Tuesday, September 4, 2012

அசோகமரம்- அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரிய மரம்


அசோகமரமும் நெட்டி லிங்கமும்


பெயர்                  : அசோகமரம்
தாவரவியல் பெயர்     :   Saraca asoca
ஆங்கிலப் பெயர்       : Asoka Tree
தற்போதைய நிலை  : அழிவின் விளிம்பு                                                                                IUCN   Status : Vulnerable (IUCN 2.3) 
பாரம்பரிய இந்திய அடையாளங்களில் ஒன்று அசோகமரம். அசோகமரம் என்றவுடன் பொதுவாக நம் நினைவிற்கு வருவது நெட்டிலிங்க மரம் தான். இராமாயன காலத்தில் சீதையை அசோக வனத்தில் சிறை வைத்ததாக படித்திருக்கிறோம். ஆனால் காலப்போக்கில் அந்த உண்மையான மருத்துவ குணமிக்க அசோகமரத்தை விட்டு நெட்டிலிங்கத்தை அசோகமரம் என்று பின்வரும் சந்ததிகளுக்கு  அடையாளப்- படுத்திவிட்டோம். விளைவு இன்று நெட்டிலிங்கத்தை  அசோகமரம் என்று பெரும்பாலானவர்கள் நம்பிக் கொண்டிருப்பது வேதனை தரும் விஷயம்.                        
அசோகமர விதைகள்
அசோகமர பூக்கள்
 பெண்களுக்கான மரம். இதன் பட்டையும் மலர்களும் நமது மருத்துவத்தில் பயன்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு, சூதகவலிக்கு பட்டையை கஷாயம் செய்து அருந்த குணம் உண்டு என இந்திய மருத்துவ நூல்கள் கூறுகின்றன
அசோகமர காய்கள்
அசோகமரம்


இதன் தற்போதைய நிலைமை அழிந்துவரும் இனத்தில் விளிம்பு நிலையில் உள்ளது. இம்மரம் சோகத்தை மாற்றி அசோகத்தை (மகிழ்ச்சியை) தரும் என்பது வழக்கு. மன்மதனின் மலர்கணையில் உள்ள மலர்களில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக ஒவ்வொரு பெண்கள் படிக்கும் கல்விநிலையங்களில் இருக்க வேண்டிய மரம் அசோகமரம். வீடுகளிலும் வளர்க்கலாம்
அசோக மர நாற்றுக்கள்

18 comments:

கோவை நேரம் said...

அரிய தகவல்...காலி இடங்கள் எல்லாம் கான்க்ரீட்களாக மாறும் போது இதை எங்க வளர்க்க முடியும்,,?

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு சார்... நன்றி...

வின்சென்ட். said...

உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. நானே நாற்றுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளேன்.

வவ்வால் said...

நல்ல தகவல்,

அதானே எங்கேப்பார்த்தாலும் அசோக மரம் இருக்கேன்னு நினைச்சேன் ,ஐஐ.டி,அண்ணா பல்கலையில் கூட சாலையின் ரெண்டுப்பக்கமும் வரிசையா இருக்கும் இம்மரம், ஆனால் ஆனால் உண்மையான அசோக மரம் வேற ஒன்றா, பேர மாத்திவச்சி உண்மையான மரம் அழிய வைக்கிறாங்க போல.

அரசாங்கம் உண்மையான அசோகமரத்தினை இனி
"avenue tree" ஆக நட வேண்டும் அப்படி செய்தாலே மரம் அழியாம காப்பாற்றிடலாம்.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு நன்றி.

"உண்மையான அசோக மரம் வேற ஒன்றா, பேர மாத்திவச்சி உண்மையான மரம் அழிய வைக்கிறாங்க போல".

அப்படியொரு சிக்கலும் உண்டு.

"avenue tree" ஆக நடுவதில் ஒரு சிறிய சிக்கல் பட்டையை மருத்துவதிற்காக உரித்து சென்று விடுகின்றனர். எனவே கொஞ்சம் பத்திரமாக காம்பௌண்ட் உள்ள நிறுவனங்களில் வைக்கலாம்.

குட்டிபிசாசு said...

//மன்மதனின் மலர்கணையில் உள்ள மலர்களில் இதுவும் ஒன்று. //
இந்த தகவலை 'அஷோக் கி பூல்' என்று ஹிந்தியில் ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். நம்ம ஊரு அசோகமரத்தில் பூவே இல்லையே என யோசித்தேன். இப்போது தான் உண்மையான அசோக மரத்தைப் பற்றி அறிந்தேன்.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு நன்றி. பதிவு இடும் போது ஒரு தயக்கம் இருந்தது.ஆனால் இப்போது மனநிறைவு.

Unknown said...

இதற்க்கு தண்ணீர் அதிகம் தேவைப் படுமா?

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு நன்றி. இதற்க்கு தண்ணீர் அதிகம் தேவை இல்லை.

Unknown said...

இதன் நாற்று எங்கே கிடைக்கும்?

வின்சென்ட். said...

இந்த வருடத்திற்கான நாற்றுகள் என்னிடத்தில் உண்டு. வருடா வருடம் குறைந்த அளவில் செய்கிறேன்.

கலாகுமரன் said...

"நெட்டிலிங்க மரத்தை தான் அசோக மரம் என்றே பலருக்கும் நினைத்திருக்கிறார்கள்" இந்த நெட்டிலிங்க மரம் அதிக நீர் உருஞ்சும் மரம் என்று கேள்விபட்டேன். "உண்மையான அசோக மரம் பற்றிய விளக்கம் ப்ளஸ் அவேர்னஸ்" இந்த பதிவு.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

குடந்தை அன்புமணி said...

தகவல்கள் புதிது... மிக்க நன்றி... வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டீர்கள் அல்லவா... இனி மாற்றம் ஏற்படும்...

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

Unknown said...

போன ஆகஸ்டில் கன்றுகள் பதிவு செய்து ஒரு மாதம் ஆகி விட்டது. அடுத்த முறை முயல்கிறேன் என்று எழுதியிருந்தீர்கள். தற்போது விதைகள் கிடைக்குமா. அனுப்ப இயலுமா?

வின்சென்ட். said...

மே அல்லது ஜூன் மாதம் விதைகள் வரும் அப்போது தருகிறேன்.

Sridhar said...

அன்புள்ள வின்சென்ட், உங்களை எப்படி தொடர்பு கொள்வது? சில மரங்களைப்பற்றி பேச வேண்டும்