Thursday, April 22, 2010

புவி தினம் ஏப்ரல் 22





மனித இனம் இவ்வளவு நாட்களாக பஞ்ச பூதங்களில் நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கும்தான் அழிவைத் தந்து தங்கள் பொருளாதாரத்தை சிதைக்கும் என்று இருந்தனர். ஆகாயம் கூட பொருளாதாரத்தை பின்னோக்கி தள்ளும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் ஐஸ்லாந்து நாட்டில் ஏற்பட்ட எரிமலை புகை ஐரோப்பிய நாடுகளின் ஆகாய வெளியில் படர்ந்து விமான சேவையை கேள்வி குறியாக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 17,000 விமான சேவைகள் ரத்து செய்யபட்டதாக பத்திரிக்கை செய்தி. பின் டெல்லி, மும்பையில் பயணிகள் 41,000 பேர் தவிப்பதாக செய்தி. சிலர் விமான நிலையங்களில் படுத்திருப்பதாக படங்கள்.

இந்த புவி தினத்தில் இயற்கை கண்சிமிட்டினால் மனிதன் மிகமிக சாதாரணமானவன் என்பதை புரிந்துகொண்டு கனவான்களும், தனவான்களும் தங்களின் பொருளாதாரத்தை மாத்திரம் பேணாமல் அடுத்த தலைமுறை சுகமாக வாழ இயற்கையையும் பேணிகாப்பதில் அக்கரை செலுத்தவேண்டும் என்று இவ்வலைப் பூ விரும்புகிறது.

9 comments:

settaikkaran said...

பரபரப்பான விஷயங்களைக் குறித்து பதிவுகள் போடுகிறவர்கள் மத்தியில், தொடர்ந்து உலகநலனில் அக்கறையுடன் பல இடுகைகளை எழுதி வரும் உங்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்.

முகுந்த்; Amma said...

அருமையான இடுகை அய்யா. நானும் இதனை பற்றி ஒரு இடுகை எழுதி இருக்கிறேன்.
நேரம் கிடைத்தால் வாசித்து பாருங்கள்.

நன்றி

விஜய் said...

மிக மிக முக்கிய பதிவு

வாழ்த்துக்கள்

விஜய்

வின்சென்ட். said...

திரு.சேட்டைக்காரன்
திருமதி.முகுந்த் அம்மா
திரு.விஜய்

உங்கள் மூவரின் வருகைக்கும் நன்றி. வரபோகின்ற காலம் மோசமானதாக இருக்கும் என்பது நன்கு தெரிந்ததால் தொடர்ந்து எழுதுகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து செய்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

பனித்துளி சங்கர் said...

/////மனித இனம் இவ்வளவு நாட்களாக பஞ்ச பூதங்களில் நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கும்தான் அழிவைத் தந்து தங்கள் பொருளாதாரத்தை சிதைக்கும் என்று இருந்தனர். ஆகாயம் கூட பொருளாதாரத்தை பின்னோக்கி தள்ளும் என்று யாரும் நினைக்கவில்லை. /////////


உண்மைதான் இதுபோன்று இன்னும் அறியப்படாதா பல பயங்கரங்கள் நம்மை நெறிங்கிக்கொண்டுதான் இருக்கிறது .
அதில் இதுவரை பலர் அறியாமல் இருக்கும் {{{{{{ ல நீனோ }}}}}என்ற ஒன்று இன்னும் சில வருடங்களில் இந்த உலகை மிகவும் பயங்கர அழிவுக்கு இட்டு செல்லப்போகிறது . இதைப் பற்றி விரிவான பதிவை நான் வரும் 26.04.2010 அன்று வெளியிடப் போகிறேன் மறக்கம்ல் படியுங்கள் . இயன்றால் இதைப்பற்றி இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதுங்கள் . பகிர்வுக்கு நன்றி !

வின்சென்ட். said...

திரு. சங்கர்

உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் பதிவிற்காக காத்திருகிறேன்.

Essar Trust said...

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்!

பனித்துளி சங்கர் said...

பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html

வின்சென்ட். said...

M/s Essar Trust
திரு.பனித்துளி சங்கர்

உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.