|
“லவகா (Lavaka)” என்றழைப்படும் மண்சரிவு |
மடகாஸ்கர் ஆப்ரிக்காவின் அருகிலுள்ள நாடு. புயல், மண் சரிவிற்குப் பெயர்
பெற்றது. உலகின் வென்னிலா பீன்ஸ் (ஐஸ் க்ரீம்) ஏற்றுமதியில் 58% (2006) இவர்களுடையது.
2000ம் ஆண்டு ஏற்பட்ட இரு புயல்களால் ஏற்பட்ட பாதிப்பால் வென்னிலா விவசாயம் பாதிப்பிற்கு
உள்ளானது. அதனால் இந்தியாவில் வென்னிலா விவசாயம் சூடுபிடித்தது.
குறிப்பாக பொள்ளாச்சி பகுதியில் தென்னையில் ஊடுபயிராக வளர்த்தார்கள் பின்
மடகாஸ்கர் வென்னிலா விவசாயம் பழைய நிலைமைக்கு வந்தவுடன் இங்கு விலை வீழ்ச்சியை
கண்டது. நிறைய விவசாய அன்பர்கள் சோர்வடைந்தாரகள். ஆனால் இந்தப் பதிவு அங்கு ஏற்பட்ட ஒரு மண் சரிவை
வெட்டிவேர் கொண்டு சீரமைப்பு செய்வதைப் பற்றியது.
|
சரிவின் கீழ்பகுதியில் வெட்டிவேர் நடப்படுகிறது |
|
சரிவின் நடுபகுதியிலும் மண் சமன்செய்யப்பட்டு வெட்டிவேர் |
|
சரிவின் மேல்பகுதியிலிருந்து ஒரு பார்வை |
மிகப் பெரிய அளவில் ஏற்படும் இந்த மண்சரிவுகளை அவர்கள் “
லவகா (Lavaka)”
என்று அழைக்கின்றனர்.
சென்ற வருடம் ஏற்பட்ட ஒரு மண்சரிவை அவர்கள் வெட்டிவேர் கொண்டு சீரமைப்பு செய்தனர்.
அதன் புகைப்பட தொகுப்பை உலக வெட்டிவேர் அமைப்பினர் அண்மையில் வெளியிட்டார்கள். கற்கள்,
சிமென்ட், ஜல்லி, மணல் இல்லாமல் அதிகமான மனித உழைப்பின்றி வெற்றிகரமாக சரி
செய்துள்ளனர்.
“வெட்டிவேர்” என்ற தமிழ் பெயரால் உலகெங்கும்
அறியப்படலாம், இந்தியாவை
தாயகமாக கொண்டிருக்கலாம், ஆனால் அதனை நமது பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும்
உபயோகப்படுத்தவில்லை என்றால் அது வெட்டி (உபயோக மற்ற) வேர்தான். முனைப்புடன்
செயல்பட்டால் அது வெற்றிவேராக மாற்றலாம். காலம்தான் பதில் கூறவேண்டும்.
மேலதிக புகைபடங்களுக்கு கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்.
https://picasaweb.google.com/richard.grimshaw66/VetiverSystemForLavakaRehabilitationInMadagascar?feat=content_notification
No comments:
Post a Comment