Friday, August 6, 2010

இன்று ஹிரோஷிமா - நாகசாகி நினைவு தினம்.



அணுகுண்டு வீசப்பட்டு உயிர் துறந்த அப்பாவி ஹிரோஷிமா - நாகசாகி மக்களுக்கு அஞ்சலி. இன்றுவரை உடலளவிலும் மனத்தளவிலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக இந்தப் பதிவு.

இந்த அழகான பூமிப் பந்தை சுய லாபதிற்காகவும், குறுகிய கால பொருளாதார லாபதிற்காகவும் சுரண்டும் போது போர் நிகழ்கிறது. விஞ்ஞானம் வளர வளர அழிக்கும் ஆற்றலும் அதிகரித்து வருகிறது. இரக்க குணம் மறைந்து அரக்க குணம் மனிதனை ஆட்டிப் படைக்கிறது. புகழ் மிக்க நாகரீகங்கள் மறைந்து காலப் போக்கில் காணமல் போனதை வரலாறு தெளிவாக கூறுகிறது. ஆனாலும் வளர்ச்சியடைந்த நாடுகள் இன்னும் திருந்தவில்லை என்பதை அணுஆயுத ஒப்பந்தத்தை இன்னும் முடிவிற்கு கொண்டுவராததின் மூலமும் வளரும் நாடுகளை சுரண்டுவதின் மூலமும் அறிந்து கொள்ளலாம்.

ஹிரோஷிமா குண்டு வீச்சுக்கு பின் அதன் சக்தியையும், அழிவையும் பார்த்த பின்னும் கடலுக்கடியில் 97 அடி ஆழத்திலிருந்து வெடிக்கச் செய்து கடல் நீரையும் மாசுபட்டிற்கு உட்படுத்தும் இவர்களை எப்படி அழைப்பது என்பதை கீழேயுள்ள படத்தை பார்த்துவிட்டு முடிவைச் சொல்லுங்கள். இன்றைய தேவை கதிர்வீச்சை ஏற்படுத்தும் அணு ஆயுதமன்று, எல்லா ஜீவராசிகளும் வாழ மரங்கள் நிறைந்த பசுஞ்சோலை. நாம் ஒவ்வொரும் இப்படி நினைத்து செயல்பட்டாலே போதும் பசுமையான பூமிப் பந்தை பார்க்கமுடியும்.



எனது பழைய பதிவைக் காண:-
http://maravalam.blogspot.com/2008/08/63.html


புகைப் படம் திரு.அறிவழகன் பதிவிருந்து எடுக்கப்பட்டது.

2 comments:

Unknown said...

நல்ல பதிவு.

வின்சென்ட். said...

திரு.கலாநேசன்

உங்கள் வருகைக்கு நன்றி