Saturday, January 1, 2011

சர்வ தேச வன ஆண்டு 2011


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2011 சர்வ தேச வன ஆண்டாக கொண்டாடப்படுகிறது.ஐரோப்பா கண்டத்தைத் தவிர மற்ற கண்டங்கள் அனைத்தும் தனது வன செல்வத்தை இழந்து வருகிறது. குறிப்பாக தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா கண்டங்களில் இதன் தாக்கம் அதிகம்.
உலக வனங்கள்
 இந்தியாவைப் பொறுத்தவரையில் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதில் பெருமளவு வன பகுதிகள் சர்ச்சைக்குரிய பகுதிளாக மாறி வனபாதுகாவலர்களான வனவாசிகளுக்கும், அரசுகளுக்கும் நடக்கும் நிகழ்வுகளை நாம் அனுதினமும் படிக்கிறோம். எல்லா உயிர்களுக்கும் வாழ்வாதாரமான வனத்தை பற்றி அக்கரை கொள்ளுகிறோமா? என்றால் சற்று கவலையளிப்பதாகத்தான் உள்ளது.
தமிழகத்தின் குறைந்த, அதிக வனமுள்ள மாவட்டங்கள்

தமிழகத்தைப் பொறுத்த வரையில் டெல்டா மாவட்டங்களில் வன அளவு மிகக் குறைவாக இருப்பதுடன் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தின் போது பெருமளவு நஷ்டத்தை மாநிலம் அடைய வேண்டியுள்ளது.

இந்த புத்தாண்டில் நமது குழந்தைகளின் வாழ்க்கையில் உண்மையான அக்கரை கொண்டிருப்பவர்களாக இருந்தால் அவர்களின் நல்வாழ்விற்காக பொன்னையும் பொருளையும் சேர்ப்பதை சற்று குறைத்து வாழ்வாதாரமான சுத்தமான காற்று, மழை இவற்றுக்கு வனங்கள் தேவை என்பதை உணர்ந்து அதனை பாதுகாக்க நம்மாலான உதவிகளை செய்தாலே போதும் வனங்கள் விரிவடைந்துவிடும். நாம் ஒவ்வொருவரும் இதில் சிறப்பாக பங்களிக்க வேண்டும் என்பதே இவ்வலைப் பூவின் புத்தாண்டு ஆவல்.

12 comments:

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வின்சென்ட். said...

திரு.கலாநேசன்

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

"சர்வ தேச வன ஆண்டு 2011"

பகிர்வுக்கு நன்றி.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வின்சென்ட். said...

திருமதி.ராமலக்ஷ்மி
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மாதேவி said...

"சர்வ தேச வன ஆண்டு 2011" மகிழ்ச்சி அளிக்கிறது.

"பொன்னையும் பொருளையும் சேர்ப்பதை......"
அருமையான கருத்தை முன் வைத்துள்ளீர்கள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வின்சென்ட். said...

திருமதி.மாதேவி

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

settaikkaran said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே! இவ்வாண்டில் உங்களது சமூக அக்கறையுடனான இடுகைகள் வலையுலகின் மூலம் பெரிய மாற்றத்தை உருவாக்க இறைவன் துணையிருப்பானாக!

வின்சென்ட். said...

திரு.சேட்டைக்காரன்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். மாற்றம் உண்டாக நம்மாலான அனைத்தையும் செய்வோம்.

ஷஹி said...

வாவ்..சூப்பர் சார்..வாழ்த்துக்கள்!5.1.11 தேதியிட்ட ஆனந்தவிகடனில் மரவளம் வலைப்பூவைப்பற்றி குறிப்பு வந்திருப்பதைப் பார்த்து ரொம்ப எக்சைட் ஆகிவிட்டேன்..தொடரட்டும் உங்கள் தன்னலமற்ற பணி.

http://machamuni.blogspot.com/ said...

இந்தியா சுதந்திரம் வாங்கிய போது இந்தியாவில் காடுகள் 23% இருந்தது. அப்போது இந்தியத் தலைவர்கள் மழை வளம் குறையாமல் இருக்க,குறைந்த பட்சம் காடுகள் 33% இருக்க வேண்டும்,அந்த இலக்கை அடுத்த பத்தாண்டுகளில் அடைய வேண்டும் என்று உறுதி பூண்டார்கள்.ஆனால் தற்போது காடுகள் வெறும் 8% தான் உள்ளன. இன்னின்ன மரங்கள் இந்தந்த இடங்களில்தான் வளர வேண்டும் என்று இயற்கை நிர்ணயித்துள்ளது. நமது காட்டிலாகா இதை உணராமல் கண்ட மரங்களையும் கண்ட இடத்தில் நடுவதால் இயற்கை பேரழிவுகள்,நிலச் சரிவு,புயல்,வெள்ளம் போன்றவை நிகழுகின்றன.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

தமிழ்மலர் said...

பகிர்வுக்கு நன்றி...

வின்சென்ட். said...

திருமதி.ஷஹி
திரு.சாமீ அழகப்பன்
M/s தமிழ்மலர்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நீர் தேவை குறைந்த சிறு தானியங்கள், வறட்சியை தாங்கி வளரும் மரங்கள். என சற்று மாற்றி சிந்தித்தால் இயற்கையை நாம் வசப்படுத்தலாம்.