Tuesday, December 14, 2010

பதிவர்களுக்கு ஒரு அன்பான முக்கிய வேண்டுகோள்.

மனித இனத்தின் பேராசையால் ஒவ்வொரு நாளும் பல உயிரினங்கள் இந்த பூவுலகைவிட்டு மறைய ஆரம்பித்துள்ளன. நாமும் அதனைப் பற்றி எந்தவொரு உணர்வும் இல்லாமல் பொன்னும் பொருளும் மாத்திரமே வாழ்கை என்று வாழ்ந்து வருகிறாம். அடுத்த தலைமுறையிடம் பொன்னும் பொருளும் இருக்கும், குடிப்பதற்கு நீரும் ஆரோக்கியமான காற்றும் இருக்குமா? என்றால் கேள்விக் குறிதான்.

இதனை கருத்தில் கொண்டு இயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பிற்கான பன்னாட்டு ஒன்றியம் ( International Union for Conservation of Nature and Natural Resources - IUCN) சிறப்பான முறையில் அழிந்து வரும் உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வை உலகெங்கும் பரப்பி வருகிறார்கள். 1948 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்றியம் தற்போது சுவிட்ஜர்லாந்து நாட்டிலுள்ள கிளாண்ட் (Gland) என்ற நகரை தலைமை செயலாகமாக கொண்டு இயங்கி வருகிறது. சுமார் 140 நாடுகளிலிருந்து 1000+ அரசு, அரசு சாரா நிறுவனங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன. இதன் ஒரு மிகமுக்கிய செயல்பாடு நீங்கள் மேலே பார்க்கும் படம்தான். ஒவ்வொரு நாளும் ஒரு உயிரினம் அல்லது தாவரத்தின் புகைப்படத்துடன் அவை எங்கு உள்ளன? அதன் தற்போதய நிலைமை (Status ) குறித்து வெளியிடுகிறார்கள். படத்தை “கிளிக்” செய்து விபரம் பெற்றுக் கொள்ளலாம். பதிவர்களுக்கு எனது அன்பான முக்கிய வேண்டுகோள். நாம் ஒவ்வொருவரும் இப்படத்தை நமது வலைப் பூக்களில் இட்டால் இந்த அழிந்து வரும் இனங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வை எளிதில் நம் மக்களிடம் கொண்டு செல்ல இயலும் ஒத்துழைப்பு நல்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

கீழேயுள்ள Html Code ஐ காப்பி செய்து Add and Arrange Page Elements சென்று HTML/JavaScript ஐ தெரிவு செய்து அதில் பேஸ்ட் செய்தால் போதும் அந்த படம் வந்துவிடும்.


<iframe src="http://feeds.iucnredlist.org/species-of-the-day" frameborder="0" width="180" height="200" scrolling="no"></iframe>
 இந்த தொடர்பை எனக்கு அறிமுகப்படுத்திய திரு. இரத்தினசபாபதி அவர்களுக்கு எனது நன்றிகள்

8 comments:

ஹுஸைனம்மா said...

சேத்துட்டேன் சார்.

suneel krishnan said...

நன்றி ,நான் எனது தளத்தில் மாற்றம் செய்து விட்டேன்

வின்சென்ட். said...

திருமதி.ஹுஸைனம்மா
Dr.சுனில் கிருஷ்ணன்

உங்கள் இருவரின் வருகைக்கும்,வலைப் பூக்களில் இட்டதற்கும் மிக்க நன்றி.

பழமைபேசி said...

சேர்த்துவிடுகிறேன் ஐயா!

வின்சென்ட். said...

திரு. பழமைபேசி

உங்கள் வருகைக்கும் வலைப் பூவில் இடுவதற்கும் மிக்க நன்றி. எப்படியிருக்கிறீர்கள்?

ADMIN said...

அழிந்து இயற்கை உயிரினங்களைப் பற்றி தங்களின் பதிவு அனைவரையும் சென்றடையட்டும்... நன்றி..! வாழ்த்துக்கள்..!

வின்சென்ட். said...

திரு.தங்கம்பழனி

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

சாமக்கோடங்கி said...

உங்கள் அரும்பணி மகத்தானது.. என்னுடைய ப்ளாக்கிலும் இணைத்து விட்டேன்.. நன்றி தெரிவிக்க வேண்டாம்.. இது எங்கள் கடமை...