அழகிய பூ |
வேப்ப மரத்தில் நன்கு படர்ந்து காய்துள்ள கொடி. |
பழம் |
பழத்தின் உட்பகுதி |
குளிர்பானம் |
தாவரவியல் பெயர் : Passiflora edulis
தாட்பூட் என்று அழைக்கப்படும் பேஷன் ஃபுருட் ( Passion fruit ) தென் அமெரிக்காவை தாயகமாகக்
கொண்டது. மலைப்பாங்கான வெப்ப மண்டலப் பகுதிகளில் சிறப்பாக வளரும்
இந்த கொடியின் பழம் பானங்கள் தயாரிக்க ஏற்றது. மருத்துவ குணங்கள் நிறைந்த இதன்
சாறு இரத்த கொதிப்பு, புற்று நோய், ஆஸ்துமா போன்ற நோய்களின் கடுமையை குறைக்கும் என்கிறார்கள்.
இதன் சாற்றை எடுத்து வடகிழக்கு
மாநிலங்களில் விற்பனை செய்கிறார்கள். வீட்டிலேயே மிக எளிதாக வளர்த்து குளிர்
பானங்கள் நாமே தயாரிக்கலாம். இரு ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒருவர் திடீரென்று 1
லட்சம் நாற்றுகள் கேட்டார். விசாரித்ததில் இதன் இலைகளைக் கொண்டு ஐரோப்பிய நாடுகள் சில மருந்துகள் தயாரிப்பதாக அறிந்தேன்.
இதில் பொதுவாக இரு வகை பழங்கள் உண்டு. கருநீலபழம், உண்பதற்கு ஏற்றது மலைபகுதிகளில்
அதிகம் காணப்படும். மற்றொன்று மஞ்சள் நிறப் பழம், பானங்கள் தயாரிக்க ஏற்றது,
சமவெளிப்பகுதியிலும் வளர்க்கூடியது. கோவையில் வீட்டின் முன்னுள்ள வேப்பமரத்தில்
ஒரு கொடியை ஏற்றிவிட்டதில் காய்ப்பு நன்றாகவுள்ளது. பானங்கள் தயாரிக்க
உபயோகிக்கிறோம். பந்தல் அமைத்துக் கூட இதனை வளர்க்கலாம். வீட்டுத் தோட்டத்திற்கு மிகவும் ஏற்றது.