Friday, December 3, 2010

இன்று ( டிசம்ர் 3 ) உலக மாற்றுத் திறனாளிகள் தினம்

"ஆரோக்கிய குடும்பம்" வளாகத்தில் மாணவர்கள்
 சென்ற அக்டோபர் மாதம் 30 தேதி கோவையை அடுத்த மாங்கரையில் அமைந்துள்ள "ஆரோக்கிய குடும்பம்" வளாகத்தில் நடந்த மாணவ மாற்றுத் திறனாளிகள் கூட்டதில் எனக்கு பேசும் வாய்ப்பை கொடுத்திருந்தார்கள். நானும் கேரளாவில் நடந்த என்டோசல்பான் ( பார்க்க : The Slow poison of India ) உபயோகத்தில் குழந்தைகள் எவ்வாறு மாற்றுத் திறனாளிகளாக ஆகிறார்கள் என்று கூறி “இயற்கை முறையில் வீட்டுத் தோட்டம்” பற்றி கூறிவிட்டு அமர்ந்தேன். ஒருவர் அறிமுக அட்டையை தந்து அழைத்தார் சென்றால் ஏற்கனவே அறிமுகமான நண்பர் திரு. சூரியா நாகப்பன் அமர்ந்திருந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு பணிகளைச் செய்பவர். தொலைபேசி மூலம் ( Help line ) மாற்றுத் திறனாளிகளுக்கு உபயோகமான தகவல்களை UDIS அமைப்பின் மூலம் தந்து உதவி வருகிறார்.
திரு. சூரியா நாகப்பன்
பேச்சு வீட்டுத் தோட்டம் பற்றியிருந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு நல்ல சுயவேலை வாய்ப்பு என கூறினார். உடனே அவர்களது அமைப்பிலும் இதுபற்றி பேச வாய்ப்பளித்தார். வீட்டுத் தோட்டதிற்கு இப்படியொரு வாய்ப்பும் உண்டு என்று அவர்களுடன் பேசும் போது அறிந்துகொண்டேன். உண்மையில் குறைந்த கல்வி தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு. எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். ஆரோக்கியமான மனநிறைவைத் தரும்..

முக்கியமாக தொலைபேசி உதவியை ( Help line    Click) தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் அழைத்து கல்வி, உதவிகள்,  வாய்ப்புக்கள், பயிற்சிகள் பற்றி அறிந்து கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு துணை நிற்கும் அவரையும் ,தொலைபேசி உதவி பற்றியும் பதிவிடுதில் இவ்வலைப் பூ மகிழ்ச்சியடைகிறது. இதைபடிக்கும் அன்பர்கள் உங்கள் மாற்றுத் திறனாளி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

அவரது விலாசம்

திரு. சூரியா நாகப்பன்
13.திருவள்ளுவர் தெரு
ஜி.என். மில்ஸ் அஞ்சல்
கோவை 641 029

அலைபேசி : 99445 56168
தொலைபேசி: 0422-2644603
மின்னஞ்சல் : caliber.coimbatore@gmail.com
வலைப் பூ : http://www.calibertrust.blogspot.com/

Helpline Numbers:
+ 91- 422 - 2405551
+ 91- 422 - 2648006
+ 91- 99 44 55 61 68
Emails.
rights4pwd@gmail.com
udis@vsnl.net
Website
http://www.davo.in/

5 comments:

இளங்கோ said...

Thank you.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

// இதைபடிக்கும் அன்பர்கள் உங்கள் மாற்றுத் திறனாளி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்//

இந்தப் பதிவினை அப்படியே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

வின்சென்ட். said...

திரு.இளங்கோ
திருமதி.ராமலக்ஷ்மி

உங்கள் இருவரின் வருகைக்கும் நணபர்களுடன் பகிரப் போவதற்கும் மிக்க நன்றி.

சுந்தரா said...

பயனுள்ள பகிர்வு. அறியாதவர்களிடம் நிச்சயம் பகிர்ந்துகொள்கிறேன்.

நன்றி!

வின்சென்ட். said...

திருமதி. சுந்தரா

உங்கள் வருகைக்கும் நணபர்களுடன் பகிரப் போவதற்கும் மிக்க நன்றி.