Saturday, April 28, 2012

வெண்நுணா (நோனி) – சர்வரோக நிவாரணி


தாவரவியல் பெயர் : Morinda Citrifolia
தமிழ் பெயர்        : வெண்நுணா,
மற்ற பெயர்கள்     : இந்தியன் மல்பெரி
  மாற்று மருத்துவத்தில் மக்கள் ஆர்வம் காட்டி வருதால் சில எளிய மருத்துவ முறைகளும், சில தாவரங்களும் தற்சமயம் பிரபலமாகி வருகின்றது. அந்த வரிசையில் இந்த வெண்நுணா என்னும் நோனி முக்கியத்துவம் பெறுகிறது. மிக நீண்ட நோய் பட்டியலை வெளியிட்டு குணம் கிடைக்கிறது என்று விளம்பரம் செய்கிறார்கள். உண்மையும் உண்டு. இது மருந்தல்ல சத்துள்ள பானம்.   ஹவாய் மற்றும் தகத்தி தீவு போன்ற பகுதிகளின் நோனி பழச்சாறு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலும் இப்பழச் சாறு கிடைக்கிறது. 4 இலக்கத்தில் விலை உள்ளது. பொதுவாக கடற்கரை பகுதிகளில்தான் வரும்  என்று நம்பப்பட்ட இம்மரம் உள்நாடுகளிலும் நன்கு வளர்கிறது. சற்று துர்வாசம் தரும் இப்பழத்தை சாறு எடுப்பதற்கு பதிலாக இலையை கீரையாக உட்கொண்டாலும் பலன் உண்டு என கூறுகிறார்கள்


பரவலாக தமிழகத்தில் காணப்படும் மஞ்சநத்தி என்று அழைக்கப்படும்  Morinda Tinctoria வும் இக்குடும்பத்தைச் சார்ந்ததே ஆனால் பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அதிக  மருத்துவ குணம் உடையது என வெண்நுணாவை தேர்ந்தெடுத்துள்ளனர். உணவே மருந்து மருந்தே உணவு என்ற கொள்கையில் நாம் வெண்நுணாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

2 comments:

kuppusamy said...

வெண்ணுணா பற்றிய விளக்கத்திற்கு மிக்க நன்றி. இதன் நாற்றுக்கள் பெங்களூரு ஊரிலிருந்து கோவை வேளாண்கல்லூரி தாவரவியல் திரு இராஜாமணி வாங்கி வந்து வளர்த்து செடிகள் பெரிதாகி காய் பழங்கள் விட்டுள்ளது. பொட்டானிக்கல் கார்டனில் உள்ளது. பாரக்கலாம். பழரச விலைதான் அதிகம்!

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.