|
புழுதிப் புயல் ஏற்பட்ட பகுதிகள்
|
|
புழுதிப் புயலின் தாக்கம்
|
மனிதன் “விவசாயம்” என்று ஆரம்பித்த பின்னர் மேலை நாட்டினர் இயற்கையை விட்டு விலகி பேராசை
கொண்டு மண்ணை மலடாக்கி, இயந்திரத்தின் உதவியுடன் உணவு மற்றும் வணிகப்பயிர் உற்பத்தி செய்து லாபமீட்டினர்.
விளைவு டாலர் தேசத்தில் பஞ்சம். இன்றைய
தலைமுறைக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும். ஃப்ரைரி (Prairie grasses) என்ற இயற்கை புல்லை
அப்புறப்படுத்தியும், தவறான
விவசாய முறையாலும் 1930 களில் புழுதிப் புயல் ஏற்பட்டு சில இடங்களில் சுமார் 6
வருடமும் சில இடங்களில் 10 வருடமும் பஞ்சம் நிலவியது. பல லட்சம் மக்கள் குடி
பெயர்ந்தனர். இதே நிலைமை இன்று ஆஸ்திரேலியாவில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. 15
பில்லியன் மரங்களை வெட்டி இருபெரும் நதிகளை வற்றச் செய்த பெருமை மேலை நாட்டினரின்
விவசாய முறையைச் சாரும்.
எனது பழைய பதிவுகள்.
|
மலைபோன்ற தோற்றத்தில் புழுதிப் புயல்
|
80 வருடங்களுக்குப் பின் புழுதிப் புயல் (Dust Bowl
or Dirty thirties ) என்ற வரலாற்று
உண்மை பேசப்படாமலும், எழுதப்படாமலும்
உள்ள நிலையில் திரும்பவும் இரசாயன உரம், பூச்சி மருந்து, மரபணு மாற்றம்,
பையோ-டீசல் என்று விவசாயப் புரட்சிகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நம் நாட்டில் திணிக்கப்படுகிறது. இவைகள்
நிச்சயம் நமது இறையாண்மையை பாதிக்கும். இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என்று
விட்டு விடாமல் நம் வாழ்வாதாரம் என்ற எண்ணத்துடன்
இயற்கை வேளாண்மைக்கும், இயற்கை உணவிற்கும், உள்ளூர் காய்கறி/பழங்களுக்கும் ஆதரவு தருவோம்.
இந்த ஆதரவு நம்மை பேரழிவிருந்து
காப்பாற்றும்.
|
புழுதிப் புயல் சமயத்தில் எடுக்கப்பட்ட புகழ்மிக்க
புகைப் படம் |
மேலும் படிக்க: