உலகின் சிறந்த நூறு புத்தகங்களில் ஒன்றாக டைம் பத்திரிக்கை தேர்ந்தெடுத்த “Small is Beautiful” என்ற புகழ் பெற்ற நூல்
இப்பொழுது திரு எம். யூசுப் ராஜா அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு "சிறியதே அழகு" என்று தற்போது
விற்பனையில் கோவை புத்தகக் கண்காட்சியில் பார்த்த போது மனதிற்கு மகிழ்ச்சியாக
இருந்தது. ஏற்கனவே நான் இந்நூலுக்கு
எழுதிய விமர்சனத்தை மீண்டும் பதிவிடுகிறேன்
E.F.ஷூமாக்கர் என்ற
பொருளாதார நிபுணரை நான் பொருளாதார தீர்க்கதரிசியாகத்தான் பார்க்கிறேன். சில
ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய “Small is Beautiful” படித்தேன். எவ்வளவு தீர்க்கமாய் எதிர்காலத்தை
கணித்திருக்கிறார் என்று வியந்ததுண்டு. ஜப்பான் சுனாமி அதன் பின் ஏற்பட்ட அணு உலை
பாதிப்புக்குப் பின் மீண்டும் படிக்கவேண்டுமென்று நினைத்தபோது பரிசாக அப்புத்தகம்
கிடைத்தது. 1973 ஆண்டு வெளியிடப்பட்டது அப்புத்தகம். ஆனால்
உலகின் சுற்றுச்சுழல், இயற்கை விவசாயம் ( குறிப்பாக மேல் மண் Top Soil) , கல்வி, எரிபொருள், அணுசக்தி, நிலைத்த பொருளாதாரம், உதவிகள் என்று
எழுபதுகளில் அவர் பேசியது,
எழுதியது இன்று
நிஜமாகி வருவது அவரின் தீர்க்கமான கணிப்புக்கு சான்று. ஆட்சியாளர்களும், கண்டிப்பாக எல்லா துறை மாணவர்களும் படிக்க வேண்டிய ஒரு நூல். மகாத்மா காந்தி
அவர்களின் மேற்கோள்கள் நிறைய உண்டு.
குறிப்பு
நூல்களில் இரு இந்திய நூல்களும் உண்டு
1. Art and Swadeshi By Ananda K. Coomaraswamy
2. Economy of
Permanence By J.C. Kumarappa.
எனது பழைய பதிவு
நூல் கிடைக்குமிடம் :
எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி. 642 002.
தொலைபேசி 04259-226012,
அலை பேசி 98950 05084
விலை: ரூ.180/=
2 comments:
நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு மிக்க நன்றி...
உங்கள் வருகைக்கும், பதிவு துரிதமாக இயங்க செய்த உதவிக்கும் மிக்க நன்றி.
Post a Comment