Saturday, July 12, 2008

மருத்துவ கழிவுகளும், வன உயிர்களும்.

சென்ற வாரம் மலையோர கிராமத்திற்கு சென்றபோது சாலையின் அருகே மருத்துவ கழிவுகள் பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு அவை வன உயிர்களால் பிரிக்கப்பட்டு சிதறிக்கிடந்தன. உயிர்களை காக்கும் ஒரு மருத்துவமனையின் செயல் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. என் ஆதங்கமெல்லாம் மனிதனுக்கு வியாதி பரவக்கூடாது என்று யாருக்கும் தெரியாமல் மருத்துவ கழிவுகளை அகற்றும் மருத்துவமனைக்கு அதனால் வாய்பேசாத வன உயிர்களை பாதிக்கும் என்று தெரியாதா? அவைகள் வைத்தியத்திற்கு எங்கு செல்லும்? அந்த உயிரினங்களின் வாழ்விடத்தைத்தான் ஆக்கிரமித்து அவைகளின் உணவு,உறைவிடம் இவற்றை அபகரித்து விரைவாக அழிக்கிறோமென்றால், வியாதியையும் தந்து அவைகளை துன்புறுத்த வேண்டுமா? சமுதாயத்தில் இன்று நல்ல வசூல் நடக்குமிடம் மருத்துவமனைகள். இன்னும் கொஞ்சம் கூடுதலாகத்தான் வசூலித்து சரியான முறையில் மருத்துவ கழிவுகள் அழிக்கப்பட்டால் சுற்றுச்சூழலும், நிறைய வனஉயிர்களும், பாதுகாக்கபடுமே!! சிந்திப்போம் !! சுற்றுச்சூழலையும், வன உயிர்களையும் காப்போம்!!

இத்தகவல் யாரையும் குற்றம் காண்பதற்காக எழுதப்பட்டதன்று சுற்றுச்சூழலையும், வன உயிர்களையும், ஏன் நம்மையும் காப்பதற்காக எழுதப்பட்டது.

7 comments:

jeevagv said...

இதுபோன்ற செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் தங்களுக்கு பாராட்டுக்கள்.
இதுபற்றி மற்றவரும் மேலும் அறிய சுட்டி இங்கு.

வின்சென்ட். said...

ஜீவா அவர்களுக்கு

உங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும், மேலும் அறிய சுட்டியை அளித்தமைக்கும் மிக்க நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

;( என்ன சொல்வது.. தன் வீட்டுக்குப்பையை பக்கத்துவீட்டுக்கு பக்கத்தில் ஒதுக்கிவைப்பவர்கள் தானே ... மனுசன் திட்டுவான் என்றூ தெரிந்தும் செய்வபவர்கள்.. விலங்குகள் என்ன திட்டவா போகுது என்று தைரியம் தான்..

Sundararajan P said...

//இத்தகவல் யாரையும் குற்றம் காண்பதற்காக எழுதப்பட்டதன்று சுற்றுச்சூழலையும், வன உயிர்களையும், ஏன் நம்மையும் காப்பதற்காக எழுதப்பட்டது. //

தவறு செய்பவர்களையும், அதை தட்டிக்கேட்கும் அதிகாரம் இருந்தும் கடமை செய்ய மறுக்கும் அதிகார வர்க்கத்தையும் குற்றம் சாட்டுவதில் தவறில்லை.

வின்சென்ட். said...

திருமதி.கயல்விழி முத்துலெட்சுமி
திரு.சுந்தரராஜன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. அதிகம் படித்தவர்கள் இதுபோன்று செய்வதுதான் கொடுமை.

kuppusamy said...

அன்புள்ள வின்செண்ட் அவர்களுக்கு,
இன்று (12-7-2008) கோவை தினமலரில்15 ம்
பக்கத்தில் மேட்டடுப்பாளையம் அருகே
தேக்கம்பட்டி கிராமத்தில் பேப்பர் அட்டைக்
கம்பனிக்கு வெளிநாட்டிலிருந்து வந்த பிளாஸ்டிக்
மருத்திவக் கழிவுப் பொருட்கள் வந்ததை
தண்ணீர் இல்லா கிணற்றில் போட்டுள்ளதற்கு
நடவடிக்கை எடுத்துள்ளார்கள். உங்கள்
கவனத்திற்கு. நன்றி.

வின்சென்ட். said...

அன்புள்ள திரு.குப்புச்சாமி அவர்களுக்கு,

உங்கள் வருகைக்கும்,முக்கிய செய்தியை ஆதாரத்துடன் மக்கள் அறிய செய்தமைக்கு மிக்க நன்றி.