கோடைவிடுமுறையில் பரபரப்பான நகர வாழ்கையிலிருந்து “குளு குளு” மலைவாசஸ்தலங்களை நோக்கி பயணித்து
மிக அதிக தொகைகளை செலவழித்தும் உணவின்றி, நீரின்றி கூட்ட நெரிசலில் “சிக்கி” கவலை தரும் பயணமாக மாறிவிடுவதுண்டு.
மாறாக தமிழ்நாடு வனதுறையின் பரளிக்காடு “சுழல் சுற்றுலா” பரிசல் பயணம், கரைகளில் வனவிலங்குகள், அழகிய பறவைகள்,
ரீங்காரமிடும் வண்டுகள், ஒரு மணிநேர காட்டுப் பயணம் (Trekking), சுகமான ஆற்றுக்
குளியல், சுவையான மதிய உணவு, பழங்குடியின
மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள வாய்ப்பு என இயற்கையை ஒரு நாள் முழுமையாக பரபரப்பின்றி அனுபவிக்க ஒவ்வொரு
வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முன்பதிவு செய்து விடுமுறையை இனிதாக
கழியுங்கள்.
புங்க மரநிழலில் அமர்ந்து பேச ஆசனங்கள் |
அனுபவமிக்க பரிசல் ஓட்டுனர்கள் |
மனதை கொள்ளை கொள்ளும் பரிசல் சவாரி |
சுவைமிக்க உணவை பரிமாறவிருக்கும் மகளிர் குழுவினர் |
வழக்கமான உணவு |
"ஸ்பெஷல்" உணவு ராகிக்களியுடன் கீரை |
விளையாட ஊஞ்சல் |
கோவையிலிருந்து பேருந்து வசதி உண்டு
இந்த உல்லாச பயணத்திற்கு நாம் தரும் தொகை பழங்குடி மக்களின் அடிப்படை தேவைகளான சாலைவசதிகள், கல்வி, சுகாதாரம், குடிநீர், விவசாயதிற்கான உதவிகள் , தொலைதொடர்பு போன்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுகிறது.
தொடர்புக்கு
மாவட்ட வன அலுவலகம்,
கோவை வனக் கோட்டம்,
கோவை
வனவர் – 90470
51011
L. தேசப்பன்
வனச்சரக அலுவலர்
காரமடை வனச்சரகம்
94433 84982.
12 comments:
எழில் கொஞ்சம் இடம்...
தகவலுக்கு நன்றி ஐயா...
உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
நல்ல தகவல். அருமையான இயற்கை சூழல்.பரளிக்காடு பார்க்க ஆவல்.
நன்றி சார்.
உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. மிகக் குறைவான ஜனக் கூட்டம். எழில் மிகு இயற்கை சூழல், மொத்தத்தில் ரம்மியமான இடம்.
விடுமுறைக்குத் தகுந்த அருமையான் தகவல். வாழ்த்துக்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
நல்ல தகவல்.இந்த மாதம் போகிறேன்.
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. சென்று வாருங்கள். வாழ்த்துகள்!!!
Arumayana thagavalukku mikka nandri...
nichayamaga chendru varugiren..
Thank you for your comments.
Thank you for sharing the information.
Thank you for visiting my Blog.
Post a Comment