Monday, January 17, 2011

மாடித்தோட்டம் - ஒருநாள் பயிற்சி.

பொருளாதார சீர்திருத்தங்கள்?? சட்டங்கள், காலநிலையில் வேறுபாடு, இயற்கை சீற்றம், கொள்ளையடிக்கும் இடைத் தரகர்கள், சில்லறை வணிகத்தில் கூட நுழைந்து லாபம் தேடும் பன்னாட்டு, இந்நாட்டு கம்பெனிகள், உரத் தட்டுப்பாடு என பல்வேறு காரணங்களால் சிறு ,குறு விவசாயம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியது. விளைவு சென்ற மாதம் வெங்காயம் ரூ.100/ =, முருங்கைக் காய்  ரூ.200/= என வாங்கினோம். வருங்காலத்தில் இது ஒரு தொடர் கதையாக மாறலாம். இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது நகர மக்களே!! பாதிப்பை ஓரளவு குறைப்பதற்கு நகரங்களில் மாடித்தோட்டம் ஒரு மாற்றாக அமையும் இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். பங்கேற்று பயன் பெறுவீர்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506


4 comments:

Pandian R said...

நல்ல செய்தி அய்யா.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு நன்றி.

Mahi_Granny said...

பங்கேற்க முடியாதவர்களுக்கு இது குறித்த தங்களின் ஆலோசனையை தருவீர்களென நம்புகிறேன்

வின்சென்ட். said...

ஏற்கனவே சில ஆலோசனைகளை தந்திருக்கிறேன். இனி மேலும் தருவேன். உங்கள் வருகைக்கு நன்றி.