Thursday, December 2, 2010

சீமைக் கருவேல் (அ) வேலிக்காத்தான் PROSOPIS JULIFLORA

சீமைக் கருவேல் (அ) வேலிக்காத்தான்
வறண்ட பகுதிகளை பசுமைப்படுத்தவும் அப்பகுதி மக்களின் விறகு தேவையை பூர்த்தி செய்யவும் நம் நாட்டிற்கு மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தபட்ட தாவரம். சீமையிலிருந்து வந்ததால் “சீமைக்கருவேல்” எனவும், வேலிக்குப்பயன்பட்டதால் “வேலிக்காத்தான்” எனவும், கரிஉற்பத்தி செய்து வடமாநிலங்களுக்கு அனுப்பட்டதால் “டெல்லி முள்” எனவும், முள் குத்தினால் எளிதில் குணமாகாமல் போனதால் “விஷமுள் செடி” என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இலைகளை கால்நடைகள் உணவாக உட்கொள்ளாவிட்டாலும் மஞ்சள் நிற அதன் காய்களை உணவாக உட்கொண்டன. விளைவு அதன் கழிவுகள் மூலம் விளை நிலங்களிலும் நீர்பகுதிகளிலும் பரவியது. மழைகாலங்களில் இதன் விதைகள் அடித்துச் செல்லப்பட்டு நீரோடும் பள்ளங்களிலும், கண்மாய்களிலும் செழித்து வளர்கின்றது. ஒரு காலத்தில் இராமநாதபுரம், சிவகங்கை போன்ற பகுதிகளில் கண்மாய்களிலுள்ள மீன்களுக்காக ஏலம் விட்டாரகள். நிலைமை மாறி, சீமைக் கருவேல் ஏலம் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அளவிற்கு வாழ்வியலை மாற்றியுள்ளது. மறுதாம்பும் சிறப்பாக வருவதால் மக்கள் இதனை அழிக்க விரும்புவது இல்லை. நீர்த் தேவைக்காக 30 அடிக்கு மேல் வேர்கள் சென்று நீரை பெறுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு நீண்ட வேர்களற்ற அரிய வகை மூலிகைகள் அழிந்து வருகின்றன. பறவைகளுக்கான உணவும் நல்ல நிழலும் இல்லாமையால் இப்பகுதிகளில் அவை விரும்பி வசிப்பதில்லை.
 "கரிமூட்டம் " வேலை வாய்ப்பை தருகிறது.
இராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளில் கரிமூட்டம் செய்து தரமான கரியை வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். இது ஒரு வாழ்வாதாரமாக இருந்தாலும் இது எடுத்துக் கொள்ளக்கூடிய நீரைக் கொண்டு விவசாயம் நன்கு செய்ய இயலும். இதன் எரியும் சக்தி சிறப்பாக இருப்பதால் மரத்துண்டுகள் மூலம் மின்உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதனை விரும்பி அடியோடு பிடுங்கி எடுத்துக் கொள்ளுகின்றனர். சுற்றுச்சுழலையும், நீராதாரத்தையும் வெகுவாக பாதிப்பதாலும் பயன்களைவிட பாதிப்புகள் அதிகம் என்பதால் அழிக்கப்பட வேண்டிய தாவரம்.

7 comments:

Unknown said...

please try to put this issue in tamil newspaper(thina thandhi).
regards,
sathish

வின்சென்ட். said...

திரு.சதீஷ்

உங்கள் வருகைக்கு நன்றி. ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு பரபரப்பான செய்திகள் கிடைப்பதால் இதனை பிரசுரிப்பார்களா? என்ற சந்தேகம் எனக்கு உண்டு. யாரை அணுகுவது என்று தெரியவில்லை.

வசந்த் ரெங்கசாமி said...

இந்த செடியை நம் மண்ணிலிருந்து அகற்ற புரட்சி நடந்தாகவேண்டும்.ஏனெனில் இது எளிதில் பரவக் கூடியது.இதை பற்றி பேராண்மை படத்தில் கூட டைரக்டர் ஜனநாதன் "இது மண்ணை மலடாக்கி விடும்." என. சொல்லியிர்ருகிறார் .இது ஒரு விஷ செடி.இதை அகற்றுவது விவசாயதிருக்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கே நன்மை அளிப்பதாகும். .

வின்சென்ட். said...

திரு.வசந்த் ரெங்கசாமி

உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் கூறுவது போல் புரட்சி நடந்தாக
வேண்டும். ஆனால் இதனை அகற்றக் கூடாது என சட்டம் ஒழுங்கு பிரச்னை வருமளவிற்கு சில இடங்கள் தமிழகத்தில் உண்டு என்பதனை பதிவும் செய்கிறேன்.

JBRSSM said...

Dear All,

In the dry land which we are slowly converting with tree saplings etc.,., we would like to add some fence plant to protect the trees from cattle and other issues. We did plant some Malai Vembu ( Thanks for all inputs given by Mr.Vishnu Sankar of Tirunelveli the growth is really good). We did shop around nursery in and around Mettupalayam-Kallar ( Coimbatore Dist) and found this fence plant with non-poisonous needle type leaves. WE don't know the name in Tamil or the botanical name. Is it possible to give some feed back on this plant particularly the heat it generates as we have other fence plants like this சீமைக் கருவேல் (அ) வேலிக்காத்தான் PROSOPIS JULIFLORA"
which did spoil the adjacent plants. Roots we did see but not expanding but not sure it absorbs water and spoils other crops particularly along with this the 7 feet grown malai Vembu ( also attached FYI) is also there as a fence Tree in our dryland. Main issue is cattle and human interference so we are intending for this.

Picture link in this album below

https://picasaweb.google.com/101841021788385097920/FENCEPLANT?feat=directlink

( IF THE LINK IS NOT WORKING PLEASE CUT AND PASTE IN WEB BROWSER)

Sorry to bother you and asking a question without any basis other then pictures. Thanks in advance.

வின்சென்ட். said...

Sir

It is known as Golden Duranta. A nice hedge plant. You can use it for fence also.

JBRSSM said...

Thanks a lot Sir.