Thursday, June 30, 2011

வெட்டி (உபயோகமற்ற) வேர் ?? வெற்றிவேர் ?? உபயோகத்தைப் பொறுத்தது.

லவகா (Lavaka)” என்றழைப்படும் மண்சரிவு
 மடகாஸ்கர் ஆப்ரிக்காவின் அருகிலுள்ள நாடு. புயல், மண் சரிவிற்குப் பெயர் பெற்றது. உலகின் வென்னிலா பீன்ஸ் (ஐஸ் க்ரீம்) ஏற்றுமதியில் 58% (2006) இவர்களுடையது. 2000ம் ஆண்டு ஏற்பட்ட இரு புயல்களால் ஏற்பட்ட பாதிப்பால் வென்னிலா விவசாயம் பாதிப்பிற்கு உள்ளானது. அதனால் இந்தியாவில்  வென்னிலா விவசாயம் சூடுபிடித்தது. குறிப்பாக பொள்ளாச்சி பகுதியில் தென்னையில் ஊடுபயிராக வளர்த்தார்கள் பின் மடகாஸ்கர் வென்னிலா விவசாயம் பழைய நிலைமைக்கு வந்தவுடன் இங்கு விலை வீழ்ச்சியை கண்டது. நிறைய விவசாய அன்பர்கள் சோர்வடைந்தாரகள். ஆனால்  இந்தப் பதிவு அங்கு ஏற்பட்ட ஒரு மண் சரிவை வெட்டிவேர் கொண்டு சீரமைப்பு செய்வதைப் பற்றியது.
சரிவின் கீழ்பகுதியில் வெட்டிவேர் நடப்படுகிறது
சரிவின் நடுபகுதியிலும் மண் சமன்செய்யப்பட்டு வெட்டிவேர்
சரிவின் மேல்பகுதியிலிருந்து ஒரு பார்வை

 மிகப் பெரிய அளவில் ஏற்படும் இந்த  மண்சரிவுகளை அவர்கள் லவகா (Lavaka)” என்று அழைக்கின்றனர். சென்ற வருடம் ஏற்பட்ட ஒரு மண்சரிவை அவர்கள் வெட்டிவேர் கொண்டு சீரமைப்பு செய்தனர். அதன் புகைப்பட தொகுப்பை உலக வெட்டிவேர் அமைப்பினர் அண்மையில் வெளியிட்டார்கள். கற்கள், சிமென்ட், ஜல்லி, மணல் இல்லாமல் அதிகமான மனித உழைப்பின்றி வெற்றிகரமாக சரி செய்துள்ளனர்.

வெட்டிவேர் என்ற தமிழ் பெயரால் உலகெங்கும் அறியப்படலாம், இந்தியாவை தாயகமாக கொண்டிருக்கலாம், ஆனால் அதனை நமது பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் உபயோகப்படுத்தவில்லை என்றால் அது வெட்டி (உபயோக மற்ற) வேர்தான். முனைப்புடன் செயல்பட்டால் அது வெற்றிவேராக மாற்றலாம். காலம்தான் பதில் கூறவேண்டும்.


மேலதிக புகைபடங்களுக்கு கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்.
https://picasaweb.google.com/richard.grimshaw66/VetiverSystemForLavakaRehabilitationInMadagascar?feat=content_notification   



Saturday, June 18, 2011

“Small is Beautiful” By E.F.ஷூமாக்கர். இலவச மின்நூல்

 


E.F.ஷூமாக்கர் என்ற பொருளாதார நிபுணரை நான் பொருளாதார தீர்க்கதரிசியாகத்தான் பார்க்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய “Small is Beautiful” படித்தேன். எவ்வளவு தீர்க்கமாய் எதிர்காலத்தை கணித்திருக்கிறார் என்று வியந்ததுண்டு. ஜப்பான் சுனாமி அதன் பின் ஏற்பட்ட அணு உலை பாதிப்புக்குப் பின் மீண்டும் படிக்கவேண்டுமென்று நினைத்தபோது பரிசாக அப்புத்தகம் கிடைத்தது. 1973 ஆண்டு வெளியிடப்பட்டது அப்புத்தகம். ஆனால் உலகின் சுற்றுச்சுழல், இயற்கை விவசாயம் ( குறிப்பாக மேல் மண் Top Soil) , கல்வி, எரிபொருள், அணுசக்தி, நிலைத்த பொருளாதாரம், உதவிகள்  என்று எழுபதுகளில் அவர் பேசியது, எழுதியது இன்று நிஜமாகி வருவது அவரின் தீர்க்கமான கணிப்புக்கு சான்று. ஆட்சியாளர்களும், கண்டிப்பாக எல்லா துறை மாணவர்களும்  படிக்க வேண்டிய ஒரு நூல். மகாத்மா காந்தி அவர்களின் மேற்கோள்கள் நிறைய உண்டு.

குறிப்பு நூல்களில் இரு இந்திய நூல்களும் உண்டு
1. Art and Swadeshi By Ananda K. Coomaraswamy
2. Economy of Permanence  By J.C. Kumarappa.

அணுசக்தி
Of all the changes introduced by man into the household of nature, large-scale nuclear fission is undoubtedly the most dangerous and profound. As a result, ionising radiation has become the most serious agent of pollution of the environment and the greatest threat to man's survival on earth.

இந்தியாவும் மரங்களும்...
The Good Lord   has not disinherited any of his children and as far as India is concerned he has given her variety of trees, unsurpassed anywhere in the world. There are trees for almost all human needs. One of the greatest teachers of India was the Buddha who included in his teaching the obligation of every good Buddhist that he should plant and see to the establishment of one Tree at least every five years. As long as this was observed, the whole large of area of India was covered with trees, Free of dust, with plenty of water, plenty of shade, plenty  of  food and materials.

கல்வி ...
In fact, the belief in education is so strong that we treat it as the residual legatee of all our problems. If the nuclear age brings new dangers; if the advance of genetic engineering opens the doors to new abuses; if commercialism brings new temptations - the answer must be more and better education. The modern way of life is becoming ever more complex: this means that everybody must
become more highly educated.

தொடர்பிற்கு :

Thursday, June 2, 2011

வீட்டுத் தோட்டதில் கஸ்தூரி மஞ்சள்


கஸ்தூரி மஞ்சள்
தாவரவியல் பெயர் Curcuma Aromatica

...... அங்கு கொஞ்சி விளையாடும் எம் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணி புரிந்தாயா?...........

என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் பேசிய வசனம் இன்னும் நம் மனதில் பதிந்து இருக்க, பல நூறு ஆண்டுகளாக பெண்கள் பயன்படுத்திய அழகு சாதனத்துடன் கூடிய கிருமிநாசினியான மஞ்சள் இன்று பெண்களிடத்தில் தன் மதிப்பை இழந்து மறைந்து வருகின்றது.  முக அழகிற்காக பல்வேறு க்ரீம்பயன்படுத்தி அழகை இழந்தவர்களும், இழந்து கொண்டிருப்பவர்களும் உண்டு. ஆனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதன் பயன் அறிந்துள்ளனர் என்பதற்கு கீழ் கண்ட பாடல் உறுதி செய்யும்.

புண்ணுங் கரப்பானும் போக்கைக் கிருமிகளும்
நன்னுமந் தாக்கினியும் நாசமாம்- வண்ணமலர்த்
தொத்தே றளகமின்னே சுக்கிலமும் புதிமாங்
கத்தூரி மஞ்சளுக்குக் காண். ( அகத்தியர் குண பாடம் )

இந்தியாவில் மங்கள நிகழ்ச்சிகளுக்கு முதன்மை பெற்றது மஞ்சள். பூமிக்குக் கீழ் விளையும் கிழங்கு வகையைச் சார்ந்தது மஞ்சள். சமையலுக்கு விரலி மஞ்சள். மேனி அழகிற்கு கஸ்தூரி மஞ்சள். சொறி, சிரங்கு, வியர்வை நாற்றத்திற்கு மேல் பூச்சு. மேனி பளபளக்கவும், உடலிலுள்ள சிறு சிறு உரோமங்களை அகற்றவும் பயன்படுத்தப்படும். பெண்கள் இதனை தங்களின் முகப் பொலிவிற்கு உபயோகிக்கலாம்.  கஸ்தூரி மஞ்சளை மிக எளிதாக  இயற்கை முறையில் வீட்டுத் தோட்டதில் வளர்க்கலாம்.