மீண்டும்
ஒரு டேங்கர் (சமையல் எரிவாயு) லாரிகளின் வேலை நிறுத்தம் துவங்கப்பட உள்ள நிலையில்
சாமானியர்களின் இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும் நேரம். கிராமங்களில் கூட சமையல் எரிவாயு பிரபலமான
நிலையில் பாதிப்பு நிச்சயம் இருக்கும். மின்பற்றாக் குறையுள்ள தமிழகத்தில்
மின்அடுப்பு வகைகள் பலனளிக்கப் போவதில்லை. தீர்வு ??? சோதித்துப் பார்த்ததில் தமிழ்நாடு விவசாய பல்கலைகழகத்தின் மேம்படுத்தப்பட்ட அடுப்பு சற்று ஆறுதல் தருவதாக உள்ளது
இருசுவர்கள்
கொண்ட மண் அடுப்பு. வெளிச்சுவர் துவாரமின்றியும் உள்சுவர் மற்றும் கீழ்பகுதி துவாரங்களுடன்
இருப்பதால் சுவர்களின் இடைவெளியில் காற்று உட்புகுந்து எரியும் பகுதிக்கு வருவதால்
எரியும் தன்மை பாதிப்படைவதில்லை. விறகு முழுமையாக எரிபடுவதால் அதிக வெப்பமும், குறைந்த
அளவு விறகும் இருந்தால் போதும் சமையலை முடித்துவிடலாம். சாம்பலை செடிகளுக்கு தூவி
பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். எளிய வாழ்விற்கு இது உதவும் என்று எண்ணுகிறேன்.
மேலும்
விபரங்களுக்கு
தமிழ்நாடு விவசாய பல்கலைகழகம்,
கோவை.
---------------------------------
திரு.மதனகோபால்
அலைபேசி எண் : 93453 57803, 98940 95499