவலுக்கும் நன்றி...
வீணடிக்காமல் அளவோடு உண்டு சுற்றுச்சுழல் காப்போம்.
திரு.திண்டுக்கல் தனபாலன்
திருமதி. இராஜராஜேஸ்வரி
உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
Post a Comment