
கோவை மாநகராட்சியின் முயற்சியை தொடர்ந்து RAAC (
Residents
Awareness
Association of
Coimbatore) அமைப்பு தன் பங்கிற்கு சிறந்ததொரு விழிப்புணர்வு செயலை நகரின் நான்கு முக்கிய இடங்களில் சினிமா புகழ் "டெர்மினேட்டர்" போன்று இந்த
"பிளாஸ்டினேட்டர்" பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு அசுரன் பொம்மை அமைக்கப்பட்டிருந்தது. வ.உ.சி பூங்கா மைதானத்தில் அமைந்த இந்த பிளாஸ்டினேடர்" சுமார் 30 அடி உயரம். மிக பிரமாண்டமாக இருந்தது.


. மேலும் பிளாஸ்டிக் பற்றிய சிக்கல்கள் பற்றி விளக்கமும் வைத்திருந்தாரகள். 10 பிளாஸ்டிக் பைகளுக்கு 1 துணிப்பை என மாற்று பொருளையும் வழங்கியது விழிப்புணர்வு செயலின சிறப்பம்சம்.

நாங்கள் துணிப்பைக்கு மாறிவிட்டோம். அப்ப நீங்கள்????????
10 comments:
நாங்களும் மாறிட்டோம்ன்னு தான் சொல்லனும்ன்னு ஆசை ஆனா இப்போதைக்கு நான் மாறிட்டேன்னு தான் சொல்லனும்.. இல்லாட்டி எங்க குடும்பம் மாறி இருக்குன்னு வேணா சொல்லிக்கலாம்..தில்லி யில் இதே மாதிரி முயற்சிகள் எல்லாம் நடக்குது ஆனா முழுசா மாறியாச்சுன்னு சொல்ல எத்தனை காலம் ஆகுமோ ?
thats a very good initiative & good work to create awareness among common people
மிகவும் தேவையான முயற்சி. கேட்பதற்கே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. கோவை மக்கள் இந்த விஷயத்தில் முன்னுதாரனமாக இருப்பது பெருமையாக இருக்கிறது.
பகிர்ந்தமைக்கு நன்றி
சாதித்த கோவை மக்களுக்கு என் வணக்கங்கள். படங்கள் ஒரு விநாழிகை(நிமிடம்) புல்லரிக்க வைத்தென்னவோ உண்மை.
//நாங்கள் துணிப்பைக்கு மாறிவிட்டோம். அப்ப நீங்கள்????????//
முயற்சி பண்றேங்க!
திருமதி.கயல்விழி முத்துலெட்சுமி
திரு.யாத்திரீகன்
திரு.சூர்யா
திரு.முகவை மைந்தன்
உங்கள் அனைவரின் வருகைக்கும் நன்றி.நீங்கள் அனைவரும் இதற்கு ஆதரவு மற்றும் கடைபிடிப்பது மகிழ்ச்சியாகவுள்ளது.முன்பு ஜோல்னா பை மிக வசதியாக இருந்தது.மீண்டும் அது வந்தால் நன்றாக இருக்கும். வர நாம் உழைப்போம்.
"கோவை மக்கள் துணிப்பைக்கு மாறிவிட்டோம். அப்ப நீங்கள்???????" என்ற தலைப்பில்
நீங்கள் தந்துள்ள செய்தி மற்ற நகரங்களுக்கும் விரைந்து பரவட்டும். கோவையில் செயல்பட்டுள்ள அமைப்பைப் பின்பற்றி பிற நகரங்களிலும் உள்ள அமைப்புகள் இதனை முன்னுதாரணமாகக் கொண்டு விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட வேண்டும்.
கோவை மாநகராட்சிக்கும் RAAC Residents Awareness Association of Coimbatore அமைப்புக்கும் இதை வலைப்பதிவில் கொண்டுவந்து ஊருலகுக்கு அறிவித்த உங்களுக்கும் நன்றியும் பாராட்டும்.
ஆல்பர்ட்,
அமெரிக்கா.
அருமையான பதிவு..
பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை அனைவரும் அறிந்ததே..ஆனால் தொடர்ந்து பயன்படுத்தி வருவது கவலை அளிக்கிறது.
இதை போன்ற அமைப்புகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சிறுதுளி அமைப்பு இதை ஏற்கனவே சிறப்பாக செய்து வருகிறது.
நீங்கள் தரும் செய்திக்கும் இதற்க்கு முயற்சி எடுத்துக்கொண்ட Residents Awareness Association of Coimbatore அமைப்புக்கும் என் வாழ்த்துக்கள்.
நானும் முடிந்த வரை பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து வருகிறேன்
திரு.Albert Fernando
உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.மரம் நடுதல், மழை நீர் சேகரிப்பு,இயற்கை வேளாண்மை, மாற்று எரி பொருள், மரபு சாரா எரிசக்தி பயன்பாடு,வன விலங்கு, அரிய வகை மூலிகை தாவர பாதுகாப்பு என்ற நீண்ட பட்டியல் உண்டு. இவை யாவும் அடுத்த 10-20 ஆண்டுகளில் செய்யப்படவேண்டும். இல்லையேல் வரும் சந்ததி நிறைய பாதிப்புக்களை சந்திக்க நேரிடும்.
மிகவும் அவசியமான ஒன்று!.நான் இன்னும் மாறவில்லை.ஆனால் இன்னும் 6 மாதத்தில் , நிச்சயம் மாறிவிடுவேன்.
வெளியில் செல்லும் போது துணிப்பை எடுக்க மறந்து விடுகிறேன்.இன்னும் பழகவில்லை.:((
Backpack இருக்கும் வரை பிரச்சனை இல்லை.அதையும் மறக்கும் சக்தி எனக்கு அதிகம் தான் :-0.
நல்ல விஷயம்.வாழ்த்துகள்.100% திட்டம் வெற்றி பெறட்டும்.:)
திரு.கிரி
திரு.NewBee
உங்கள் வருகைக்கும் வாழத்துக்களுக்கும் நன்றி.நீங்கள் ஆதரவும் முயற்சியும் செய்வது மகிழ்ச்சியாகவுள்ளது.
Post a Comment