|
HER ROYAL HIGHNESS PRINCESS MAHA CHAKRI SIRINDHORN |
தாய்லாந்து நாட்டின் HRH. இளவரசி மகா சக்ரி ஸ்ரீரின்ந்தான் அவர்களால் 5 வது உலக
வெட்டிவேர் மாநாடு (ICV-5 ) லக்னோ நகரில் சென்ட்ரல் இன்ஸ்டிடூட் ஆப்
மெடிசினல் அண்டு அரோமாடிக் பிளாண்ட்ஸ் (Central Institute of Medicinal and
Aromatic Plants ) வளாகத்தில் துவக்கி வைக்கப்பட்டது. 20 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர். கொச்சியில் நடந்த மாநாட்டைக் காட்டிலும் விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள்,
பெரிய கம்பெனிகளின் கட்டுமான பணிகளை படங்களாக, வீடியோவாக காண்பித்து பிரமிப்பு
ஏற்படுத்தினர்.
|
சென்ட்ரல் இன்ஸ்டிடூட்
ஆப் மெடிசினல் அண்டு அரோமாடிக் பிளாண்ட்ஸ் |
மாநாடு முடிந்தவுடன் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம் என்று மனதில்
தோன்றியது. தமிழ் பெயரான “வெட்டிவேர்” என்று உலகம் முழுவதும்
அறியப்பட்டாலும், பல நாடுகள் வெட்டிவேர் உதவியுடன் பில்லியன் டாலர்களை
சேமித்தாலும், ஏழை எளிய மக்களுக்கு ஆப்ரிக்க நாடுகளில் உறுதுணையாக இருந்தாலும்
இதன் பிறப்பிடமான தமிழ்நாட்டில் எனது பாட்டி குடிநீரில் இதனை போட்டிருப்பார்கள்,
எனது தாத்தா வெட்டிவேர் விசிறி வைத்திருப்பார், திருவிழாக்களில் சர்பத்தில்
கலந்திருப்பார்கள் என்ற எளிய உபயோக
முறைகளை சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால் 1000 + கி.மீ நீள கடற்கரையை
கடலரிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியம், குறைந்த மழையளவில் குறுகிய
காலத்தில் நீரை சேமிக்க வேண்டிய கட்டாயம், சுற்றுலாப் பயணிகளை கவரும் ஊட்டி,
கொடைக்கானல், ஏற்காடு, போன்ற முக்கிய மலை வாசஸ்தலங்களின் சாலைகளை பருவ மழையின் போது
பாதுகாப்பது, கிராமப்புற சாலைகளை அதிக செலவின்றி பராமரிப்பு செய்தல், குளம்,
குட்டைகளில் அதிக மண் சேராமல் தடுத்தல் போன்ற காரியங்களுக்கு வெட்டிவேரை
சிறப்பாகப் பயன்படுத்த முடியும். வெட்டிவேரை மையப்படுத்தி பையோ எஞ்சினியரிங் (Bio-engineering ), பையோ ரெமடியேஷன் (Bio-remediation) பையோ வால் (Bio wall ) என்று வார்த்தைகள்
மற்றநாடுகளில் பவனி வர நாம் எங்கிருக்கிறோம் என்று பார்த்தால் நிச்சயம்
உறக்கத்திலிருக்கிறோம் என்று சொல்லிவிடலாம். எப்போது விழிக்கப் போகிறோம் ????